செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

விடுமுறையில் வீடுசெல்வதால் ஐந்தறைப்பெட்டி தற்காலிகமாக மூடப்படுகிறது.



ஊரிலுள்ள இணைய வசதியினைப்பொறுத்து விரைவில் மீண்டும் திறக்கப்படும்.


சென்ற வாரத்தில் திரு. லதானந்த் அவர்கள் ட்ரக்கிங் பற்றி ஒரு பதிவு இட்டு இருந்தார்.. அதில் வழக்கம் போல் அவர் ஸ்பெஷல் கிண்டல் கேலிகளும் இருந்தது. நான்கு பேர் பேசி கொள்வது போன்ற அந்த பதவில் ஒரு விஷயம் எனக்கு சரியாக படவில்லை. ஆகையால் நான் என் கண்டனத்தை அவரின் பதிவில் பின்னூட்டம் இட்டு இருந்தேன். அவர் அதை வெளியிட மறுத்து விட்டார். ஒரு நாலு வரி பின்னோட்டத்தை மறுத்ததின் விளைவு அது பத்து வரி பதிவாக வெளியிட வேண்டி உள்ளது.

இது அவர் பதிவின் இறுதி வாசகங்கள் :

"அதாவது மெண்டலுன்ரியா? இன்னா ஸாரே வுட்டா தோஸ்த்த சத்தாய்ச்சினே போறே! ம்மால இதே கண்டி மண்ணடியா இர்ந்துச்சுனுனு வெய்யேன். நாசம் பண்ணிடுவாங்க பசங்க."

"பதிவுலகத்தில் ஃபேமஸா இருக்கிற ருத்ரன் கிட்டயே சிகிச்சை எடுத்துக்கலாமே? ங்குறாரு மாதப்பன்.

"ஆரு குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு தாடி உட்டுகிட்டு இருப்பாரே அவருதானே? அவரப் பாத்தாலே லேசா.."

"ஓய்! நிறுத்தும்." என சத்தம் போடறாரு தமிழய்யா.

நான் லேசான கொரல்ல சொல்லுறேன். ஓங்கு தாங்கா உண்ணொரு டாக்டரு அம்மிணி இருக்காங்களே அவிங்ககிட்ட வேண்ணா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன்.

"இன்னாதுபா ரீசனு? அந்த அம்மிணியாண்ட வைத்யம் பாக்குறேன்றே?"

"வேறொண்ணுமில்லீங்க மாரி. அந்த டாகடர் அம்மிணிதான் good touch bad touch பத்தியெல்லாம் ஏற்கனவே மீட்டிங்குலெல்லாம் சொல்லித் தந்திருக்காங்களே! அதான்!"

நான் அவருக்கு சொன்ன பின்னூட்டம்:

உங்கள் பதிவு சுவாரசியமாக இருக்க மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள், அதிலும் ஒரு சக பதிவரை, ஒரு பெண்ணை, ஒரு மருத்துவரை இப்படி விமர்சனம் செய்வதை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்போது மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் நான் போராட்டமே நடத்தலாம் போல உள்ளதே. ....

சென்ற வாரத்தில் திரு. லதானந்த் அவர்கள் ட்ரக்கிங் பற்றி ஒரு பதிவு இட்டு இருந்தார்.. அதில் வழக்கம் போல் அவர் ஸ்பெஷல் கிண்டல் கேலிகளும் இருந்தது. நான்கு பேர் பேசி கொள்வது போன்ற அந்த பதவில் ஒரு விஷயம் எனக்கு சரியாக படவில்லை. ஆகையால் நான் என் கண்டனத்தை அவரின் பதிவில் பின்னூட்டம் இட்டு இருந்தேன். அவர் அதை வெளியிட மறுத்து விட்டார். ஒரு நாலு வரி பின்னோட்டத்தை மறுத்ததின் விளைவு அது பத்து வரி பதிவாக வெளியிட வேண்டி உள்ளது.

இது அவர் பதிவின் இறுதி வாசகங்கள் :

"அதாவது மெண்டலுன்ரியா? இன்னா ஸாரே வுட்டா தோஸ்த்த சத்தாய்ச்சினே போறே! ம்மால இதே கண்டி மண்ணடியா இர்ந்துச்சுனுனு வெய்யேன். நாசம் பண்ணிடுவாங்க பசங்க."

"பதிவுலகத்தில் ஃபேமஸா இருக்கிற ருத்ரன் கிட்டயே சிகிச்சை எடுத்துக்கலாமே? ங்குறாரு மாதப்பன்.

"ஆரு குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு தாடி உட்டுகிட்டு இருப்பாரே அவருதானே? அவரப் பாத்தாலே லேசா.."

"ஓய்! நிறுத்தும்." என சத்தம் போடறாரு தமிழய்யா.

நான் லேசான கொரல்ல சொல்லுறேன். ஓங்கு தாங்கா உண்ணொரு டாக்டரு அம்மிணி இருக்காங்களே அவிங்ககிட்ட வேண்ணா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன்.

"இன்னாதுபா ரீசனு? அந்த அம்மிணியாண்ட வைத்யம் பாக்குறேன்றே?"

"வேறொண்ணுமில்லீங்க மாரி. அந்த டாகடர் அம்மிணிதான் good touch bad touch பத்தியெல்லாம் ஏற்கனவே மீட்டிங்குலெல்லாம் சொல்லித் தந்திருக்காங்களே! அதான்!"

நான் அவருக்கு சொன்ன பின்னூட்டம்:

உங்கள் பதிவு சுவாரசியமாக இருக்க மற்றவர்களை விமர்சனம் செய்யாதீர்கள், அதிலும் ஒரு சக பதிவரை, ஒரு பெண்ணை, ஒரு மருத்துவரை இப்படி விமர்சனம் செய்வதை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்போது மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால் நான் போராட்டமே நடத்தலாம் போல உள்ளதே. ....

எங்க போகுது நம் பயணம்?? நேற்று மட்டும் கோவையில் மூன்று விபத்துகள்.. அதை எப்படி விபத்துன்னு சொல்லறது. கொழுப்புன்னு சொல்லலாம்.

1. எல்.கே.ஜி படிக்கும் சங்கமித்ரா என்னும் சின்ன குழந்தை காலையில் ஸ்கூலுக்கு கிளம்பும் போது என்ன நினைத்து போயிருக்கும், மிஸ் கிட்ட அழகா ரைம்ஸ் சொல்லணும், சின்ன தோழிகளிடம் சாக்லேட் பகிரணும், மாலை ஸ்கூல் விடும் போது அம்மாக்காக நெறைய கதை சொல்லணும். இதெல்லாம் ஒரு ட்ரைவரின் நொடிபொழுது ஆசைக்காக பஸ் சக்கரத்துக்கு அடியில் நசுங்கியதே... போங்கடா நீங்களும் உங்க போக்குவரத்து விதிகளும், பெத்தவளுக்கு தானே தெரியும் அந்த வேதனை...

2. மகளுக்கு மாப்பிளை பார்க்க கிளம்பினவர்களுக்கு எமன் மணல் லாரியிலும் பஸ்சிலும் வருவது தெரிய வில்லை. பல்லடம் ரோட்டில் 12 பேர் பலி.

3. இரவு நேர பேருந்தில் சிக்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் அதே இடத்தில் பலி...

போதுமடா சாமி.. கோவையில் இருந்து இரண்டு நிமிடத்துக்கு ஒரு பஸ் திருப்பூருக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் ஈரோடுக்கு, நான் மூன்று வருடங்களுக்கு முன் தினமும் பல்லடம் வழியில் திருப்பூர் போவேன், இதுவரை ஆறு முறை விபத்தில் சிக்கி மருத்துவ மனைக்கு போயிருக்கேன். ஒரு நாள் தினமும் போகும் பஸ் தவறவிட்டு அடுத்த பஸ்சில் போகும் போது நான் போக நினைத்த பஸ் சூலூர் என்னும் இடத்தில் ஒரு குழியில் தலை கீழாக நின்று கொண்டிருந்தது. வழக்கமாக நான் ட்ரைவர் சீட்டுக்கு இடது கை பகுதியில் இருக்கும் ஒற்றை இருக்கையில் அமர்வதே வழக்கம். அன்று மூன்று பேர் அதே இடத்தில் பலி. அன்னைக்கே ரயில் பாஸ் வாங்கிட்டேன்.

இதற்க்கு ஒரு தீர்வும் இருக்கு, யார் சொல்லறது. டைம் கீப் பண்றதுக்காக ட்ரைவர்கள் மிக வேகமாக வண்டி ஓட்டுவதே இதற்க்கு காரணம்.

தினமும் கோவையில் இருந்து வேலை, கல்வி மற்ற விஷயங்களுக்க வந்து போவோர் அதிகம். காலையில் ஏழு மணிக்கு ஒரு பயணிகள் ரயில், 8.30 க்கு ஒரு பயணிகள் ரயில் போகிறது. மற்ற நேரத்தில் கோவை - ஈரோடு பாசஞ்சர் வண்டி சும்மாதான் ஈரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதை ஒரு நான்கு அல்லது ஐந்து முறை இயக்கினாலே போதும், இந்த விபத்துகள் பெருமளவு குறையும்...

மனது ரொம்ப கஷ்டமா இருக்கிறது....


More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
...இடுப்பு!! இ ஃபார் இந்தநாள் இனியநாள் என்று எழுத நினைத்திருந்தேன். Golda அக்கா எனக்கு இ ஃபார் இடுப்பு எனற தலைப்பை பரிந்துரைத்திருந்தார்கள். நன்றி அக்கா! இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம்! (பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!!)

அதை விடுங்க, நான் சொல்ல வந்ததைவிட்டு எங்கேயோ போகிறேன்! எங்க பள்ளிக்கூடம், இருபாலருக்குமானது. அதுவுமில்லாமல் எங்கள் ஊர் ஒரு சிற்றூர்.. எட்டாவது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருப்போம். நமது வகுப்பிலிருக்கும் ஒரு சில பெண்களிடம் மட்டும் தனியாக ஆசிரியர் பேசுவார். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் குறிப்பிட்ட பெண்
தாவணியில் வருவார். உடனே எங்களுக்குத் தெரிந்து விடும்...சரி, நம்மிடம் பேசினாலே டேஞ்சர் என்று! பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது! அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள்! அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்...!! பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது!நானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது! பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே!

அன்று காலை பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். கட்டவும் தெரியாது, தெரியாதென்பதைவிட பிடிக்காதென்பதே பொருத்தமாக இருக்கும். இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து வர அழுகை எட்டிபார்த்தது. பெரிம்மாதான் எனக்குக் கட்டி விட்டார்கள். அதுவும் தாவணி கட்டும்போது, பாவாடையில் ஒரு V ஷேப் வரவேண்டும். ஆனால் பெரிம்மா கட்டிவிட்டதோ அந்தக்காலத்து ஸ்டைல்!! அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங்! பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன்! அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது! பின்னர் ஒருமாதத்தில் பழகிவிட்டது..எங்களுக்குள் தனிப்பட்ட கிண்டல்கள் தவிர!

ஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள்! நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்! தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான்! பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே!!

ஆனந்த விகடனின்(லேட்டஸ்ட் இஷ்யூ) கடைசி பக்கங்களில் வழக்கறிஞர் அருள்மொழி மிக அருமையாக சொல்லியிருந்தார் - இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே! பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று!! அவரவர் உடை அவரவர் உரிமை!
புகழ்பெற்ற குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் இயக்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் அமைந்துள்ள புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியக் கருத்தரங்கக் கூடத்தில் 28.06.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் ந.கோவிந்தசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அரசு வழக்கறிஞர் தி,முருகேசன் அவர்கள் தொடக்க உரையாற்றுகிறார்.

குறும்படத்தை வெளியிட்டு நடுவண் பாராளுமன்ற விவகாரம் மற்றும் கலைத்துறை அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்கள் உரையாற்றுகிறார்.

புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்களும் பிற அமைச்சர்களும்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

விழா நிறைவில் குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.

தொடர்புக்கு
94432 60242
94435 00013

கருத்துகள் இல்லை: