
ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக இருந்தது. அவருடன் நான் நடித்த "மழை" படம் சரியாக போகவில்லை. இதனால் ராசி இல்லாத நடிகை என எனக்கு முத்திரை குத்தினார்கள். இனி தமிழ் படங்கள் அவ்வளவு தான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது தான் "சிவாஜி" படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரஜினியால் நான் அதிர்ஷ்ட சாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற "இமேஜ்" விலகியது. என் வாழ்க்கையில் சிவாஜி ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இப்போது கந்தசாமி படம் வரை கொண்டு வந்து விட்டுள்ளது.
தருண்கோபி கதாநாயகனாக நடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக் கியவர் ராசுமதுரவன். அப் படம் வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்து "கோரிப்பாளையம்" என்ற படத்தை இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-
சிம்பு, விஷாலை தருண் கோபி, விமர்சித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் அவர்களை பற்றி பேச வேண்டாம் என்று அவரிடம் கூறியுள்ளேன்.
இவ்வாறு ராசுமதுரவன் கூறினார்.
நடிக்க சான்ஸ் கேட்டு மிரட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் நாயகன் கைது!
மிரட்டல்களில் பல வகை. அதில், இது புதுவகை. ஆஸ்கார் விருது பெற்ற படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் குவிஸ் போட்டியில் வெற்றி பெற்று கோடி ரூபாய் பரிசு பெறும் கதாபாத்திரத்தில் நடித்தவர் இளம் நடிகர் அஜீத் பாண்டே. அவர், நடிக்க வாய்ப்பு கேட்டு தயாரி்ப்பாளர் ராமானந்த் சாகரை தொலைபேசியில் மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.
பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராமானந்த் சாகர். இவருடைய நிறுவனத்துக்கு கடந்த மே மாதம் ஒரு அனாமத்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை ஹூஸ்ரி என்று கூறிக்கொண்டார். பிரபல தாதாவான ஷோட்டா சகிலின் நண்பர் என்றும், உங்கள் நிறுவனம் எடுக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகன் அஜீத் பாண்டேவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலையும் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மும்பை காவல்துறையின் விசாரணையில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது நடிகர் அஜீத் பாண்டே தான் என்பது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில்,
”கடந்த மே 24ஆம் தேதி அஜீத் பாண்டே போன் செய்து இவ்வாறு மிரட்டியிருக்கிறார். தன்னை ஹூஸ்ரி என்றும் கூறியிருக்கிறார்” என்றார்.
அஜீத் பாண்டேவை அவர் பயன்படுத்திய செல்போனின் சிம்கார்டு காட்டிக் கொடுத்துவிட்டது. கைது செய்யப்பட்ட அவர், உள்ளூர் நீதிமன்றத்தால் ஜூன் 27 வரை காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக