
"வேற நியூசே கிடைக்கலியா? போரடிக்குது" என்று நீங்கள் அலுத்துக் கொண்டாலும் சரி. இன்றைய நிலவரத்தை சொல்லாமல் விட்டால் விஜய் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதால் இந்த தகவல். வேறொன்றுமில்லை, விஜயின் 50 வது படத்தை பற்றிய தகவல்தான்!
"வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகுதான் தனது 50 வது படத்தை பற்றி சொல்ல முடியும்" என்று விஜய் அறிவித்தாலும், டைரக்டரை தேர்வு செய்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருக்கிறது அவரது மூளை. பேரரசு, ஜெயம் ராஜா, ஹரியை அடுத்து பூபதி பாண்டியனோடு முடிந்த இந்த தேடுதல் வேட்டை, திருப்தியுறாமல் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.
சிவாஜி கலெக்ஷனையே சில இடங்களில் மிஞ்சிவிட்டது அயன். கனா கண்டேனுக்கு பிறகு தனது இரண்டாவது படத்திலேயே டாப் டைரக்டர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார் அயன் பட இயக்குனர் கே.வி.ஆனந்த். சில முன்னணி நிறுவனங்கள் "பிடிங்க அட்வான்சை" என்று ஆனந்தை துரத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு போய் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ஆனந்த், அடுத்த படத்திற்கு அவசரமே படவில்லை. இந்த நிலையில்தான் "நம்ம படத்தை இயக்கலாமே" என்று விஜயே தூது அனுப்பியதாக தகவல்.
"அயன் மாதிரி ஸ்டைலிஷா ஒரு படம் பண்ணுற எண்ணம் இருக்கு. கதையிலே தலையிடாமல் இருந்தால் நாம் சேர்ந்து வொர்க் பண்ணலாம்" என்று ஆனந்தும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறாராம். இந்த ரயிலிலாவது விஜய் ஏறுவாரா? அல்லது அடுத்த ரயிலுக்கு காத்திருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

இந்நேரம் துபாயில் இருப்பார் விஜய டி.ராஜேந்தர். கவலையை மறப்பதற்கான ஜாலி ட்ரிப்பாம் இது. பிள்ளைய பெத்தா கண்ணீரு என்பது அவருக்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கண்ணீரு பிள்ளை கொடுத்த குடைச்சலால் அல்ல. பிள்ளைய நினைச்சு வந்த கண்ணீரு!
அஜீத்தை வைத்து பல்வேறு படங்களை எடுத்தவரும், அவரது பினாமி என்று வெளியுலகில் கிசுகிசுக்கப்பட்டவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு பட தயாரிப்பில் இறங்கினார். சிம்புவையும், குறளரசைனையும் அந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர், டிஆரை அணுகி விஷயத்தை சொல்ல, ஆஹா பண்ணலாமேன்னாரு டிஆரும்!
இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடிப்பதாக முடிவானது. இன்னொரு முக்கிய கேரக்டரில் குறள் அறிமுகமாவதாக ஏற்பாடு. சிம்பு இருந்தால், அந்த இடத்தில் நிழலாக யுவனும் இருப்பாரே? இசை யுவன் என்றும் முடிவானது. பைசா அட்வான்ஸ் இல்லாமல் பிராஜக்ட் தயாரானது. ஆனால், திடீரென்று படத்தையே டிராப் செய்துவிட்டாராம் சக்கரை.
ரொம்ப அக்கறையா ஆரம்பிச்ச பிராஜக்ட் இப்படி சக்கரையால் கெட்டதே என்ற வருத்தத்தில் தாட், பூட் என்று குதித்த டிஆர், கையிலே பணம் இல்லேன்னா சும்மா இருந்திருக்கலாமே, எதுக்கு சிம்பு பேரை கெடுக்கணும்?. ஏற்கனவே அவரு துவங்கின படங்கள் டிராப் ஆகுதுன்னு இன்டஸ்ரியிலே பேர் இருக்கு. அதை வலுவாக்கிற மாதிரி ஆயிருச்சே நீங்க செஞ்ச வேலை என்றாராம் சக்கரவர்த்தியிடம்.
சம்பளத்தை இரண்டு கோடியாக குறைத்திருக்கிறாராம் சிம்பு. இந்த சிறப்பு தள்ளுபடியை எந்த தயாரிப்பாளர் பயன்படுத்தப் போகிறாரோ?
நல்லா தான் வேடிக்கையும் வினோதமுமா இருக்கு ப்ளாக். ஆனா மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் தளம்னு சொல்லிட்டு டி.ஆர்..டண்டணக்கனுலாம் எதற்கு? துரைபாண்டி சரியாகவே பின்னூட்டம் போட்டிருந்தார்.விஜய் கட்சியை வாழ்த்துங்கள்னு சொன்னதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்களோடு நாம் வாழ்வதில்லையா? அதனாலேயே தொடந்து இங்கயே தமயந்தியின் வலைப்பக்கத்திலேயே எழுத நான் முடிவு பண்ணியதும்.பாதிப் பேரின் திருமண வாழ்க்கையே அப்படித்தான் போகிறது.நேற்று உணவகத்தில் மலர் அக்காவைப் பார்த்தேன். மலர் அக்காவுக்கு சின்ன வயசுலயே கல்யாணமாகி ரொம்ப கஷ்டப்பட்டாங்க.அடிக்கடி சண்டை வந்து வீட்டுக்கு வந்துடுவாங்க. அப்பல்லாம் அவங்க முகம் வறண்டு போயிருக்கும்.எதுக்காக அவங்களுக்கு மலர்னு பேர் வச்சாங்கனு அப்பல்லாம் எனக்குத் தோணும்.
இன்னொரு அக்கா .. மனோகரினு. கறுப்பா இருந்தாலும் ரொம்ப லட்சணமா இருப்பாங்க.ருசியா சமைப்பாங்க.நேர் கோடெடுத்து தலை சீவி பூ வச்சாங்கனா அவ்ளோ நல்லாருக்கும்.அந்தக்கா மாப்பிள்ளைப் பாத்த கதை சுவாரஸ்யமானது. வந்த இரண்டு மாப்பிள்ளையில் யாருடைய பேர் ஸ்டைலா இருக்கோ அதைத் தேர்ந்தெடுத்தார்களாம்.
ஒவ்வொரு வாட்டி அடி வாங்கிட்டு முகம் வீங்கி வர்றப்பல்லாம் இதை சொல்லி சிரிக்காம இருக்க மாட்டார்கள்.இவங்கல்லாம் இன்னிக்கு விவாகர்த்து வாங்கிட்டாங்களா? அப்பப்ப சண்டைப் போட்டுக்கிட்டு ,அப்பப்ப அடி வாங்கிக்கிட்டு .. வாழ்றாங்க.
சமீபத்துல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அவர் மனைவி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தார். அவளுக்குத் தேவையான நகைலாம் செஞ்சி கொடுத்தா அது கொஞ்சம் கிடைக்க தாமதமானா கூட என்னைக் கையாலாகாதவன், அது இதுனு திட்டுறா.மனசு நல்லா இல்லனு சொன்னார். அதை சொல்லும் போதே அவர் முகம்லாம் வேர்த்து இருந்தது.வெளிப்படுத்துற சங்கடம் வார்த்தைகளில் வெளிப்படையாகவே தெரிந்தது.
எதற்காக இந்த உறவுக் குழப்பங்கள்? கல்யாணம் என்ற ஒரு அமைப்பு வாழ்க்கையை சிதைக்கிறதா? தனிமனித சுதந்திரம் ,ரசனையில் ஏன் நாம் ஆதிக்க சக்தியினை உட்புகுத்துகிறோம்?
தோள் சாய்ந்து கொள்ள என்று ஏற்படுத்தும் உறவு சார்பு நிலையை ஏன் அதிகமாக்குகிறது?
உமா.. சாயங்காலம் கடைக்குப் போறேன். கூட வர்றியா?
ஐயோ.. அவர்ட்ட கேட்டுக்கிறேனே..
பதட்டம்..வாழ்க்கை நெடுகிலும்.
இவளே சப்பாத்தியாய் கல்லில் தேய்ந்து கல்லில் பொசுங்கி தட்டில் விழுந்து, சவைக்கப்பட்டு..
வெயில் மங்குகிறது. தெருவிளக்குகள் சிறிது நேரத்தில் போடப்பட்டு விடும். இரவின் இருட்டைக் கிழித்துக் கொண்டு வெளிச்சம் பாயும்.
மனிதர்களின் வாழ்வில்?














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக