புதன், 24 ஜூன், 2009

2009-06-24


சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார். எந்த கஷ்டம் வந்தாலும் என்னை கைவிட மாட்டார் என நம்புகிறேன் - சொன்னர்வர் நடிகை ஸ்ரேயா.

என்ன சொல்லுகிறார் ஸ்ரேயா ?

நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா , அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். ( அதான் வந்துட்டீங்களே )

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள். ( அப்படியா ? )

இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.

நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா. ( அப்ப ரஜினி ? )

யார் ராசியான நடிகர் ? ஜெயம் ரவியா ? ரஜினியா ?

Tamilish - தமிழ்
புதிய வகுப்பறைகளின் திறப்புவிழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாம் கலந்துகொண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

"நான் குடியரசு‌த் தலைவராக இருந்தபோதும், இப்போது இந்தியாவிலோ அல்லது அய‌ல்நாடுகளுக்கோ செல்லும்போதும் பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வகுப்பறைகள் மாணவ-மாணவிகளை ஈர்க்கும் வகையிலும் படைப்பாற்றலை தூண்டும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள்.

ஆசிரியர் பணியை விரும்பி செய்யக்கூடிய நபர்கள் ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும். ஒரு மாணவனை நல்ல முறையில் உருவாக்குவதில் பெற்றோருக்கும், தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கும் பெரும் பங்கு உண்டு. மாணவர்கள் ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தால் நிச்சயம் குறிக்கோளை அடைய முடியும். அதை நினைத்து கனவு காண வேண்டும்.

இப்போது நானும் ஒரு கனவு காண்கிறேன். கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற பாகுபாடு இல்லாத இந்தியாவை, அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய இந்தியாவை, லஞ்சமும், ஊழலும் இல்லாத இந்தியாவை, வெளிப்படையான அரசு நிர்வாகம் நடக்கக்கூடிய இந்தியாவை, தீவிரவாதம் இல்லாத இந்தியாவை காண வேண்டும் என்று கனவு காண்கிறேன்.

இவை எல்லாம் நடக்கக்கூடிய காரியமா? என்று கேள்வி எழலாம். கண்டிப்பாக நடக்கும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால், அதற்கேற்ப செயல்பட்டால் நிச்சயம் சாத்தியம்தான். "
 





 

மும்பை : பெரியம்மா கொடுத்த வரதட்சணை புகாரின் அடிப்படையில் 2 மாத கைக்குழந்தையின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான். இவர், தனது மனைவி ஷகிலாவை 2 ஆண்டுக்கு முன் விவகாரத்து செய்தார்.பின்னர், ரேஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரேஷ்மாவுக்கு 2 மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. 
 
 
   குழந்தைக்கு ஜோயா என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் சம்சுதீன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்தியதாக ஷகிலா போலீசில் புகார் செய்தார். 2 ஆண்டுக்கு முன்பே விவாகரத்து பெற்ற போதும், அந்த புகாரில் தன்னை கொடுமைப் படுத்துபவர்கள் பட்டியலில் ரேஷ்மா மற்றும் 2 மாத கைக்குழந்தை ஜோயாவின் பெயரையும் ஷகிலா குறிப்பிட்டிருந்தார். சம்சுதீன் கான், ரேஷ்மா, ஜோயாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். மதியம் 1 மணிக்கு போலீஸ் நிலையம் வந்தவர்களை இரவு 10 மணிக்குதான் திருப்பி அனுப்பினர். வேறு வழியின்றி, போலீசார் முன்னிலையில்தான் குழந்தைக்கு தாய்பால் கொடுத்ததாக ரேஷ்மா கூறினார். முதல் தகவல் அறிக்கையில், குற்றவாளிகளாக குழந்தை ஜோயா உட்பட 8 பேரின் பெயரையும் போலீசார் சேர்த்தனர். 2 மாத கைக்குழந்தையின் பெயரை சேர்க்காதீர்கள் என்று போலீசிடம் ரேஷ்மா கெஞ்சினார். ஆனால்,   குழந்தையின் பெயரை வழக்கில் சேர்ப்பது முதல் முறை அல்ல என்று போலீசார் கூறிவிட்டனர். 
 

  ஜோயா உட்பட 8 பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி சர்தேசாய் குழந்தை ஜோயா உட்பட 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கினார். சம்சுதீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார். பெரியம்மாவின் புகாரின்பேரில் 2 மாத கைக்குழந்தை மீது வரதட்சணை கொடுமை வழக்கு போட்ட போலீசுக்கும், குழந்தைக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கும் சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்டநிபுணர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ÔÔ2 மாத குழந்தை மீது வழக்கா? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. புகார் கொடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்Õ என்றார்.மும்பை முன்னாள் மேயரும் வக்கீலுமான நிர்மலா சவந்த் கூறுகையில், ÔÔ7 வயது வரை ஒரு குழந்தையை அப்பாவியாகவே சட்டம் கருதுகிறது. ஏனென்றால், எது சரி, எது தவறு என்று அந்த குழந்தைக்கு அதுவரை தெரியாது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இளம்சிறார் சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த நிலையில் 2 மாத கைக்குழந்தை மீது வழக்கு போட்டது விந்தையாக இருக்கிறது. அந்த குழந்தைக்காக முன்ஜாமீன் கேட்டிருக்கவே வேண்டாம். நீதிமன்ற வரலாற்றில் சிறு குழந்தைக்கு எந்த நீதிபதியும் முன்ஜாமீன் கொடுத்தது இல்லை. குழந்தை ஜோயாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டதுÕÕ என்றார்.
 

 

 



ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் அஜீத் பாண்டே என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

பிரபல தயாரிப்பாளர் ராமானந்த் சாகரின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்புப் பிரிவு தலைவராகவும், ஆடை வடிவமைப்பு இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் பாதிக்கப்பட்ட அந்த நபர்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜாவேத் கூன் என்ற கேரக்டரில் நடித்தவர்தான் அஜீத் பாண்டே. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இயக்குநரை அணுகிய அவர் தனது பெயர் இர்பான் ஹுஸ்ரி என்றும், சோட்டா ஷகீலின் தம்பி எனவும் கூறி மிரட்டியுள்ளார். அஜீத் பாண்டே என்பவருக்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், பாதிக்கப்பட்ட நபரரை அணுகிய பாண்டே, தன்னை ஹூஸ்ரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சோட்டா ஷகீலின் தம்பி என்றும் கூறியுள்ளார். அஜீத் பாண்டேவுக்கு நடிக்க வாய்ப்பு தருமாறும் மிரட்டியுள்ளார்.

ஆனால் அப்படியெல்லாம் திடீரென யாருக்கும் வாய்ப்பளிக்க முடியாது என அந்த இயக்குநர் கூறவே, அப்படியானால் ரூ. 20 லட்சம் கொடு, இல்லாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். பின்னர் அவர் போய் விட்டார்.

இதுகுறித்து அந்த இயக்குநர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். இயக்குநரின் செல்போனில் முன்பு பேசியிருந்தார் பாண்டே. அதை வைத்து எங்கிருந்து போன் வந்தது என்பதை அறிந்தோம்.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தில் அந்த போனுக்கான சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தது. அஜீத் பாண்டேதான் தனது பெயரில் அதை வாங்கியிருந்தார் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து பாண்டேவுக்கு வலை விரிக்கப்பட்டது. பயந்தார் ரயில் நிலையத்தில் வைத்து பாண்டேவை போலீஸார் கைது செய்தனர் என்றார் ராகேஷ் மரியா.

ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சில முக்கிய சீரியல்களில் நடித்தவராம் இந்த பாண்டே.

நடிக்க வாய்ப்பு கேட்டு தாதாவின் பெயரை பயன்படுத்திய பாண்டே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப்
வெங்காயம் - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
புதினா - சிறிது
பச்சை மிளகாய் - 3
பட்டர் அ நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தயிர் - 125கிராம்

தாளிக்க:

ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -3
பட்டை - 1 சிறு துண்டு

செய்முறை:

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.
*அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பட்டர் போட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா+தயிர் சேர்த்து வதக்கவும்.

*1 கப் அரிசிக்கு = 11/2 கப் தண்ணீர் விகிதம் 3 கப் அரிசிக்கு 41/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு+அரிசி போட்டு மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை உடையாமல் கிளறவும்.

பி.கு:
விருப்பப்பட்டால் பாதி தண்ணீர்+பாதி தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.நெய் சாதத்துடன் மட்டன்,சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.



  அமரர் கல்கி - சோலைமலை இளவரசி : அத்தியாயம் 4 - வன்மம் வளர்ந்தது, அதிகாலை.காம், வழங்குபவர் : பானுப்ரியா, நியு ஜெர்சி.  தரவிறக்கம் : கல்வி - சோலைமலை இளவரசி : வன்மம் வளர்ந்தது  

கருத்துகள் இல்லை: