செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்ற இலங்கையர்களுக்கு இடமளிக்கவேண்டாமென சர்வதேச சமூகத்திடம், இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாகவும், ஜனநாயகத்தோடும் வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம கூறினார்.


நூட்டில் சுமூகநிலை ஏற்பட்டிருப்பதால் பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டு புகலிடம் கோருபவர்களுக்கு சர்வதேச நாடுகள் புகலிடம் வழங்கக் கூடாது எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.


பல்வேறு காரணங்களைக் கூறி அரசியல் தஞ்சம் கோரிய சுமார் 5 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்துவருவதுடன், இவர்கள் கனடா, சுவீடன், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவருவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கையின் பாதுகாப்பைக் காரணம்காட்டியே இவர்களில் பலர் புகலிடம் கோருவதாகக் கூறினார்.


இந்த நிலையில் வெளிநாடுகளில் தங்கியிருந்து அந்தநாடு வழங்கும் அனுகூலங்களைப் பெற இலங்கையர்களை அனுமதிக்கமுடியாதெனவும் ரோஹித்த போகல்லாகம தெரிவித்தார்.


இதேவேளை, இலங்கையில் கடந்த 3 தசாப்தங்களாகத் தொடர்ந்துவந்த மோதல்கள் முடிவுக்கு வந்திருப்பதால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.


கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு தோன்றியிருப்பதாக கடந்த சில நாட்களக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.


200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது.


இதேபோல, சுவிட்ஸ்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப சுவிட்ஸ்லாந்தின் பிரதிநிதிகள் சபையும் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையிலேயே புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர்களைத் திருப்பியனுப்ப அந்த நாடு தீர்மானித்திருந்தது.




More than a Blog Aggregator

by ஸ்ரீ....
அட்டகாசமான ஆரம்பம் கிடைத்துள்ளது Microsoft Bing. தேடுபொறிக்கு. (நான் எழுதலாம் என நினைப்பதற்குள் ஏகப்பட்ட பதிவுகள்!) Google , நம்வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. இவற்றைப் பற்றிய எனது பார்வை. (இன்னும் Bing பழகவில்லை எனக்கு.)

Microsoft Bing:

கலர்ஃபுல்லான பக்கம். பின்னணியில் தினம் ஒரு படம். Shopping, Travel, Health மற்றும் Local Business இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படங்களின் அளவை மாற்றிக் கொள்ளும் வசதி சிறப்பாக உள்ளது. தேடிய விடையிலேயே கூடுதல் தகவல்கள் கிடைக்கிறது. லிங்க்கைத் திறக்காமல். (தேடியவர்களுக்குப் புரியும்.)

ஆபாசத் தளங்களை அனைத்து வயதினரும் எளிதில் அணுகமுடிவது பலவீனம். (விரைவில் சரிசெய்யப்படலாம்.) மைக்ரோசாஃப்ட் பிங் 12.1 % மக்களைக் கவர்ந்திருக்கிறது. நல்ல வளர்ச்சி. சேவை தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் பட்சத்தில் Google க்குப் போட்டியாக அமையும்.



Google:

எளிமையே இவர்கள் தனித்துவம். மிகப்பெரிய தேடுபொறியின் முதல்பக்கம் சாதரணமாக இருக்கும். தகவல்கள் மின்னல் வேகத்தில் கிடைக்கும். சிறிது சிறிதாக Gmail, Orkut எனப் பல சேவைகளை கூகிள் பக்கத்திலிருந்து கிடைக்குமாறு செய்தது சிறப்பு. இந்திய மொழிகள் பலவற்றில் தேடமுடிவது பலம்.

ஆபாசத்தளங்களைப் பொறுத்தவரை கூகிளும் பெரிதாகத் தடை செய்யவில்லை. இணையத் தேடலில் 65 % மக்களின் விருப்பம் கூகிள். கடந்த பத்து வருடங்களாக நம்வாழ்வோடு இணைந்துவிட்ட ஒன்று. வருங்காலத்தில் பிங் பிரபலமடைந்தாலும் நாம் முழுமையாக கூகிளிலிருந்து விலகமாட்டோம் என்பதே உண்மை.

தேடுபொறியின் தொழில்நுட்பம் குறித்து படித்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும். எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.இன்னும் நிறைய செய்திகள் பிற பதிவுகளிலிருந்து பெறலாம்.



இலண்டனில் 'கைட் பார்க் கோன்ர்' எனும் ,டத்தில் ஆரம்பமான பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். தமிழர் அல்லாத வேற்று இன நண்பர்கள் பலரையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது.



இலண்டன் பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்

கருப்பு உடை அணிந்து , கருப்புக் கொடிகளை ஏந்தி மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தினார்கள். ஊர்வலத்தின் முன்னால் தமிழர் கலைக்குழுவினர் வன்னி வதை முகாம்களின் கொடூரத்தை சித்தரிக்கும் காட்சிகளை தத்ரூபமாக நிகழ்த்திச் சென்றனர்.



மூடி மறைக்கப்பட்ட இரும்புத்திரையின் பின்னால் கொல்லப்பட்ட மக்களின் உருவப்படங்களை தாங்கிய உறவுகள் பேரணியின் முற்பகுதியில் நிறைந்து காணப்பட்டனர்.



பின்வரும் கோரிக்கைகளை பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

காணாமல்ப் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும்

முகாம்களில் வாழும் மக்கள் இயல்நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்

இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் நடைபெறும் இப்பேரணி மேற்குலக அரசுகளினாலும் ஊடகங்களினாலும் உற்று நோக்கப்படுகின்றன.


பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதி டொனி பென் , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெரமி கொபன், சைமன் {ஹஸ், கொலம்பியன் இனத்தவரும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை விரிவுரையாளர் அன்டி ஹிகின்பொட்டம், இடது சாரி சொ சலிஷ்ச கட்சியின் தேசிய அமைப்பாளர் டான் மெயர், அக்ட் நொவ் அமைப்பின் ரிம் மாட்டின் ஆகியோர் உரையாற்றினர்.


ஈழத்தமிழருக்கு நீதியானதும் நியாயமானதுமன ஒரு அரசியல் தீர்வு கிட்டும் வரை பிரித்தானியத் தமிழர்கள் உறங்கப்போவதில்லை என்ற செய்தியை உரக்க கூறி நின்கிறது இன்றைய மாபெரும் பேரணி.


தொடர்ந்தும், தமிழ் மக்களுக்கான விடிவு கிட்டும்வரை இப்படியான மக்கள் வெளிப்பாடுகள் அவசியம் எனவும் ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இப்பேரணி முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஆதாரம்: http://www.tamilseythi.com/tamilar/london_210609.html

Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்

இந்தியாவின் முதல் க்ளோனிங் கன்றுக்குட்டி ரெடி!
garima.jpg
ருமைகள்(?) அதிகமுள்ள நாடு …இந்தியா. ஆனால் உலக அளவில் ஒப்பிடும்போது அவை கறக்கும் பாலின் அளவு குறைவு. இந்திய கால்நடை மருத்துவர்கள் சும்மா இருப்பார்களா? சிந்தித்தார்கள்… டாலி என்கிற ஆட்டை க்ளோனிங்கில் உருவாக்கும்போது நாம் ஏன் ஒரு எருமையை க்ளோனிங் முறையில் உருவாக்கக் கூடாது என்று.

அவர்கள் செய்த இடைவிடாத முயற்சியின் விளைவாக ஒரு எருமை கன்றுக்குட்டியை க்ளோனிங் முறையில் படைத்துவிட்டார்கள். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இவர்கள் உருவாக்கிய க்ளோனிங் கன்றுக்குட்டி துரதிருஷ்டவசமாக ஒரே வாரத்தில் இறந்துவிட்டது.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள கன்றுக்குட்டிக்கு கரீமா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பிறந்து  15 நாட்கள்ஆன கரீமா சும்மா கும்மென்று  43 கிலோ எடை உள்ளது.
.
கரீமா வளர்ந்து ஆளாகும் போது சாதாரண இந்திய எருமையை விட அதிகமாக பால் கறக்கு. கரீமா வகை எருமைகளை அதிக அளவில் உருவாக்கும்போது இந்தியாவின் பால் உற்பத்தி அதிகரிக்கும். மாட்டறைச்சியின் திடம் மற்றும் மாட்டிறைச்சித் துறையின் நீண்டகால தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: