ஒரே பொய்யை பலமுறை சொல்லி அதையே சட்டமன்ற அவை புத்தகத்திலும் பதிய வைப்பதில் திமுக மந்திரிகள் யாருமே சளைத்தவர்கள் இல்லை . இன்று நடந்த போக்குவரத்து மானிய துறை மீதான விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கே . என் . நேரு மீண்டும் மீண்டும் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வது போல் பேருந்து கட்டணத்தை உயர்த்த வில்லை என சொல்லுகிறார் . சரி ஏதோ பணத்தை வாங்கி ஒட்டு போட்டோம் என்பதற்காக இந்த பொய்ய எல்லாம்
மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேவையில்லாமல் வார்த்தைகளைவிட்டு வீண்வம்பை விலைக்கு வாங்கிவிட்டார்.இட ஒதுக்கீடு வழங்கிவிடுவதால் முசுலிம்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.முசுலிம்களின் பிரச்சினைகள் என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது என்கிற அளவில்தான் அமைச்சரின் சிந்தனை தேங்கி நிற்கிறது என்று தெரிகிறது.முதலாவதாக முசுலிம்களுக்கு தேவைப்படுவது கல்வியும், சமூகத்தில் ஒரு கவுரவத்தை அளிக்கும் அரசு வேலை வாய்ப்பும்தான் என்பது வளரவேண்டிய ஒரு சமூகத்துக்குத் தேவையானவையாகும்.இன்னொரு வகையில் பார்த்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியும் அவசியம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதுவும் வளர்ந்துவரும் இந்த விஞ்ஞான உலகில் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி மிக அவசியமே!முசுலிம் மக்களின் கல்வி நிலை எந்த நிலையில் இருக்கிறது என்கிற விவரம் அமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.தொடக்கப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் எண்ணிக்கையில் முசுலிம் மாணவர்களின் வீழ்ச்சி அதிர்ச்சிதரக் கூடியதாக உள்ளது.இதன் காரணமாக உயர்கல்வியில் முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.4.1.2009 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு புள்ளி விவரம் வெளிவந்தது. இந்தியாவில் பல பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் மேல்படிப்புச் சேர்க்கையில் அவரவர் சமூகத்தில் எவ்வளவு விகிதாச்சாரம் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் அது. இந்தக் கணக்கீட்டுக்கு கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ (நி.ணி.ஸி) என்று கூறுகின்றனர்.இதன்படி பார்க்கும்பொழுது கிறித்துவர்களின் ஜி.இ.ஆர். 19-.85 விழுக்காடாகும். சீக்கியர்கள் 17.81 விழுக்காடாகும். இந்து தாழ்த்தப்பட்டவர்கள் 7.37 விழுக்-காடாகும். முசுலிம்கள் 7.7 விழுக்காடாகும். கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையில்தான் முசுலிம்கள் உள்ளனர் என்பது இந்தப் புள்ளி விவரம் மூலம் அறிய முடிகிறது. முசுலிம்களில் எழுத்தறிவு பெற்வர்களின் விழுக்காடு 42 தான். தேசிய சராசரியைவிட இது மிகவும் குறைவானதாகும்.மெத்த படித்த அமைச்சராகவும் ஆகியுள்ள சல்மான் குர்ஷித் இந்த விவரங்களையெல்லாம் அறிந்திருந்தால் வெறும் வார்த்தைகளை கொட்டியிருக்க மாட்டார்.முசுலிம் மக்களின் சமூக நிலையைக் கணித்துதான் சச்சார் கமிஷனும், அதனைத் தொடர்ந்த ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் அமைக்கப்பட்டன. முசுலிம்களுக்கு தேசிய அளவில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்த ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதுகூட அமைச்சருக்குத் தெரியவில்லை போலும்.தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் முசுலிம்களின் இட ஒதுக்கீடுக்கு வகை செய்துள்ளன. அரசுப் பணி-களைப் பொறுத்தவரை முசுலிம்கள் 5 விழுக்காட்டுக்கும் கீழே உள்ளனர் என்று சச்சார் ஆணையம் கூறுகிறது.அர்ஜூன் சென்குப்தா அறிக்கையோ, இந்தியாவில் உள்ள முசுலிம்களில் 85 விழுக்காட்டினர் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், தனி நபர் மாத வருமானம் ரூ.600-_க்கும் கீழ்தான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும். உயர்கல்வி பெறவேண்டும் என்ற நினைப்பும் செயல்பாடும் எங்கிருந்து குதிக்கும்?தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு தி.மு.க. அரசு வழி செய்தது.சில நாள்களில் கிறித்துவர்கள் தங்களுக்கு அளிக்கப்-பட்ட 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறிவிட்டனர். காரணம், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்த மூன்றரை சதவிகிதத்தைவிட கிறித்துவர்கள் அதிகமாகவே பலன் பெற்று வருகின்றனர். ஆனால், முசுலிம்களோ இந்த மூன்றரை விழுக்காடு இட ஒதுக்கீடுக்கும் பச்சைக் கொடிகாட்டி விட்டனர். காரணம், இவர்களின் நிலைமை அதளபாதாளத்தில் கிடப்பதுதான். இதனையெல்லாம் புரிந்துகொண்டு இனிமேலாவது அமைச்சர் நிலையில் உள்ளவர்கள் பொறுப்புணர்ச்சியோடு எதையும் அளந்து பேசுவது நல்லது.
நன்றி;விடுதலை.
நன்றி;விடுதலை.
புதுவையில் ரோடியர் மில்லை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் பனபாக லட்சுமியிடம் தொழிற்சங்க தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.
மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பனபாக லட்சுமி நேற்று மாலை புதுவை வந்தார். அவரை அமைச்சர் வல்சராஜ், ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ராஜ்நிவாசில் வரவேற்றனர்.
இந்நிலையில் இன்று காலை மத்திய இணையமைச்சர் பனபாக லட்சுமி ரோடியர் மில்லுக்கு சென்று பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் வல்சராஜ் ஆகியோரும் உடன் சென்றனர்.
ரோடியர் மில்லில் ஆய்வு மேற்கொண்ட பனபாக லட்சுமியிடம் ஐஎன்டியூசி தலைவர் ரவிசந்திரன், தொமுச தலைவர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க தலைவர் சின்னதுரை, ஏஐடியூசி தலைவர் அபிஷேகம், புமுகா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் மனு அளித்தனர்.
அதில் அவர்கள், ரோடியர் மில் நஷ்டத்திற்கு தொழிலாளர்கள் காரணமல்ல என்றும், மில்லை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்காததால்தான் இந்நிலை ஏற்பட்டதென்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மில்லினை நவீனப்படுத்த ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க நிதி பொறுப்பில் உள்ள உயர் அதிகாரியை நியமிக்க வேண்டுமென்றும், மில்லில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒரே விதமான அகவிலைப்படி வழங்க வேண்டுமென்றும், வாரிசுகளுகளுக்கு வேலை வழங்குவதுடன், மில்லுக்கு நவீன இயந்திரங்கள் வாங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
புதுவையில் பொறியியல் கல்லூரி மாணவன் கடத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ராக்கெட் ராஜா என்பவர் உட்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து யானை தந்தம், துப்பாக்கி மற்றும் அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன.
புதுவை பெரியக்கடை போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வெங்கட்டா நகர் பூங்கா அருகில் உள்ள பாழடைந்த மின் துறை அலுவலகத்தின் பின்புறம் அறிமுகமில்லாத நபர்கள் கூடியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்
இதனால் உஷாரடைந்த போலீசார், தப்பியோட முயன்ற 5 பேர் கும்பலை கைது செய்தனர். விசாரøணையில் அவர்கள், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ராக்கெட் ராஜா என்கிற ராஜா, கரிக்கலாம்பாக்கம் தேவதாஸ், முதலியார்பேட்டை பெருமாள், சாரதி தெருவைச் சேர்ந்த ராஜேஷ், வேல்ராம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, அரிவாள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இவர்களில் ராக்கெட் ராஜா என்பவர் புதுவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் கடத்தல் வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்த கும்பல் வெங்கட்டா நகரில் பதுங்கியிருந்து கொண்டு அவ்வழியே செல்வோரை தாக்கி பணம் பறிக்க திட்டமிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், குற்றவாளிகள் கொடுத்த தகவலின்பேரில் புதுவை தில்லை மேஸ்திரி வீதியில் வசிக்கும் முகமது ரியாஸ் என்பவரிடம் அவருடைய உறவினரிடமிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களும் கைப்பற்றப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.புதுவை வெங்கட்டா நகரில் குற்றச்செயலில் ஈடுபடவிருந்த கும்பலை கைது செய்த பெரியகடை போலீசாருக்கு சீனியர் எஸ்பி ஸ்ரீகாந்த் மற்றும் வடக்கு எஸ்பி சிவதாசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
புதுவையில் வீட்டு வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கு முன்பு அவர்களின் புகைப்படங்கள் மற்றும் முழு விபரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்று சீனியர் எஸ்பி ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் வசித்து வரும் மதியரசன் என்பவரது வீட்டில் இருந்த 60 பவுன் நகையை அவருடைய வீட்டில் வேலைக்காரியாக வேலை பார்த்த பரிமளா என்பவர் திருடிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த பரிமளாவை கைது செய்து நகையினை மீட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சீனியர் எஸ்பி ஸ்ரீகாந்த் கூறுகையில், வீடுகளில் பணியாளர்களை வேலைக்கு வைப்பதற்கு முன்பு அவர்களின் புகைப்படங்கள், கைரைகைகள் மற்றும் முழு விபரங்களை தெரிந்து வைத்திருந்தால் இதுபோன்ற திருட்டுகளில் இருந்து உடனடியாக அடையாள காண முடியுமென்றும், இதற்கான தனி விண்ணப்பங்களை காவல் துறை வெளியிட்டுள்ளதென்றார்.
பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் மற்றும் கவனம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும்.
ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்பபடி தேர்வு செய்யலாம். மற்றபடி வடிவமைப்பில் புதுமைகள் அதிகம் சாத்தியமில்லை.
இந்த நிலையை மாற்ற வந்திருக்கிறது ஒரு இணையதளம். ஷர்ட்ஸ்மைவே என்னும் இந்த தளத்தை இண்டெர்நெட் டைலர் என்றும் சொல்லலாம். இந்த இணைய டைலரிடம் உங்கள் விருப்பம் போல் சட்டையை தைத்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தின் மூலம் சட்டை வடிவமைப்பை தேர்வு செய்வது சுலபமானது.ஆர்டர் செய்வதும் சுலபமானது.
டென்மாரக் நாட்டைச்சேர்ந்த வாலிபர்கள் துவங்கியுள்ள இந்த தலத்தை உலகின் எந்த மூலையிலிருந்தும் பயன்படுத்தலாம். சட்டையை உங்கள் இருப்பிடத்திற்கே அனுப்பிவைத்து விடுகின்றனர். கட்டணத்தை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இனி ஒரே மாதிராயான சட்டையை அணிய விரும்பாதவர்க்ள் தாராளமாக இந்த இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
—-
link;
ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்பபடி தேர்வு செய்யலாம். மற்றபடி வடிவமைப்பில் புதுமைகள் அதிகம் சாத்தியமில்லை.
இந்த நிலையை மாற்ற வந்திருக்கிறது ஒரு இணையதளம். ஷர்ட்ஸ்மைவே என்னும் இந்த தளத்தை இண்டெர்நெட் டைலர் என்றும் சொல்லலாம். இந்த இணைய டைலரிடம் உங்கள் விருப்பம் போல் சட்டையை தைத்துக்கொள்ளலாம்.
இந்த தளத்தின் மூலம் சட்டை வடிவமைப்பை தேர்வு செய்வது சுலபமானது.ஆர்டர் செய்வதும் சுலபமானது.
டென்மாரக் நாட்டைச்சேர்ந்த வாலிபர்கள் துவங்கியுள்ள இந்த தலத்தை உலகின் எந்த மூலையிலிருந்தும் பயன்படுத்தலாம். சட்டையை உங்கள் இருப்பிடத்திற்கே அனுப்பிவைத்து விடுகின்றனர். கட்டணத்தை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இனி ஒரே மாதிராயான சட்டையை அணிய விரும்பாதவர்க்ள் தாராளமாக இந்த இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
—-
link;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக