செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23



[ திங்கட்கிழமை, 22 யூன் 2009, 12:21.09 PM GMT +05:30 ]

வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக இந்திய கடற்படை இன்று கூறியதையடுத்து சென்னை கடல் எல்லைக்கு அப்பால் கப்பல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கப்டன் அலி என்ற சிரியா நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர். 

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது. 

இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர். 

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் என்ன மாதிரியான சந்தேகம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சிக்கல் எழுந்து விடாமல் தடுக்கும் பொருட்டு வணங்காமண் கப்பல் சென்னை கடல் எல்லையிலிருந்து அகற்றப்பட்டு சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து வணங்கா மண் கப்பலின் சென்னை ஏஜென்ட் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இன்று கடற்படை அதிகாரிகள் பலர் கப்பலுக்குச் சென்று சோதனையிட்டனர். 

தீவிர சோதனை மற்றும் ஆய்வு நடத்திய அவர்கள் கப்பல் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் என்ன மாதிரியான சந்தேகம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. சந்தேகத்திற்கிடமானது என்றால் என்ன என்று எங்களுக்குப் புரியவில்லை.

தற்போது சென்னை துறைமுகத்திலிருந்து சற்று தொலைவில் கப்பல் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 

கப்பலை சென்னை துறைமுகத்திற்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சிப்பதா அல்லது மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கே கொண்டு செல்வதா என்பது குறித்து கப்பல் உரிமையாளருடன் நாங்களும், கப்பலின் கப்டனும் பேசிக் கொண்டுள்ளோம். 

சென்னைக்குக் கொண்டு வந்து இங்கு பொருட்களை இறக்கி பின்னர் அவற்றை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.

[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2009, 01:52.16 AM GMT +05:30 ]
கனடா கந்தசுவாமி  கோயில் மண்டபத்தில் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை (21.06.2009)  கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பின் முதல் பொதுக்கூட்டம் இடம் பெற்றது. 
இந்நிகழ்வு  மாலை 05.00 மணியளவில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அமைதி வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.

கனடாவில் வசிக்கும் அனைத்துத் தமிழ் மாணவர்களையும் மற்றும் இளையோரையும் ஒன்றாக ஒரு குடையின் கீழ்  இணைத்து தமிழீழத்  தேசியத்தை நோக்கிப்  பயணிப்பதே கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பின் பிரதான பணியாகும்.

தமிழ் இளையோர் மத்தியில்

தமிழருடைய பாரம்பரிய கலை பண்பாட்டை மேம்படுத்தல், 
விளையாட்டு துறையை மேம்படுத்தல், 
கல்வி மற்றும் கல்வி சார் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், 
மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் எழுப்புதல், 
தமிழீழ தேசியத்தின் பால் அபிவிருத்தியை துரிதப்படுத்தல், 

என ஐந்து முக்கிய துறைகளை  உள்ளடக்கி  கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பு  இயங்கி வருகிறது.

இந்த நிகழ்வில் ஒவ்வொரு துறையையும் சார்ந்த  பிரதிநிதிகள் தமது திட்டங்களையும் கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பில் தமது பணிகளையும் பற்றி உரையாற்றினார்கள்.

தமிழீழத்தில் சிங்களப்  படையெடுப்புகளால்  படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து கனடாவில் அருங்காட்சியம்    ஒன்றை நிறுவுதல்,  
தமிழீழத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய செயற்பாடுகளை   துரிதப்படுத்தல்,  

ஆகிய இரண்டு பிரதானமான செயல்  திட்டங்களை கனடிய தமிழ் இளையோர் கூட்டமைப்பு தற்போது முன் வைத்துள்ளது.

தமிழ் தேசியத்துக்காகப் போராடும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு தனது  செயற்பாட்டின் ஒரு பகுதியாக தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், அவ்வொற்றுமைக்குப் பாதகம் ஏற்படும் வகையில் செயற்படும் சில சக்திகளின் செயற்பாட்டில் தமிழ் இளையோர் வீழ்ந்து விடாமல் இருக்கவும், தமிழ் தேசியத்தின் பாதையில் பயணிக்கும் என உறுதியெடுத்துக் கொண்டது.












[ திங்கட்கிழமை, 22 யூன் 2009, 11:48.27 AM GMT +05:30 ]
இத்தாலி பலெர்மோ நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 21-06-2009 மாலை 5.00 மணியளவில் தமிழ் இளையோரினால்  கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு பியாட்சா குறோஸ் என்னுமிடத்தில் ஆரம்பமான பேரணி பிரதான வீதி வழியாக நகர்ந்து பியாட்சா பொலித்தியாமாவை  வந்தடைந்தது.

அங்கு நடைபெற்ற நிகழ்வில் இலங்கை அரசு நடாத்திய பாரிய இனப்படுகொலைகளையும், அதற்கு பின் தற்போது வதைமுகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பற்றியும் இத்தாலி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டியும், முகாம்களுக்குள் ஐ.நா உற்பட்ட தொண்டு நிறுவனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டியும் முகாம்களிலுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு இத்தாலிய அரசு உதவிகளை செய்வதோடு இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்  போன்ற கருத்துகளை முன்வைத்து இந் நிகழ்வு மழையின் மத்தியிலும் இரவு 8:00 மணி வரை நடைபெற்றது.











More than a Blog Aggregator

by மதுரா. வேல்பாரி.
இனிக்க வில்லை இன்பத் தீபாவளி
இந்திய இதயங்களில் இவ்வருடம் தீராதவலி
இமயத்தின் எல்லைகளில் ஏனோ இத்தனை உயிர்பலி
உயிர்களை இழந்தவரும் உடைமைகளைத் தொலைத்தவரும்
உறுப்புகள் அறுந்தவரும் உயிருடன் புதைந்தவரும்
நிலமகள் நடுக்கத்தால் நித்திரையில் கூட மரண ஒலி
பாக் எல்லைகளும் பயங்கரவாதப் பள்ளிகளும்
பாவமறியாத பச்சிளங்கிள்ளைகளும்
பகுத்துண்ட பகுதியிலே காலன் தொகுத்துண்டு போனதுவோ
இத்தனை இன்னல்களிலும் இருகரம் நீட்டிய
இந்திய நெஞ்சங்களை இடைநிறுத்தி
இறுமாப்பு காட்டியது பயங்கரவாதத்தை மட்டுமே
பாடமாகக் கொண்ட பாகித்தானியக் களை
குலுங்கி நிறுத்திய குங்கும நெற்றியில்
கூட்டம் நிறைந்திட்ட தலைநகர் டெல்லியில்
குண்டுகள் வெடித்ததால் குழப்பங்கள் நிறைந்ததால்
சாய்ந்தன சில உயிர்கள்குருதிச் சகதியில்
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட
வாழ்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
பிரிவினை வாதத்தைப் பிற்போக்கில் தள்ளிவிடு
அன்பாக வாழ்ந்திடுவோம் இனியாவது தோள்கோடு
இனி நேரவேண்டாம் இதுபோன்றதொரு ப(லி)ழி
அப்போது ஏற்றிடுவோம் தீபமெனும் திவ்ய ஓளி.
தொழில் வரி செலுத்துவதில் புதிய திருத்தம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.இதற்கான சட்ட மசாதாவை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதுகுறித்த விவரம்:ஒரு தொழிலை மாநகராட்சி, நகராட்சிக்குள் ஓரிடத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலோ அதே பெயரில் செய்து வருகின்றனர்.அப்படிப்பட்ட நபர்களின் வருமானமானது தொழில் வரியை விதிக்கும் நோக்கத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட

jepeyar2

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளரும், பு.ஜ.தொ.ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிசியன்கள் சங்கத்தின் (சத்யபாமா கல்லூரி) செயலாளருமான தோழர் வெற்றிவேல் செழியன் சற்று முன்னர் நம்மை தொடர்பு கொண்டு இந்த செய்தியைக் கூறினார்.

ஜேப்பியார் கல்லூரியில் நிர்வாகத்தின் திமிரினால் விவேக் என்ற மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தை விளக்கி வினவில் ஒரு கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். அதன் இணைப்பாக ஜேப்பியார் கல்லூரிகளில் எமது தொழிற்சங்கம் கட்டிய அனுபவத்தை வாசகருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டோம். இந்த கட்டுரை தோழர் துரை சண்முகம் தொழிலாளர்களை நேர்காணல் செய்து தொகுத்த கட்டுரையாகும்.

வழக்கமாக வினவில் வரும் கட்டுரைகள் பல்வேறு இணையக்குழுமங்களில் மறு பிரசுரம் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் சில ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். அப்படி இந்தக் கட்டுரையும் யாகூ இணையக் குழுமம் ஒன்றில் இடம் பெற்று அது ஜேப்பியார் மற்றும் அவரது அடியாள் நிர்வாகத்தரப்பினரது கவனத்திற்கு போயிருக்கிறது. கூடுதலாக அவரது ரவுடி கேலிச்சித்திரத்தையும் ஜேப்பியார் பார்த்தாரா என்பது தெரியாது.

இப்படி இணையத்தின் வலிமையான வலைப்பின்னலால் தனது பெயர் நாறடிக்கப்படுவதைக் கண்டு சினமுற்ற ஜேப்பியார் நிர்வாகம் புதிய கலாச்சாரத்திற்கு பேட்டி அளித்த ஐந்து தொழிலாளர்கள் தோழர்கள் சங்கரன், உத்திராபதி, பரமன், ஜாகிர் உசேன் (ஓட்டுநர்கள்), சார்லஸ் (கிளினர்) முதலியோரை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது. சுயநிதிக்கல்லூரிகளில் கல்லா நிரம்பி வழியும் நேரத்தில் ஜேப்பியார் கல்லூரிகளில் ரெய்டு, கூடவே வினவின் உபயத்தில் இலவச பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து ஜேப்பியாரை கள் குடித்த குரங்காக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே இதே கல்லூரியில் தொழிற்சங்கம் கட்டினார் என்ற ‘குற்றத்திற்காக’ தோழர் வெற்றிவேல் செழியன் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அன்று தொடங்கிய போராட்டத்தின் நீண்ட வழியில் தற்போது மேலும் ஐந்து தொழிலாளிகள் பணிநீக்கம். ஆனால் இந்த திமிரான நடவடிக்கையால் அந்த தொழிலாளிகளும், தொழிற்சங்கமும் சோர்ந்து போய்விடவில்லை. இந்த வேலைநீக்கத்தால் அரண்டுபோய்விடவும் இல்லை. அவர்கள் இதை இன்னும் பரந்துபட்ட தொழிலாளிகள் மற்றும் மாணவர்களிடம் இந்த சர்வாதிகார நடவடிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள். கூடவே சட்டரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

வினவின் வீச்சு காரணமாக ஐந்து தொழிலாளிகள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டது முதலில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த தொழிலாளிகளோ தங்கள் போராட்டத்திக்கு இந்த நடவடிக்கை மேலும் வலு சேர்க்கும் என உறுதியாக போராடுகிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாத இந்த தொழிலாளிகளின் போர்க்குணத்திற்கு வினவு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கீழே ஜேப்பியார் நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய உத்திரவை இணைத்துள்ளோம்.

பெறுநர்: திரு சங்கரன் ஓட்டுநர்

பொருள்: தாங்கள் புரிந்த தீயநடத்தைக்காக இன்று முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.

ஐயா,

தாங்கள் ஜேப்பியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறீர்கள். தாங்கள் நிர்வாகத்தைப் பற்றியும் தலைவர் பற்றியும் அவதூறாகவும், விசமத்தனமாகவும், மாசு கற்பிக்கும் கெட்டநோக்கத்துடன் திரு. துரை சண்முகம் என்பவருக்கு பேட்டியளித்து அந்த தவறான செய்திகள் சத்தியபாமா தொழிற்சங்கம் என்ற தலைப்பில் யாகு மெயில் இந்தியா என்ற இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது.

மேற்படி பேட்டியில் தாங்கள் ” என்னை ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சேன்னு? நான் கேட்டேன், நீ இல்லாம என்ன சாதிச்ச? அவன் சொன்னான், எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருதுன்னான். அதுக்க நான் உனக்கு மரியாதை உண்டா? போடா நாங்கள் யூனியன் அமைச்சு போராடியதால்தான் உன்னை தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது. அதுகூட நாங்கள் வாங்கித் தந்த காசுதாண்டா என்று சொன்னேன. மூஞ்சியத் திருப்பிகிட்டு பேசமுடியாம போயிட்டான்” என்ற கூறியுள்ளீர்.

மேற்படி தங்களது செயலால் நிர்வாகம், நிர்வாகத் தலைவரின் நற்பெயருக்கு பொது மக்களிடம் களங்கம் ஏற்படுத்தியதோடு அல்லாமல் சக தொழிலளாகளிடையே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வைக்கும் செயலாகும். தங்களது இந்த செயல் 1946ஆம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் (நிலை ஆணைகள்) சட்டம் மற்றும் மாதிரி நிலை ஆணைகள் நிதி 16(y)படி தீய நடத்தையாகும். மேற்படி தீயநடத்தை விதி 17படி தண்டனைக்குரிய செயலாகும்.

எனவே தங்கள் மீது மேற்படி தீய நடத்தைக்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று தினங்களில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தவறினால் இதில் தங்களுக்கு கூறிக்கொள்ள ஏதுமில்லையென கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி ஜேப்பியாரின் அடாவடித்தனத்தை எதிர்த்து தன்மானத்திற்காக போராடும் அந்த தொழிலாளர்களின் நடத்தை தீய நடத்தையாம். எனில் இந்த ‘தீய’ நடத்தையை தொழிலாளர்கள் முன்னிலும் அதிகமாய் வீரியமாய் செய்வார்கள். ஜேப்பியாரின் ரவுடி ஆட்சிக்கு முடிவுரை கட்டப்போகும் இந்த போராட்டத்தில் மாணவர்களும் இணைந்தால் அது தமிழகத்தில் சுயநிதிக்கல்லூரிகளின் கொட்டத்தை வீழ்த்தும் போராட்டத்தின் முன்னுரையாகவும் இருக்கும்.

ஜேப்பியாருக்கு சீற்றத்தை ஏற்படுத்திய அந்தக் கட்டுரை

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! 'கல்வி வள்ளலின்' ரவுடித்தனம் !
vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

கருத்துகள் இல்லை: