
வணக்கம் நண்பர்களே!
வாங்க பேசலாம். 4TamilMedia வின் மற்றுமொரு புதிய பகுதி வாங்க பேசலாம். தமிழ், ஆங்கிலம், தங்கிலிஷ், எல்லா வகையிலும் உரையாடலாம். உபயோகமாகவும் பேசலாம், ஒன்றுக்கும் உதவாத அரட்டையும் அடிக்கலாம். எப்போதும் இனிய நண்பர்கள் வட்டத்தில் கலந்திருக்க வாங்க.. பேசலாம்
அப்பா அருகில் இல்லையென்றால் நீச்சல் உடைக் காட்சி மற்றும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார் கமல்ஹாஸன் மகள் ஸ்ருதி ஹாஸன்.சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஸ்ருதி ஹாஸன் அளித்த பேட்டி:
பிகினி உடையில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இதில் தவறு எதுவும் இல்லை. காரணம், பிகினியில்தான் ஒரு பெண் தனது உடல் அழகை முழுமையாக வெளிப்படுத்த முடியும். நான் பிகினியில் நடிக்க விரும்புகிறேன். அந்த மாதிரி காட்சி ஒன்று வரவிருக்கும் எனது படம் ('லக்') ஒன்றிலும் கூட உள்ளது.
ரொம்ப நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளைப் படமாக்கும்போது அப்பா செட்டில் இருப்பதை நான் விரும்புவதில்லை. அவர் பக்கத்தில் இல்லாத காட்சிகளில் பிகினியில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் இம்ரான் கான். சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் இம்ரான். அதனாலென்ன... அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க இது தடையாக இருக்கவில்லை.
லக் படத்தின் காட்சிகள் எதையும் இதுவரை என் அப்பாவுக்கு போட்டுக் காட்டவில்லை. முழுவதுமாக எடுத்து முடித்த பிறகே படத்தைக் காட்டுவோம்.
உன்னைப்போல் ஒருவன் படத்தில் நான் நடிக்கவில்லை. இசை சிறப்பாக வந்துள்ளது. என் வேலையில் என் அப்பா குறுகிகிடுவதில்லை. காரணம் அதை நான் விரும்புவதில்லை. இந்தப் படத்தின் இசையில் பல ஆச்சர்யங்கள் இருக்கும்..." என்றார்.
முட்கம்பிச் சிறைகளில் இருந்து எம் இனிய உறவுகளை மீட்பதற்கான காத்திரமான போராட்டங்களை அவசரமாக அவசியமாக முன்னெடுங்கள்.
நீங்கள் இதுவரை உங்கள் உறவுகளின் மீட்சிக்காக மேற்கொண்ட நியாயமான போராட்டங்களை சர்வதேசம் கண்டு கொள்ளாமல் எமது உரிமைப் போராட்டங்களை நசுக்குவதிலேயே குறிக்கோளாய் இருந்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். அதிலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். எமது மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய தலைமை ஒன்றை எதிர்பார்த்து எம்மக்கள் ஏங்கும் இன்றைய நிலையில்,
எம்மின விடுதலைத் தேரினை உருவாக்குவதற்கு நீங்கள் உங்கள் உழைப்பை உவந்தளித்தீர்கள். அத்தேரினை உருவாக்கிய சிப்பிகள் அத்தேரின் வடம்பிடித்து இழுத்தவர்கள்இ அத்தேரினை இழுத்தவர்களுக்கு அருகில் நின்று உத்வேகம் கொடுத்தோர் அனைவரும் இன்று ஏதிலிகளாக்கப்பட்டு முட்கம்பிச் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது.

இன்று அவர்கள் உணவுக்காக கையேந்தி கொழுத்தும் வெய்யிலில் நீண்ட வரிசைகளில் காத்து நிற்பதை நீங்கள் நேரில் பார்ப்பீர்களானால் இரத்தக் கண்ணீர் வடிப்பீர்கள். அவர்களின் எதிர்காலம் அடிப்படைத் தேவைகளுக்காக வரிசைகளில் காத்து நிற்பதிலேயே கழிந்து கொண்டு இருக்கிறது. பெரியோர் சிறுவர்கள் அனைவரும் போசாக்கற்றவர்களாக இன்னொரு சோமாலியா கிராமங்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறது. நாளாந்தம் போசாக்கின்றி போதிய மருத்துவ வசதியின்றி தொற்று நோய்களால் உங்கள் இரத்த உறவுகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றிலும் இருந்து எம்மக்களை மீட்க புலம்பெயர் உறவுகளே உங்களால் தான் முடியும். முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் உறவுகளை மீட்புக்கான போராட்டங்களை விரைந்து ஆரம்பியுங்கள். உங்கள் நாடுகளின் அரசாங்கங்களுக்கு அதற்கான அழுத்தங்களைக் கொடுங்கள்.
அவர்களைக் காப்பாற்றுங்கள்.
அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் வாழ வையுங்கள்.
இப்படிக்கு
திறந்தவெளிச்சிறைச்சாலையிலிருந்து
வர்மன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக