செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

நில நிற மேகம் வாகனத்தில் என்னை கடந்து சென்றதை பார்த்தேன். ஆண்களை விட பெண்கள் வேகமான வாகனங்கள் ஓட்டுவார்கள் என்று உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உன் வலையல்களை கூட நீ இப்படித்தான் வளைப்பாயா என்று கேட்கும் அளவிற்கு உன் வாகனத்தை அப்படி வளைத்து செல்கிறாய். எனக்கு பழைய வண்டி வாங்கி தந்த தந்தையை திட்டிக் கொண்டு இருந்தேன். என்னால் உன்னை முந்தி உன் முகம் பார்க்க முடியவில்லை என்பதற்காக....

பெண்களை தொடர்வது இழுக்கு என்று சொன்னவன் நான்.... உன்னை தொடர்வதில் தவறில்லை... காரணம் நீ பெண்ணல்ல தேவதை. பலர் இங்கு காமத்திற்காகவே பெண்ணை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நான் தேவதை உன் தரிசனம் கிடைப்பதற்காக பின் தொடர்கின்றேன். உனக்காவே SCOOTY நிறுவனம் வடிவம் ஆமைத்தார்களோ என்ற சந்தேகம். அந்த வாகனம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அதன் வேகமும் அதிகமாகவே இருந்தது. நான் எங்கு செல்ல வேண்டும் என்ற இடத்தை கூட மறந்து விட்டேன். என் பின்னால் வா என்று உன் SCOOTY சொல்வது போல் உணர்வு. நான் நீ போகும் இடத்தை எல்லாம் தொடர்ந்தேன். ஆனால், நீண்ட நேரம்...... உன் பின் அழகை மட்டும் ரசிப்பது என்ற எண்ணம். உன் முகத்தை பார்க்க முடியாதா எனற் ஏக்கத்துடன் வேகமாக உன்னை தொடர்ந்தேன்.



நல்ல வேலை நம் ஊரில் ஒவ்வொரு சாலையிலும் நான்கு சிக்னல்கள் இருந்தன. பல முறை அவசரத்தில் செல்லும் போது இந்த சிக்னல்களை திட்டியிருப்பேன். ஆனால், இன்று தான் இந்த சிக்னல் நல்ல வேலை செய்ய தொடங்கியது. சிக்னலுக்காக நீ வண்டியை நிருத்த நானும் உன் அருகில் வண்டியை நிருத்தி பார்த்தேன்.... உன் முகத்தை. உன் அழகை என்ன வென்று சொல்வது. உன்னை வர்ணிக்க உயிருடன் இருக்கும் கவிஞர்கள் போதாது. இறந்த கவிஞர்களும் போதாது. இன்னும் கடவுள் பல கவிஞர்களை படைக்க வேண்டும்.....உன் அழகை பற்றி எழுதுவதற்காக....

என் மனதில் ஒரு குரல்.... அட மடையா... கவிஞர்களை உருவாக்கத் தான் கடவுள் இவளை படைத்தான்... உனக்கு புரியவில்லையா என்றது. அவளை பார்த்த சில நோடியில் நான் கூட கவிஞனாகிவிட்டேன் என்று அப்பொது தான் நானும் உணர்ந்தேன்.

நம் அரசாங்கம் ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் வைத்து இருக்கிறார்களே ..... பின்பு எதற்கு உன் நெற்றியிலும் இத்தனை சிக்னல். சற்று உற்று பாருடா என்று என் மனது சொன்னது.... அது சிக்னல் அல்ல அவள் நெற்றியில் இருக்கும் குங்குமம், சந்தனம், விபூதி.... என்று பார்த்தேன். சிக்னலின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் பிறந்தது அவளின் நெற்றியை பார்த்து தான் வந்தது போலும் என்று எனக்கு தோன்றியது.

அவள் அழகை ரசிக்கும் வேளையில்..... எதிரே விழுந்த பச்சை நிற சிக்னலை கவனிக்க மறந்தேன். பச்சை நிறம் விழுந்தவுடன் அவள் மின்னலாக பறந்தால்..... நானும் என்னால் முடிந்த வேகத்தில் பின் தொடர்ந்தேன். என்னை விட மிக தொலைவிலே சென்று விட்டாய். எப்படியாவது அவளை பிடித்தவிட வேண்டும் என்று என் வண்டிக் கூட வேகமாக ஓட தொடங்கியது. அடுத்த சிக்னல் வந்தது. அதில் பிடித்து விடலாம் என்ற கனவுடன் இருந்தேன். பாவி , சிக்னல் அவள் கடந்த பிறகு சிவப்பு விழுந்தது. மேலும் அவளை பின் தொடர முடியாமல் போனது. சற்று முன் தான் சிக்னலை பாராட்டினேன். அவள் நெற்றியில் இருக்கும் ஆன்மிக சின்னத்தை கூட சிக்னலுக்கு உவமையாக்கினேன். ஆனால், அந்த நன்றி மறந்த சிக்னல் என்னை ஏமாற்றி விட்டது. ஏமாற்றத்துடன் வந்த வழியே சென்றேன். மீண்டும் வழிக்காட்ட அந்த தேவதையில்லை. ஆனால், அவள் நெற்றியின் நினைவாக ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் இருக்கிறது.
-கற்பனை : கணேஷ்

தலித்துகளின் பகுதிகளுக்கு செல்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். அவருடன் தங்கபாலு, ஞானதேசிகன் மற்றும் பலர்.

(திடீரென்று தலித் ஒருவரின்

குடிசைக்குள் நுழைகிறார்)

தலித் குடும்பத்தலைவர் (மனைவியிடம்) : ஏய்... யார் வந்துருக்கா பாரு... ராகுல் சாமி வந்துருக்காக...

மனைவி : வாங்க சாமி... வாங்க...

ராகுல் (தலித்துகளிடம்) : நோ...நோ... ராகுல் காந்தி... நாட் ராகுல்சாமி...

ஞானதேசிகன் (தலித்துகளிடம்) : அவர் பேரு ராகுல் சாமி இல்ல... ராகுல் காந்தி...

கு.தலைவர் : தெரியும் சாமி....

ஞானதேசிகனைப் பார்த்து ராகுல்(ஆங்கிலத்தில்) : ஹா.. ஹா... நீங்களும் சாமியா...

ராகுலின் மகிழ்ச்சியைக் கண்டு குடும்பத்தலைவரும், அவர் மனைவியும் பூரித்துப் போகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது மொழிபெயர்ப்பால் சிக்கிக் கொண்ட ஞானதேசிகன் முழிக்கிறார். ராகுல் சொல்வதைத்தவிர வேறு எதையும் அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லக்கூடாது என்ற உறுதிமொழியை மீண்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களின் உரையாடலை மொழி பெயர்க்கத் துவங்குகிறார்.

ராகுல் : எப்படி இருக்கீங்க...

கு.தலைவர் : நல்லா இருக்கோம் சாமி...

ராகுல்(சாமி என்று சொல்வதைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல்) : பணவீக்கம் குறைஞ்சுருச்சு...

கு.தலைவர் : அய்யோ... பாவம்...

கு.தலைவர்முகம் கோணலாகிப் போனதால் பதற்றமடைந்த ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : நீங்க ஒழுங்கா சொல்லலை போலருக்கு...

ஞானதேசிகன் : அய்யய்யோ.. வீக்கம்னு நீங்க சொன்னத அப்படியேதான் சொன்னேன்.. ஏதோ அடிபட்டு இப்ப வீக்கம் குறைஞ்சுட்டதா அவங்க நெனச்சுட்டாங்க... நீங்க சொல்றத அப்புடியே தமிழ்ல சொல்றதத் தவிர வேற வழி எனக்கு இல்லை..

கு.தலைவர் : என்னங்க நாங்க எதுவும் தப்பா சொல்லிட்டோமா...??

ஞானதேசிகன்(மனசுக்குள்) : ஆஹா... என்னை சிக்க வெக்காம விடமாட்டாங்க போலருக்கே..

ராகுல்(ஞானதேசிகனைப் பார்த்து) : பணவீக்கம் எதிர்மறையாப் போயிருச்சுன்னு அவங்களுக்கு விளக்கமாச் சொல்லுங்க...

ஞானதேசிகன் : அதாவது, இப்ப நீங்க ஒரு கார் வாங்குறீங்கன்னு வெச்சுக்கோங்க...

மகன் : அய்... காரு(என்று கூறிவிட்டு கிழிஞ்ச டயரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்)

கு.தலைவர் : காரா... எதுக்கு...

ஞானதேசிகன் : அத விடுங்க... போன வருஷம் தக்காளி கிலோ அஞ்சு ரூபாயா இருந்துச்சு... இப்ப ஒரு கிலோ கேட்டீங்கன்னா தக்காளியும் குடுத்து அஞ்சு ரூபாயும் கைல கொடுத்து அனுப்புவாங்க...

அதிர்ந்து போன தங்கபாலு, "அப்படிலாம் இல்ல..." என்றார் அவசர, அவசரமாக.

கு.தலைவர் : அதான் எனக்குத் தெரியுமே... உங்க தலைவர் என்ன சொல்றார்னு சொல்லுங்க சாமி....

தங்கபாலுவையும் சாமின்னு சொன்னதும் ராகுல் உற்சாகமடைகிறார்.

தங்கபாலு : விலையெல்லாம் குறைஞ்சுருச்சுன்னு சொல்றாரு...

மனைவி : அப்படின்னா சாமி சொன்னது உங்களுக்கும் புரியலையா...

ராகுல் : என்ன சொல்றாங்க...

தங்கபாலு : ஒண்ணுமில்ல சாமி...(அய்யய்யோ... இந்த சாமி விவகாரம் நமக்கு தொத்திக்கிச்சே என்று நாக்கைக் கடித்துக் கொள்கிறார்) நாம சொல்றது அவங்களுக்குப் புரியல...

ராகுல் : அமெரிக்கா உடன்பாட்டால மின்சாரம் வரும்குறத சொன்னா நம்புவாங்களா...

தங்கபாலு : இந்த வீட்டுக்கு இன்னும் மின் இணைப்பே குடுக்கலை...

ஞானதேசிகன் : நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா...

ராகுல் : சொல்லுங்க...

ஞானதேசிகன் : அடுத்த வீட்டுக்கு போலாமே...

ராகுல் : சாப்பாடும் இங்கதாங்குறதுதான நம்ம திட்டம்...

தங்கபாலு : (மனசுக்குள்) இவர் போற வீட்டுல சமைச்சததான் இவ்வளவு நாளா சாப்புட்டோம்னு நெனச்சுட்டாரு போலருக்கே...

செல்போன் அடிக்கிறது.

கையில் எடுத்த ராகுல் : ஹலோ... யெஸ் ராகுல் சாமி... ஸாரி... நோ... நோ... ராகுல் காந்தி..

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

  யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும், சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.    அத்துடன், வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோ (சிறி அணி) மற்றும் ஈரோஸ் ஆகியனவும் போட்டியிடவுள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா [...]
  யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்துத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும், சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.    அத்துடன், வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ரெலோ (சிறி அணி) மற்றும் ஈரோஸ் ஆகியனவும் போட்டியிடவுள்ளன. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா [...]
 Developer: I-play/Dedomil
 Screen Size: 176x208 | 240x320 | 352x416
 Genre: Sports


Click Here to Download
யோசிக்காமலேயே
வருகின்றன
நிறைய கவிதைகள்
உன்னைப் பற்றி
நினைக்க நினைக்க .....


ஒரு கவிதைக்கான
கரு எப்படி
சிதறிக் கிடக்கிறது
பாருங்கள்...
அவள் உடைத்துப்
போட்ட....
கச்சான் கோதுகள்


உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.



உன் அழகு
பொத்தி
வைக்கப்பட முடியாமல்
நிரம்பி
வழிகிறது
என் கவிதைகளில்...






கருத்துகள் இல்லை: