செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَى كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَجَعَلُواْ لِلّهِ شُرَكَاء قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لاَ يَعْلَمُ فِي الأَرْضِ أَم بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُواْ مَكْرُهُمْ وَصُدُّواْ عَنِ السَّبِيلِ وَمَن يُضْلِلِ اللّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ

ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்; "அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?" என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை. (அல்குர்ஆன்: 13:33)
வெள்ளி கிழமை இரவு வீட்டை நெருங்குகிறேன் வண்டி சத்தம் கேட்டு அப்பா வந்தாச்சு! அப்பா வந்தாச்சுன்னு! கேட்டு மேல ஏறி நின்னு சத்தம் போடும் பெரிய பொண்ண காணும்!! சின்னவங்க மட்டும் அப்பா! ன்னு ஓடிவந்து காலை ட்டி புடிச்சுகிடாங்க! அம்மு எங்க? அதுக்குள்ளே துங்கிடுச்சா ன்னு தங்கமணிகிட்ட கேட்டா? பக்கத்து வீட்டு ஜனனி அம்முகூட ''காய்'' விட்டுடுச்சாம் அழுதுகிட்டு படுத்து இருக்கு சொல்ல! அவ்ளோதானா! ன்னு சொல்லி
வெள்ளி கிழமை இரவு வீட்டை நெருங்குகிறேன் வண்டி சத்தம் கேட்டு அப்பா வந்தாச்சு! அப்பா வந்தாச்சுன்னு! கேட்டு மேல ஏறி நின்னு சத்தம் போடும் பெரிய பொண்ண காணும்!! சின்னவங்க மட்டும் அப்பா! ன்னு ஓடிவந்து காலை ட்டி புடிச்சுகிடாங்க! அம்மு எங்க? அதுக்குள்ளே துங்கிடுச்சா ன்னு தங்கமணிகிட்ட கேட்டா? பக்கத்து வீட்டு ஜனனி அம்முகூட ''காய்'' விட்டுடுச்சாம் அழுதுகிட்டு படுத்து இருக்கு சொல்ல! அவ்ளோதானா! ன்னு சொல்லி


More than a Blog Aggregator

by திகழ்மிளிர்
சாப்பிடச் சொல்கிறேன்
நான்...

ஊட்டச் சொல்கிறாய்
நீ !



இன்னும் என்ன குழந்தையா ?
வயதிற்கேற்ற வளர்ச்சி வேண்டாமா ...
என்னிலிருந்து
வார்த்தைப் பொறிகள்
கோபச் சூட்டோடு !

உணவில்
உப்புத் தண்ணீர்
ஊற்றுகிறது ...
உன் கோபம் வழிந்து !




தொலைபேசியின் அழைப்பில்
கண் , நாசி துடைத்து ...
எடுத்து " அலோ " சொல்லி
காது கொடுக்கிறாய் ...

புன்னகை கொஞ்சும்
குரலில் ஒட்டிக் கொண்டு
மறுமொழிகிறாய் ...
" கொஞ்சம் சளி " என்று !

நீ வளர்ந்துவிட்டாய்
நான் தான் ...



இதோ ஊட்டிக் கொண்டுக்கிறேன்
பாசத்தையும் சேர்த்து
என் பதின்ம வயதுக்
குழந்தைக்கு !


( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் மலர்விழி இளங்கோவன்
அவர்கள் எழுதிய கவிதை )


More than a Blog Aggregator

by திகழ்மிளிர்
சாப்பிடச் சொல்கிறேன்
நான்...

ஊட்டச் சொல்கிறாய்
நீ !



இன்னும் என்ன குழந்தையா ?
வயதிற்கேற்ற வளர்ச்சி வேண்டாமா ...
என்னிலிருந்து
வார்த்தைப் பொறிகள்
கோபச் சூட்டோடு !

உணவில்
உப்புத் தண்ணீர்
ஊற்றுகிறது ...
உன் கோபம் வழிந்து !




தொலைபேசியின் அழைப்பில்
கண் , நாசி துடைத்து ...
எடுத்து " அலோ " சொல்லி
காது கொடுக்கிறாய் ...

புன்னகை கொஞ்சும்
குரலில் ஒட்டிக் கொண்டு
மறுமொழிகிறாய் ...
" கொஞ்சம் சளி " என்று !

நீ வளர்ந்துவிட்டாய்
நான் தான் ...



இதோ ஊட்டிக் கொண்டுக்கிறேன்
பாசத்தையும் சேர்த்து
என் பதின்ம வயதுக்
குழந்தைக்கு !


( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் மலர்விழி இளங்கோவன்
அவர்கள் எழுதிய கவிதை )

   

***********************************************************************   

   வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதம் இது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

        சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்று தந்தவள் நீ. விழுந்திட போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

         மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டப்பட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

        சந்திர சூரியன்களை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

         கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

        உன்னை பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

      உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யானத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னை காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

       ஆரம்ப காலங்களில் உன்னைக் கானும் பொதெல்லாம் என் காதல்,  புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டி பார்க்கும்.

      உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களை பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

       என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

    அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள் (எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதை படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

   ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கிப் பிடித்து நடுவில் ஓட்டை பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

        நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்து போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

   இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

     அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோன்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

     சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்த்தவள் நீ.பாரமல்ல.

        சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

    அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது

கருத்துகள் இல்லை: