("இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்). (அல்குர்ஆன்: 14:7)

மரத்தின் வயது 4,768!
இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர் 969 வருடங்கள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக வருடங்கள் வாழும் எதுவும், யாரும் மெதுசேலா பெயரில் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று) என்றழைக்கப்படும் இது பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 வருடங்கள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவைதான் உலகில் வயதான மரங்கள் எனப்படுகிறது.
4 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட மரங்கள் என்றால் அந்தளவுக்கு வளர்ந்திருக்க வேண்டுமே என்ற சந்தேகம் வருவது இயல்புதான். இங்கு நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை இம்மரங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைத்துள்ளன. அதே மண்ணும், நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையும் தான் இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் நின்றுகொண்டிருக்க காரணமானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக