வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25

துபை வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் , அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களை ஈ டி ஏ அஸ்கான் இல்லத்தில் முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,லால்பேட்டை இளைஞரணி செயலாளராக பணியாற்றிய என்.ஹெச்.முஜீபுர் ரஹ்மான்,மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய எஃப்.முஹம்மது ஃபைசல்,எம்.கிஃபாயத்துல்லாஹ் ஆகியோர் நேரில் சந்தித்து சல்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் அல்ஹாஜ்.லியாகத் அலி,துணைச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான்,ஊடகத்துறை பொருப்பாளர் முதுவை ஹிதாயத்,ஹமீத் யாசீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இவர்களுக்கு என்ன தண்டனை?

அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதால் கெட்டவை நடக்கும் என்று கருநாடக மூடநம்பிக்கையாளர்கள் ஹரி-ஹேமா எனும் இணையர் எழுதி இருக்கிறார்களாம்.

ஜூலை 7 இல் சந்திர கிரகணம், 22 இல் சூரிய கிரகணம், ஆகஸ்ட் 6 இல் சந்திர கிரகணம் ஏற்படவிருக்கின்றன.

புராணகாலத்தில் இதே மாதிரி ஏற்பட்ட போது, பாரதப் போர் ஏற்பட்டதாம்; துவாரகை கடலில் மூழ்கியதாம்; முதல் உலகப்போரும் இரண்டாம் உலகப் போரும் ஏற்பட்டனவாம்.
ஆகவே உலகில் தீய விளைவுகள் ஏற்படும் என்று இவர்கள் உளறியதை தினமலர் ஏடு எடுத்து வெளியிட்டுள்ளது.

ஒளிதரும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் மறைவதும், அதே போலவே சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது நிலவு மறைந்து காணப்படுவதும் இயல்பு. இதற்கும் பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தமிழ்நாடு அறிவியல் சங்கத்தினரும் அறிவித்துள்ளனர்.

அறிவியல் செய்தியைப் போடாத ஏடு, மூடநம்பிக்கைச் செய்தியை மட்டும் எழுதி மூட நம்பிக்கையை வளர்க்கிறது.

உலகம் மூழ்கப் போகிறது என நாள் குறித்துக் கூறிவிட்டு ஆல்ப்ஸ் மலையில் ஏறிக்கொண்ட முட்டாள்களையும் பார்த்தோம்.

உலகம் அழியப்போகிறது என்று கூறி அபாய அறிவிப்புச் செய்த அறிவிலிகளையும் பார்த்தோம்.

சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வினால் உலகம் உடையப் போகிறது எனக்கூறி கோளறு பதிகம் பாடிய பக்த மண்டுகளையும் பார்த்தோம்.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது அடிப்படைக் கடமை. அதைச் செய்யாமல், அதற்கு எதிராகச் செயல்படும் இவர்களுக்கு என்ன தண்டனை?

-------------------"விடுதலை" 24-6-2009

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஒரு அழகிய பிளாக்கர் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன்.  இதில் உள்ள வசதிகள் * தேடுபொறிகளுக்கு ஏற்றவகையில் உங்கள் பதிவுகளின் தலைப்பை காட்டுதல் * தமிழ்மண கருவிப்பட்டை இணைக்கப்பட்டுள்ளது. * தமிழ் புக்மார்க் தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. * நீங்கள் இடும் பதிவுகளை எத்தனை பேர் வாசித்தார்கள் என காட்டும் நிரலி இணைக்கப்பட்டுள்ளது. வார்ப்புருவை தரவிறக்க இங்கே அழுத்தவும்

கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் உபயோகத்தில் நாளாக பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று ஹார்ட்டிஸ்க் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.

அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.

இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.

இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.

இதன்
மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ளை போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அளித்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: