செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

தெற்கிலிருந்து எழுந்துள்ள மூன்று குரல்கள் கருத்துக்கள் இன்று அவசரமாகவும், அவசியமாகவும் நோக்கப்பட வேண்டியவையாக உள்ளன.ஒன்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமர சிங்க கூறியது. "அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் அது தமிழர்களை யும், முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் தனித் தனியே பிரித்து மீண்டும் அத்தரப்புகள் இடையே போராட்டம் ஒன்றுக்கேவித்திடும். அதனால் அந்தத் திட்டத்தை முழு

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 50 கிராமங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும், இந்தியத் துணை இராணுவப்படையினருக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பை, மாநில அரசின் விருப்பக் கருத்தையும் மீறி மத்திய அரசு, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துத் தடைசெய்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

20 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் செய்திகள் வாசிப்பில் கொடிகட்டி பறந்தவர் பாத்திமாபாபு, இப்போதும் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பவர்...

அப்போதெல்லாம் அவரை நான் மிக வியப்பாக பார்த்து இருக்கின்றேன்,அதன் பிறகு சென்னை வந்து கேமரா மேனாக மாறிய பிறகு நிறைய பிரபலங்களை சந்தித்து விட்டேன்...

5 வருடங்களுக்கு முன் விஜய் செய்திகள் நிறுத்தப்பட்டஉடன் அதில் வேலை செய்தவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து பிரண்ட்ஸ் டிரீம் டெலிவிஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கூட்டாஞ்சோறு என்ற, காலை நிகழ்ச்சியை ராஜ் டிவிக்காக தயாரித்த கொடுத்தனர்...

அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியில் பாத்திமாபாபு பணியாற்றினார், அப்போது அந்த குழுவில் நானும் கேமராமேனாக இருந்தேன்...
காலை நிகழ்ச்சி எடுக்கும் போது லைட்டிங் செட் செய்து விட்டு உட்கார்ந்து இருக்கும் போது எடுத்த படம் இது... இப்போதுவரை அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட...

பாத்திமாபாபு அவர்கள் என்னை பொறுத்தவரை எல்லோரிடமும் மிக இனிமையாய் பழக கூடியவர்... அவரின் தமிழ் உச்சரி்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
நானும் அவரும் பல விஷயங்கள் பற்றி பேசி இருக்கின்றோம்... என் தமிழ் ஆர்வம் கண்டு வியந்தவர் அவர்...

அவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களை பேட்டி கண்ட போது அவரின் மத்தியமர் சிறுகதைகளை பற்றி கேள்வியில் சேர்க்க சொல்லி அவரை பேட்டிக்கான நானும் உதவினேன்...

அதன் பிறகு கெஸ்ட் ரூமில் நான், பாத்திமா பாபு ,எழத்தாளர் சுஜாதா மூன்று பேரும் ஒரு மணிநேரம் பேசினோம்.... அப்போதே சுஜாதா சாருக்கு உடல் நிலை சற்று மோசமாகத்தான் இருந்தது...

அதன் பிறகு எதிர்பாபராத காரணங்களால் அந்த நிகழ்ச்சி வெற்றி பெற வில்லை,அதன் பிறகு நான் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டேன்... ஒருநாள் எங்கள் கல்லூரிக்கு கெஸ்ட்ஆக வந்தார்கள்...

பொதுவாய் நடிகைகள் மறந்து விடுவார்கள் அல்லது மறந்து விடுவது போல் நடிப்பார்கள்... ஆனால் பாத்திமா
"எப்படி தனசேகரன் இருக்கீங்க?" என்று நலம் விசாரித்து பழைய வேலைகளை பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிறகு சென்றார்கள்...

இன்றளவும்உலக பட விழாவில் கலந்து கொண்டு கூடுமானவரை அனைத்து படங்களையும் பார்க்க முயல்பவர்... இப்போது கூட உட்லன்ஸ் தியேட்டரில் நடந்த உலக படவிழாவில் என்னை பார்த்து நலம் விசாரித்தார்....

பாலச்சந்தர் இயக்கிய கல்கி படத்தில் நல்ல கதாபாத்திரத்தை பெற்று பிரபலமடைந்தவர்..எனக்கு அவரை நடிகையாக பார்ப்பதை விட அவரை செய்திவாசிப்பாளராகவே பார்க்கவே எனக்கு அதிகம் பிடிக்கின்றது...பிரபலமாக இருப்பதும் இயல்பாய் இருப்பதுமான பழக்கம் பொதுவாய் எல்லோரிடமும் இருப்பதில்லை..

அந்த வகையில் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு வித்யாசமான பெண்மனி....


அன்புடன்/ஜாக்கிசேகர்

நரிக்கு மச்சு வீடு கிடைச்சா சிங்கத்தை பார்த்து சௌக்யமான்னு கேட்குமாம். வீடு கொள்ளாமல் வெற்றி கோப்பைகளை அடுக்கி வைத்திருந்தாலும், உள்ளூரு ஓட்டப்பந்தயத்தில் நொண்டியடிச்ச மாதிரி ஆயிருச்சு மீரா ஜாஸ்மினின் கேரியர். வந்தவங்க, போனவங்க, நின்னவங்க, நொடிச்சவங்கன்னு யாரு கூடவும் ஜோடி போட தயாராகிட்டாரு. வேடிக்கை என்னவென்றால், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு தங்கச்சியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிப்பது நம்ம மோனிகா. சிலந்தி படத்திலே தண்ணீரில் மூழ்கி தத்தளிக்க வச்சாங்களே, அவங்களேதான்.

சென்னைக்கு வந்ததும் சும்மாயில்லாம, நான் சிவாராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். மீரா ஜாஸ்மின் அவருக்கு தங்கச்சியா நடிக்கிறாங்க என்று சொல்லி வருகிறாராம். இதுக்கெல்லாம் கவலைப் படுகிறவரா மீரா.

இதற்கிடையில் தனக்கென்று ஒரு வெப்சைட் துவங்கியிருக்கிறாராம் மோனிகா. தமிழில் நான் படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், நான் நடிச்ச வர்ணம் படம் வந்திட்டா, தமிழில் நான் எதிர்பார்த்த கேரக்டர்களும் எனக்கு கிடைக்கும். எனக்கென்று ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக்க முடியும். அதனால் அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் தமிழ் படம். அதுவரைக்கும் கன்னடத்தில் நடிக்கிறேனா? திடீர்னு என்னை பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு, "வெப்சைட் இருக்கு. அதிலேயே என்னை பார்த்துக்கோங்களேன்"னு சொல்லிடுறேன். அதுக்காகதான் இந்த வெப்சைட் என்றார்.

அசின் என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இன்றைய தேதியில் அந்த பெயரின் அர்த்தம் மிஸ் க்ளீன்!

இவரது உதவியாளர் நல்ல முத்துக்குமார் திடீர் மாயமானபோது, பணக்கார நடிகை. பார்க்க கூடாததை பார்த்திட்டான் போலிருக்கு. எங்க ஆற்றிலே மிதக்கிறானோ, எந்த குழியிலே கிடக்கிறானோ என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தவர்கள் உண்டு. ஆனால், எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டு, "அவங்க மேலே தப்பில்லே" என்று நல்ல முத்துக்குமாரே சொல்லும்படி ஆகியிருக்கிறது உண்மை. சத்ய மேவ ஜெயதே!
இத்தனை மாதங்களான இவரை பிடிக்க தனி போலீஸ் படையே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. முத்துக்குமாரின் அக்கவுன்ட்டிலிருந்து பணம் மாயாமாகி வந்த தகவலை தெரிந்து கொண்ட போலீஸ் மேலும் சிறிது பணத்தை போட்டு விட்டு, (பொறியிலே மசால் வடை வைக்கலாம். பணம் வைத்திருக்கிறார்கள் போல) காத்திருந்தது. அவர்கள் நினைத்த மாதிரியே ஏடிஎம் மில் பணத்தை எடுக்க வந்த முத்துக்குமாரை ஒரே லபக்!

பத்திரிகைகளில் வந்த செய்தியை படித்துவிட்டு போலீஸ் தன்னை துன்புறுத்துமோ என்று பயந்து போய் பதுங்கியிருந்தாராம் தம்பி. இத்தனை நாட்கள் பட்ட அலைச்சலுக்கு போலீஸ் தரப்பிலிருந்து பிரசாதம்(?) கொடுத்தார்களா தெரியாது. முறையாக புகார் கொடுத்த நல்ல முத்துக்குமாரின் அம்மா கையில் பிள்ளையை ஒப்படைத்துவிட்டார்கள்.

கையோடு கையாக மும்பைக்கும் போன் செய்து அசினிடம் விஷயத்தை கூறினார்களாம். இனி தனது கர்சீப்பை கூட தானே துடைத்துக் கொள்வார் அசின் என்று நம்பலாம். அது போகட்டும்... இத்தனை நாட்கள் எங்கே பதுங்கியிருந்தாராம் முத்து? அசினை இந்திக்கு கொண்டு போன டைரக்டர் முருகதாஸ் கஸ்டடியில்!

கருத்துகள் இல்லை: