வியாழன், 25 ஜூன், 2009

2009-06-25

புதுவை பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி உட்பட 27 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் தட்டாஞ்சாவடி, கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் தொகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட நாராயணசாமி, தனக்கு ஆதவராக பிரச்சாரம் செய்யும்படி முன்னாள் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து 3 முறை வலியுறுத்தினார். ஆனால் கடந்தகால கசப்பானசம்பவங்களை மனதில் கொண்டு கடைசி வரை நாராயணசாமிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிரச்சாரம் செய்யவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் முடிவின்போது ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாசுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாராயணசாமி, கட்சிக்கு எதிராக பணியாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என்று சூளுரைத்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்களான உழவர்கரை நகரமன்ற தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணின் நோட்டிஸ் அனுப்பினார்.

இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு இதேப்போல் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருப்பதுடன், அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் கட்சி தலைவர் அறிவித்துள்ளபடி, தங்களின் நிலைப்பாடு குறித்து விளக்க அளிக்க ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவத்திலிருந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி மீள்வதற்குள் அவரையும், அவரது ஆதரவு நகரமன்ற உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கும் சம்பவம் தட்டாஞ்சாவடி, கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் தொகுதிகள் மட்டுமின்றி ரங்கசாமியின் ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் வேண்டுமென்றே தங்களை குறிவைத்து தாக்குவதாக முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் கூறுகின்ற அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தரப்பிலும் அவர்களது நியாயத்தை முன்வைத்து பேச துவங்கி உள்ளனர். காங்கிரசை சேர்ந்தவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது எதிரணிக்கு பணியாற்றிய விபரங்கள், மற்றும் வாய்மொழி உத்தரவு உட்பட பல்வேறு விஷயங்களை தற்போது மாநில காங்கிரசை ஆட்டி படைக்கும் முக்கிய தலைவரின் ஆதரவாளர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவைதான் என்றும், இது எதிர்பார்த்ததுதான் என்றும் தட்டாஞ்சாவடி பகுதியில் பரவலாக பேசப்படுகிறது.

ராஜ்யசபா பதவியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டுமென்று புதுவை மாநில நிர்வாக குழு கூட்டத்தில் வலியுறுத்திய தீர்மானத்திற்கு தலைமைக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாநில திமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவை தலைவர் சுப்புராயன், மாநில அமைப்பாளர் ஜானகிராமன் , சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்பி சிவக்குமார், சிவா, ராஜாராமன், எம்ஏஎஸ் சுப்பிரமணியன், நந்தா சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோமசுந்தரம், அனிபால் கென்னடி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதுவையில் கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலும், உறவு மென்மேலும் வலுப்பெறும் வகையில் ராஜ்யசபா எம்பி பதவியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டுமென்று கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதென்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்ககளிலும் வெளியான நிலையில், இதுபோன்ற தீர்மானத்திற்கு திமுக தலைமைக்கழகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில திமுக நிர்வாக குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கட்சியின் தலைமை வேறு விதமாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்திருப்பது திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு ஒட்டுமொத்த பிளாஸ்டிக் பொருட்களையும்தடை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரை லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணிக்கு ஏஎப்டி மில் அருகில் இருந்து சட்டசபை நோக்கி பிளாஸ்டிக் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பங்கேற்கும் பேரணி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் வைத்திலிங்கத்தை சந்தித்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தாங்களே மீண்டும் எடுத்து மறுசுழற்சி செய்ய போதிய இடம் ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த முதல்வர் வைத்திலிங்கம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: