வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

ஆனால் அதைக் கற்கின்ற சமூகக் கூறுகள் எல்லாம், 30 வருட இனவழிப்பு யுத்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இதைப் பகுதியளவில் தன்னும், மீட்கும் இரண்டு இணையங்கள்.

அடிப்படைக் கல்வி முதல் வாழ்வுசார் கல்வியை பெறும் வகையில், இவ் இரண்டு இணையங்களும் உள்ளதால் அதை .....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத' பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டி- காவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

*****************************************************************************



5. வாமன அவதாரம் (குள்ளப் பார்ப்பான்)

கதை: மாவலி சக்ரவர்த்தி பேரும் புகழும் பெற்று விளங்கினான். அவனை ஒழிக்க விஷ்ணுவிடம் வழக்கம்போல ஆரியப் பார்ப்பனர்கள் வேண்டினார்கள். யாசகம் என்று கேட்பவர்களுக்கெல்லாம் முப்பத்திரெண்டு வகை தானங்களையும் இல்லை என்னாது கொடுக்கும் தண்ணளியானை ஒழிக்க விஷ்ணு திட்டமிட்டான்.

குள்ளப் பார்ப்பான் வேடம் கொண்டு யாகசாலைக்காக மூன்றடி மண் தானமாகக் கேட்டான் விஷ்ணு. வள்ளலாயிற்றே மாவலி - அளிப்பேன் என்றான். உடனே அந்த வாமனன் (பார்ப்பான்) ஆகாயத்திற்கும், பூமிக்கும் விக்ரம ரூபமெடுத்து பூமியை ஓரடியாகவும், ஆகாயத்தை இன்னொரு அடியாகவும் அளந்துகொண்டு, மற்றொரு அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மாவலி தன் தலையைத் தாழ்த்திக் காட்ட அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்து பாதாளம் போகுமட்டும் அழுத்தித் தீர்த்துக் கட்டினான்.


கேள்வி: நல்லவர்களாக இருப்பவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள் எண்ணமா? அதற்குத் துணை போவதுதான் காத்தல் கடவுளாகக் கூறப்படும் விஷ்ணுவின் வேலையா?

வஞ்சனையின் வடிவம் என்பது பார்ப்பான்தான் என்பதும் இதன்மூலம் விளங்கவில்லையா?


------------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
................................

நம்ம நடிகர்களுக்கு மலேசிய அரசாங்கம் மலேசியாவுக்கான கௌரவ குடியரிமை வழங்கினால் அவர்களின் மைகாட் எனப்படும் அடையாள அட்டை எப்படி இருக்குமென ஒரு கற்பனை.........




வாஜி வாஜி சிவாஜி



மொட்டை பாஸ் எவ்வளவு காலம்தான் தலையத்தடவுறது.......



என்னப்பா நம்ம தலயும் அரசியல்ல இறங்கிறாரா???



இனியாவது சாமிநாதனுக்கு அட்வான்சை திருப்பிக்கொடுங்க சார் !!!!!!!!!!!!!!



கடசியா வந்த படங்களெல்லாம் புட்டுக்கிடுச்சி அப்படியே அரசியல்பக்கம் தாவிட்டா????




சார்...உங்களுக்கு கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்....'




புன்னகை இளவரசி பவானி ஐபிஎஸ்-ல் தூள் கிளப்புறாராமே உண்மையாப்பர??
புதுவை அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் தனியார் சாராய ஆலையை மீண்டும் நிறுவக்கூடாதென்று அப்பகுதி பொதுமக்கள் முதல்வர் மற்றும் கலால் துறை துணை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
புதுவை அருகே உள்ள லிங்காரெட்டிபாளையம், காட்டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம், நாராயணபுரம், வி.புதுப்பாக்கம், ரங்கநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை முதல்வர் வைத்திலிங்கம் மற்றும் கலால் துறை ஆணையர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் அவர்கள், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு லிங்காரெட்டிபாளையத்தில் இயங்கி வந்த தனியார் சாராய ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சம்பந்தபட்ட ஆலை மூடப்பட்டதென்றும், ஆனால் தற்போது அந்த ஆலையை துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் விவசாயத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் ஆலைக்கு அனுமதி அளிக்ககூடாதென்று வலியுறுத்தினர்.
இந்த மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் வைத்திலிங்கம், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.


நாயும்
பொண்ணும்

ஹலோ அம்மா ,
நான் ஆகாஷ் கதைக்கிறன் . நீங்க அனுப்பிய பொண்ணின் படத்தைப் பார்த்தேன்.
கருப்பா, நீண்ட மூஞ்சியோட, பெரிய காது, சின்ன கழுத்து, பட்டிக் காடுமாதிரி நீண்ட கூந்தல்.
சீ சீ இந்தப் பொண்ண எப்படியம்மா நான் கலியாணம் கட்டுறது?
வேண்டாம் என்று சொல்லிடுங்க.

ஹாய் அரவிந்தன்,
நான் ஆகாஷ் கதைக்கிறன். நீ மெயிலில் அனுப்பிய படத்தைப் பார்த்தேன்.
கருப்பா, நீண்ட மூஞ்சியோட , பெரிய காத்து, சின்ன கழுத்து, நீளமா வால், பியூட்டிபுல் நாய்க் குட்டி மச்சான் .
இப்பவே அட்வானன்ஸ் கொடுத்துடு.


நாயும் மனிதனும்


வீட்டுக்காரி -
டேய் ராமு ...
எத்தனை தடவை சொல்லியிருக்கேன் நாய்க்கு பழைய சோறு வைக்க வேண்டாமென்று.

ராமு-
இல்லையம்மா , நேற்றுத்தான் சமைச்சது நல்லா பழுதாகல அதுதான்...
சரியம்மா இனி வைக்கமாட்டேன். இதை அப்படியே குப்பையில போட்டு விடுறேன்

வீட்டுக்காரி -
குப்பையிலா? அப்படியே ஓரமா வை.
யாராவது அம்மா தாயே என்று கத்திக் கொண்டு வருவானுகள் ...
கொடுக்கலாம்.

பி.கு- இங்கு ராமு என்பது கணவன் என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல.


More than a Blog Aggregator

by மானுடம்

கருத்துகள் இல்லை: