செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلاً مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلاَّ بِإِذْنِ اللّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. (அல்குர்ஆன்: 13:38)
பாக்களைப் பருக , படிக்க
1.முதல் ; 2.இரண்டாம் ; 3. மூன்றாம்





அடக்கும் உபாயம் அறிந்தேயான் வந்தேன் !
மடக்குற வள்ளி மணாளா ! - இடபால்
இருக்கின்ற தேவானை என்கின்ற காட்சி,
தருகின்ற இன்பம் தனி !




தனித்தெய்வம் நீயென்பேன் ! - தண்பரங் குன்றம்
இனித்த வகையறிவேன் எந்தாய் ! - குனித்த
புருவமும் செவ்வாய்க் குமிழ்ச்சிரிப்பும் கொண்ட
முருகா வருகவென் முன்.




முன்வரத் தீவினைதான் மூண்டெழு மாமுருகா ?
உன்வேலைக் கண்டவுடன் ஓடுமே ! - என்னிறைவா !
ஐயன் அருணகிரி ஆவேனோ என்பாயா ?
பையப் பெறுவேன் பணிந்து !



பணிந்து பணிந்து பகலிர வின்றித்
தணியா மனத்தைத் தருவேன் ! - அணிமா
மயிலும் அயில்வேல் படையும் உடையாய் !
உயிரில் கலந்த உணர்வு !



உணர்வில் கலந்தாய் ! உயிரில் கலந்தாய் !
கணபதியின் தம்பியே கந்தா ! - மணவழகா !
ஞானக் குழந்தையே ! நான்மறை நாயகனே !
ஊனக் குழந்தை உனக்கு !



உனக்கென்றும் நானடிமை ! உன்னைத்தான் விட்டால்
எனக்கென்றிங் காருந்தான் இல்லை ! - மனம்நிறைந்தாய் !
எங்கள் குலவிளக்கே ! எந்தை சிவபாலா !
தங்க மகனேநீ தாங்கு !



தாங்கும் தனிவேலும் தக்ககொடிச் சேவலுமே,
ஏங்கும் துயர்போக்கும் ஏதுக்கள் ! - ஓங்கு
பழமுதிர் சோலை மலைக்கிழவா ! நீதான்
அழவைக்க லாமோ அறி !




இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.
அராபிக் மெஹந்தியின் ஸ்பெஷலே சில இடங்களில் திக்காகவும், சில இடங்களில் மெலிதாகவும் போடுவது தான்।
இந்த மெஹந்தியினை கையில் மணிக்கட்டு பகுதியிருந்து ஆரபித்து ஆள்காட்டி விரல் அல்லது ஏதாவது விரலில் முடிக்கவும்.


போட்டு பழக சில சிம்பிளான அராபிக் மெஹந்தி டிசைன்கள்...



நண்பர்களே எத்தனையோ உலாவிகள் வந்த போதும் நாம் நெருப்பு நரி உலாவியை விட்டு வந்ததில்லை. அதிலிருக்கும் சிறப்புகள் அப்படி.  அதுபோலவே இந்த உலாவி நெருப்பு நரியின் ஆடு - ஆன்களை  ஆதரிக்கிறது. பாப் அப் பிளாக்கர், டவுண்லோடு மேனஜர், புகைப்படங்களை நேரடியாக போல்டரில் சேமிக்கும் வசதி, செய்தியோடை படிக்கும் வசதி ஆகியவை இந்த உலாவியில் சில சிறப்பம்சங்கள்.  அத்துடன் கீழே இந்த உலாவி ஆதரிக்கும் நெருப்பு நரி ஆடு - ஆன்கள் சில கீழே கொடுத்துள்ளேன்.



ஆதரிக்கும் ஆடு - ஆன்கள் அணிவரிசை



இவ்வளவு செய்யும் இந்த உலாவியின் பெயர் Orca Browser

ஆர்கா உலாவி தரவிறக்கச் சுட்டி

பிங் தேடுபொறியில் தினம் ஒரு அற்புதமான உயர்தர புகைப்படம் மாற்றி கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் தானாக தரவிறக்க இந்த மென்பொருள் உதவி புரியும்.  சுட்டி

 
நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் உங்களுக்கு இந்த ஆடு - ஆன் மிகவும் உபயோகமாக இருக்கும்.  உங்கள் நெருப்பு நரி உலாவியில் ஒரமாக Status Barல் அமர்ந்து கொண்டு முப்பது விநாடி இடைவெளியில் உங்களுக்கு  அப்டேட் செய்யும் ஆடு - ஆன் தரவிறக்க சுட்டி 

 
 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிசில் ஒட்டும் மேலே விளம்பரத்தையும் கிளிக் செய்யுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

ஒரேஒரு கேள்வி !
இருவேறு பதில்கள் ?

குழம்பிப்போய் நிற்கிறாள் குழந்தை
குழப்பிவிட்டவர்கள் பெற்றவர்கள்

'மனிதப் பிறப்பின் ரகசியம்' என்னவென்று
மனப்பாடம் செய்யவேண்டும் இன்று

அம்மாவிடம்
ஆசையாய் கேட்கிறாள்

"ஆண்டவன் படைத்தான்
ஆதமையும் ஏவாளையும்
மண்ணில் அவர்கள் உருவாக்கினர்
மனிதர்கள் நம் அனைவரையும்"


அப்பாவிடமும்
ஆர்வமாய்க் கேட்கிறாள்

"குரங்கிலிருந்து பிறந்தான்
கூடிக்காடுகளில் வாழ்ந்தான்
நாகரீகம் கற்றான்
நாட்டுக்குள் வந்தான்
தன்நலம் கற்றான்
தனித்தனியே வாழ்கிறான்"


தெளிவில்லாத பதில்களால்
தலை சுற்றுகிறது அவளுக்கு

அம்மாவை நாடுகிறாள் மீண்டும்
அப்பாவின் கூற்றைக் கூறுகிறாள்

ஒருநொடி தாமதிக்கவில்லை அம்மா
இரண்டடியில் தீர்வைச் சொல்லுகிறார்

"அவரும் சரியாய்தான் சொல்லியிருக்கிறார்-ஆனால்
அவரது 'குடும்பம்' பற்றி சொல்லியிருக்கிறார் !"


சந்தேகம் நீங்கி துள்ளியபடி - குழந்தை
சந்தோசமாய் விரைகிறாள் பள்ளிநாடி


நன்றி :கரு / கு.த.ந

ஒரேஒரு கேள்வி !
இருவேறு பதில்கள் ?

குழம்பிப்போய் நிற்கிறாள் குழந்தை
குழப்பிவிட்டவர்கள் பெற்றவர்கள்

'மனிதப் பிறப்பின் ரகசியம்' என்னவென்று
மனப்பாடம் செய்யவேண்டும் இன்று

அம்மாவிடம்
ஆசையாய் கேட்கிறாள்

"ஆண்டவன் படைத்தான்
ஆதமையும் ஏவாளையும்
மண்ணில் அவர்கள் உருவாக்கினர்
மனிதர்கள் நம் அனைவரையும்"


அப்பாவிடமும்
ஆர்வமாய்க் கேட்கிறாள்

"குரங்கிலிருந்து பிறந்தான்
கூடிக்காடுகளில் வாழ்ந்தான்
நாகரீகம் கற்றான்
நாட்டுக்குள் வந்தான்
தன்நலம் கற்றான்
தனித்தனியே வாழ்கிறான்"


தெளிவில்லாத பதில்களால்
தலை சுற்றுகிறது அவளுக்கு

அம்மாவை நாடுகிறாள் மீண்டும்
அப்பாவின் கூற்றைக் கூறுகிறாள்

ஒருநொடி தாமதிக்கவில்லை அம்மா
இரண்டடியில் தீர்வைச் சொல்லுகிறார்

"அவரும் சரியாய்தான் சொல்லியிருக்கிறார்-ஆனால்
அவரது 'குடும்பம்' பற்றி சொல்லியிருக்கிறார் !"


சந்தேகம் நீங்கி துள்ளியபடி - குழந்தை
சந்தோசமாய் விரைகிறாள் பள்ளிநாடி


நன்றி :கரு / கு.த.ந

கருத்துகள் இல்லை: