செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

More than a Blog Aggregator

by ஜ்யோவ்ராம் சுந்தர்
உரையாடல் சிறுகதைப் போட்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறைய கதைகள் வந்திருக்கின்றன. (இதுவரை 111 கதைகள்) . மிச்சமிருக்கும் 7 நாட்களில் மற்ற வலைப்பதிவர்களையும் கதை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு வந்துள்ள எல்லாக் கதைகளையும் இந்த இணைப்பில் படிக்கலாம் :

http://tamil.blogkut.com/contest-uraiyadal.php

செந்தழல் ரவி சிரத்தை எடுத்து எல்லாக் கதைகளையும் வாசித்து தன்னுடைய இம்சை வலைப்பதிவில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மின்னல் பக்கம் லாவண்யாவும் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளார். அதன் விவரங்கள் உயிரோடையின் தளத்தில் இருக்கின்றன. ச முத்துவேல் எழுதிய கவிதையொன்றைப் பார்த்து கதை சொல்ல வேண்டும். கதை அளவு ஒரு பக்கத்திலிருந்து மூன்று பக்கங்கள் இருக்கலாம். மேல் விவரங்களுக்கு :

http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html

இந்தப் போட்டியிலும், அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உயிரோடை சிறுகதைப் போட்டியில் வந்த ஒரே ஒரு கதையைத்தான் படித்திருக்கிறேன் இதுவரை. நானும், ஸ்ரீவித்யாவும், அனுவித்யாவும், வெறும் வித்யாவும்... என்ற தலைப்பில் நந்தா எழுதியதிருந்த கதை எனக்கு மிகப் பிடித்திருந்தது.

நந்தாவின் இந்தக் கதை மட்டுமல்ல, அவரது பல கவிதைகளும் என்னைக் கவர்கின்றன. ஒரு மாதிரி டிஜிட்டல் கவிஞர்! பிரம்மராஜன், எஸ் சண்முகம் போன்ற கவிஞர்களை வாசித்தவர்கள் இவரை அதிகமாக ரசிக்க முடியும். மனிதர் கவிதைகளில் கலக்குகிறார். திரட்டிகளில் இவரது கவிதைகள் வருகிறதா எனத் தெரியவில்லை. என்னுடைய பிளாக்ரோலில் இவரது முகவரி இருந்தாலும், தனியாகத் தருகிறேன் : www.nundhaa.blogspot.com

நந்தாவைத் தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நந்தா மட்டுமில்லை. யாத்ரா, பிரவின்ஸ்கா, சேரல், மண்குதிரை எனப் பலர் இப்போது தொடர்ந்து நன்றாகக் கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார்கள். மண்குதிரை விடுமுறையில் இருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் எழுதத் துவங்கிவிடுவார் என நம்புகிறேன்.

இங்கே வலைப்பதிவுகளில் முதலில் ஆர்வமுடன் எழுதத் துவங்குபவர்கள், பல்வேறு காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை.

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், அனுஜன்யா வெறும் கவிதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்தவர் பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள் என முன்னேறியிருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுகிறார். அனுஜன்யாவிற்கு ஆங்கில மொழியின் மேல் நல்ல கண்ட்ரோல் இருக்கிறது. இவர் கவிஞராகவும் இருப்பதால், கவிதைகளை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். தமிழில் பல கவிதை மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். சிலர் அகராதியை அருகில் வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பார்கள். அங்கே தமிழ் வார்த்தைகள் இருக்கும், கவிதை இருக்காது. (hit the nail on its head என்பதை நகத்தின் தலையில் அடி மாதிரியானவை மொழிபெயர்ப்பில் சேர்த்தியே இல்லை!)

மொழிபெயர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவிதையின் உயிர். சில கவிதைகள் இறுக்கமான மொழிநடையில் இருக்கும். தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த இறுக்கத்தை அப்படியே கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதாவது, நம்முடைய கவிதை நடையை மறந்துவிட்டு, மொழிபெயர்க்கும் கவிதைக்கு நேர்மையாயிருக்க வேண்டும்.

வளர்மதி சமீபத்தில் a leaf, treeless என்பதை 'ஒரு இலை, மரமற்று' என்று மொழிபெயர்க்காமல் 'காற்றில் அலையும் இலையொன்று ' என எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் அய்யனார் மொழிபெயர்த்திருந்த கமலாதாசின் கவிதையும் நன்றாக வந்திருந்தது. தொடர்ந்து அய்யனாரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சரியான அளவில் சரியான இசையை கேட்பது, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வேகம் என்பன குறைவடைந்து இவை தொடர்பான பிரச்சனைகள் தீர வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.உதாரணத்துக்கு உச்சசாயல் operatic music (Puccini's Nessun Dorma) போன்ற இசை வடிவங்களில் பெறப்படும் இசை ஒலிகளை படிப்படியாக கூட்டி மற்றும் குறைத்து சரியான அளவுகளில் வழங்கின் அது பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவி அளிக்கும் என்கின்றனர்

கருத்துகள் இல்லை: