www.tamilseithekal.blogspot.com
சென்னை, ஜூன் 22: இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்; ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்தார். நடிகர் விஜய் தனது 35-வது பிறந்த நாளை சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமம், ரெங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள அவருடைய திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும் மெர்சி ஹோம் இல்லத்திலும் மதிய உணவு வழங்கினார். இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் விஜய் பேசியதாவது:
என் பிறந்த நாளை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அன்றைய தினம் என்னுடைய ரசிகர்கள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு, நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உதவிகளைச் செய்துள்ளனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். என்னுடைய ரசிகர் மன்றங்களை இப்போது மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ரசிகர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
அந்தக் கருத்தை நான் ஒதுக்கவில்லை. மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். மக்கள் பிரச்னைக்காக ரசிகர்களுடன் இணைந்து போராடுவேன்.
தற்போது நான் நடித்து வரும் "வேட்டைக்காரன்' படம், 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. என்னுடைய 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் ராஜா, செல்வபாரதி, ரமணா, கோபி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, மோகன் நடராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் ஏராளமான ரசிகர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். (Dinamani).

"அதான் உன்னை வளர்க்கிறோமே , நாய வேற தனியா வளர்க்கனுமா ?" சின்ன வயசில நாய் வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டு வீட்டுல கேட்டப்ப வந்த பதில் தான் அது.
இப்ப இருக்கிற தேன் கூடு அடுக்கு மாடிக் குடியிருப்புல எங்க போய் நாய வளர்க்கிறது ? இருந்தாலும் எங்க தெருவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நாய் (நாட்டு நாய் தான்) மேல எனக்கு ஒரு ஸ்பெஷல் பாசம். செகண்ட் ஷோ முடிஞ்சு லேட் நைட்டில வீடு வந்தப்போ கோபத்தோட கணுக்கால் கடிக்க வந்து, நானும் கல்லெறிஞ்சு சண்டையில ஆரம்பிச்சு , அப்புறம் அதுக்கு பிஸ்கெட் போட்டு, மஸ்கா போட்டு சிநேகமாயிட்டோம். அது ஒரு விதமான Commitment-free pet rearing மாதிரி.
தினமும் களைச்சுப் போய் வீடு திரும்பும் போது, எங்கேயோ நீல்மெட்டல் குப்பையக் கிளறிட்டு இருந்தாலும், பைக் சத்தம் கேட்டதும் அதை அப்படியே விட்டுட்டு ஓடி வந்து, பொண்டாட்டிக்கு முன்னாடி வரவேற்கும் ஜீவன் அது.
இப்போ ஒரு நாலஞ்சு நாளா , அந்த நாலு கால் நண்பன் கண்ல படவே இல்லை. தண்ணீ லாரியா, சென்னை மாநகராட்சியா , முதுமையா என்ன காரணம் தெரிய வில்லை. வாங்கி வைத்த பிஸ்க்கட்டுகளை எறும்புகள் மொய்க்க, மனது வலிக்கிறது.
அந்த நாலு கால் நண்பனின் நினைவாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று யோசித்த போது தான் தோன்றியது, தமிழில் தான் நாய்களைப் பற்றி எவ்வளவு பழமொழிகள்? ஆதி காலத்திலிருந்தே மனிதனின் மனதில் , வேறு எந்த ஒரு வீட்டு மிருகத்துக்கும் இல்லாத ஒரு இடத்தை நாய்கள் பிடித்திருக்கின்றன என்பதற்கு இவையே சாட்சி.
- நாய்க்குப் பேரு முத்து மாலையாம்
- நாய்க்கு நெய் செரிக்காது
- நாய்க்கு வேலையில்லை, ஆனால் நிக்க நேரமில்லை
- நாய் கிட்ட போய் #### கடன் கேட்ட மாதிரி
- நாயக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் ...
- ஓலைப் பாயில நாய் ஒண்ணுக்கடிச்ச மாதிரி "சொள சொள"ன்னு...
- ஆறு நிறைய தண்ணீர் ஓடினாலும் நாய் நக்கி நக்கி தான் குடிக்கும்
- வேலையில்லாதவன் நாயக் கூப்பிட்டு வச்சு சிரச்சானாம்
- கல்லைக் கண்டா நாயக் காணோம் ; நாயக் கண்டா கல்லைக் காணோம்
- நாய் கையில கிடைச்ச தேங்காய் மாதிரி - தானும் திங்காது , அடுத்தவனையும் திங்க விடாது
- வைக்கப்பொடப்ப நாய் காவல் காத்த மாதிரி
- நாய் வால நிமிர்த்த முடியாது
- நாய வேலை ஏவுனா, அது தன வாலை ஏவுமாம்
- நாயக் கொஞ்சினா வாய நக்கும்
- நாய்க்கு வாக்கப்பட்டா குரைச்சு தான் ஆகணும்
- நாய் சகவாசம் சேலையக் கிழிக்கும்
- குரைக்கிற நாய் கடிக்காது
- நாய் நக்கி சமுத்திரம் வத்திப் போயிடுமா ?
- நாய் விற்ற காசு குறைக்காது
- நாய் குரைச்சு விடியுமா? கோழி கூவி விடியுமா ?
- நாய் இருக்கும் இடத்தில் சண்டை இருக்கும்
- நாய் கேட்ட கேட்டுக்கு மாமரத்து நிழலாம்
- சூரியனப் பார்த்து நாய் குரைக்கிற மாதிரி
உங்களுக்குத் தெரிந்த , இதில் விட்டுப் போன பழமொழிகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
Keywords: Dog, Dog proverb, proverbs about dogs
Related Posts :

சப்தத்தை இரைத்துக் கொண்டு
புறப்பட தயாரான இரயிலை
அவதானித்து பாதையின் பின்
வழியில் நின்றிருக்ககையில்
இரயில் பற்றிய சமிக்ஞை
ஏதுமற்று தண்டவாளத்தில்
இறை தேடும் பறவையை
அன்னிச்சையாய் விரட்டுகின்றேன்
என்னை கவனியாத அச்சிறு பறவை
அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது.
--==--
கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.
--==--
சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.
புறப்பட தயாரான இரயிலை
அவதானித்து பாதையின் பின்
வழியில் நின்றிருக்ககையில்
இரயில் பற்றிய சமிக்ஞை
ஏதுமற்று தண்டவாளத்தில்
இறை தேடும் பறவையை
அன்னிச்சையாய் விரட்டுகின்றேன்
என்னை கவனியாத அச்சிறு பறவை
அருகாமையில் வந்த இரயிலை
கவிழ்த்து விடும் துணிச்சலுடன்
சிறகுகளை வீசிக் கடந்து செல்கின்றது.
--==--
கடந்து செல்லும் தொடர்வண்டியில்
கையசைத்து சென்ற குழந்தையின்
மென்விரல் பற்றி இரயிலிலேயே சென்று விட்டது
அதிகாலைச் சோம்பல்.
--==--
சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக