வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25



More than a Blog Aggregator

by பா.ராஜாராம்


மி
ன் கம்பியியில் இருந்துகொண்டிருக்கிறது
இருக்க மரம் இருந்தும்
உச்சிபொழுதில் ஒரு காகம்.

புழுதியை எற்றி விளையாடியபடி
அப்பளப்பூ வாங்கி போய் கொண்டிருக்கிறாள்
செம்பரட்டை சிறுமி ஒருத்தி.

பூவரச மரத்தடியிலமர்ந்தபடி
புடைத்தோ சலித்தோ பொழுதடைத்துகொண்டிருக்கிறாள்
ராக்காயி அப்பத்தாவை
போன்றொரு அப்பத்தா.

சிவனே என்று நின்று கொண்டிருந்த
கோயில் காளையொன்றை
சிறுநீர் விட்டழைத்து
கொண்டு போய் கொண்டிருக்கிறது
செவலை பசு.

ருக்கசொல்லி போனவருக்காக
இருந்துகொண்டிருக்கிறேன்...
முதலில் சில்லென்று இருந்த
திண்ணை ஒன்றில்!

அலுவலகத்தில் சில/பல காரணங்களுக்காக பல வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதுண்டு. (எங்க அலுவலகத்தில் தமிழிஷ் தடைசெய்யப்பட்டுள்ளது). அவ்வாறான வலைத்தளங்களை பார்ப்பது எப்படி?. மிகவும் எளிது

இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com







இங்கு நீங்கள் பார்க்கவேண்டிய வலைதள முகவரியை டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் வலைத்தளம் உங்கள் கையில்.




அலுவலகத்தில் சில/பல காரணங்களுக்காக பல வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதுண்டு. (எங்க அலுவலகத்தில் தமிழிஷ் தடைசெய்யப்பட்டுள்ளது). அவ்வாறான வலைத்தளங்களை பார்ப்பது எப்படி?. மிகவும் எளிது

இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com







இங்கு நீங்கள் பார்க்கவேண்டிய வலைதள முகவரியை டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் வலைத்தளம் உங்கள் கையில்.





தொடர் முயற்சிகள் செய்துவருகிறேன்

நீர் ஓவியம் பயில குருநாதர் யாரும் கிடைக்கவில்லை

இது எனது சொந்த முயற்சி

தேவையானப்பொருட்கள்:

மொச்சைக்கொட்டை - 1 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மொச்சைக்கொட்டையை சிவக்க வறுத்து, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உப்பு, புளி இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, பிழிந்து, புளித்தண்ணீரைத் தனியாக எடுக்கவும். புளித்தண்ணீர் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் வேக வைத்த மொச்சைக்கொட்டை, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். குழம்பு நனறாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டுக் கிளறவும். மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.
பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கட், வாஷிங் பவுடர் ஆகிய பொருட்களின் எடையை குறைத்தது மட்டும் அல்லாமல் விலையையும் உயர்த்தி விற்பனை செய்வதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினார்கள்.

சோப்பு, பவுடர், பிஸ்கெட், சாக்லேட், ஷாம்பு, வாஷிங் பவுடர் உள்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்களை இந்தியாவில் உள்ள பிரபல நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் தயார் செய்துவருகிறார்கள். இவர்கள் தயார் செய்யும் பொருட்கள் தரமானதுதானா? எடை சரியாக உள்ளதா? சரியான விலையில் விற்பனை செய்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால் இந்த அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சமீப காலமாக உற்பத்தியாளர்கள் தயார் செய்யும் பொருட்களை கண்காணிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் விற்பனை வரியை மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் உற்பத்திசெய்யும் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டம் போல உயர்த்துவது பற்றி கொஞ்சம் கூட அதிகாரிகள் கவலைப்படுவது இல்லை. இதனால் வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் சோப்பு, பிஸ்கெட், பவுடர், சாக்லேட், வாஷிங் பவுடர் போன்ற பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் மாதந்தோறும் உயர்த்தி வருகிறார்கள். மேலும் படிக்க

கருத்துகள் இல்லை: