ராணுவம் மாதிரி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் கமல் தனது ரசிகர் மன்றங்களை. அவர் சொல்வதை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறவர்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் கமலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி கமல் திரைத்துறைக்கு வந்து சரியாக ஐம்பது வருடம் நிறைவு பெறுகிறது. ஐம்பது வருடங்களுக்குமுன் இதே நாளில்தான் அவர் களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானார். இதை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். ஆனால், எளிமையாக கொண்டாடினால் போதும் என்று கமல் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
கமல் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காத அவரது ரசிகர்கள் இந்த விஷயத்தில் மட்டும் அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. ஐம்பதாவது பொன் விழாவுக்கு பிரமாண்டமான விழா எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கமலின் சம்மதத்தையும் பெற்றிருக்கிறார்கள். அன்றைய தினம் கமலின் புதிய படமான உன்னைப்போல் ஒருவனை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கமல்.
உன்னைப்போல் ஒருவனின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும். போஸ்ட் புரொடக்சன் பணிகளில் சில வாரங்கள் நடக்கும். ஜூலையில் ரிலீஸுக்கு தயாராகிவிடும் இப்படம் ரசிகர்களின் வேண்டுகோளுக்காக ஆகஸ்ட் 12 திரைக்கு வருகிறது.

விக்ரம் நடிக்கும் அடுத்தடுத்த இரு படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் அரிதாக அமையும் வாய்ப்பு இது.
ஆஸ்கர் அளவுக்கு உயர்ந்தாலும் நேரம் ஒதுக்கி தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னத்தின் ராவண், ஷங்கரின் எந்திரன், கவுதமின் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னையில் ஒரு மழைக்காலம் என்று நீள்கிறது ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் பட்டியல்.
ராவண் படத்தின் இந்தி மற்றும் தமிழ் பதிப்புகளில் விக்ரம் நடித்து வருவது தெரியும்;. இதனை அடுத்து மோகன் நடராஜன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆதவன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும்போது பிற ஆட்டங்களை எவராவது கண்டு கொள்வார்களா என்ன? இந்தியா 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தோற்று மகத்தான வெளியேற்றம் கண்டபோது இந்திய மகளிர் அணியினர் இலங்கையைவீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்திருந்தார்கள். இந்திய மகளிர் இந்திய ஆண்களை விட எவ்வளவோ மேல் என்பதைச் சூசகமாக உணர்த்திய தருணம் அது. ஆனாலும் பெண்கள் ஆடும் ஆட்டம் என்பதால் அதுவும் முழுக்கால் சட்டை அணிந்து ஆட்டம் என்பதாலோ என்னவோ எவரும் கண்டு கொள்ளவில்லை. இந்த உலகம் இன்னமும் ஆண்களால் ஆதிக்கம் செய்யப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே :-)
சரி. அதை விடுங்கள். இலங்கை வீழ்ந்தது என்று அற்ப மகிழ்ச்சியடையும் அதே தருணத்தில் அதை விடப் பெரிதாக இன்னொரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நெஹ்வால் இந்தோனேசிய ஓப்பன் எறிபந்து(பாட்மிண்டன்) போட்டியில் வாகை சூடியிருப்பதுதான்.
சூப்பர் சீரிஸ் என்றழைக்கப்படும் போட்டியில் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்திக்கும் சாய்னாவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக இந்திய பாட்மிண்டன் கழகம் அறிவித்திருக்கிறது. ! 'தமிழ்நாட்டை ஆளும் தகுதி தமிழகக் காங்கிரசுக்கு உண்டு'ன்னு நம்ம தங்கபாலு அண்ணாச்சி சொன்னதை விடப் பெரிய நகைச்சுவையா 'இனிமேல் இந்தியாவில் பாட்மிண்டன் ஆட்டம் வலுப்பெறும்' என்று அந்தக் கழகம் அறிக்கை விட்டிருக்கு. அடங்கொய்யால!!இந்த அம்மணி ஜெயிச்ச விவரமே ஒரு பயலுக்கும் முழுசாத் தெரியலை. மாநில, மத்திய அரசுகள் சாய்னாவின் அமர்க்களமான வெற்றியைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.இதுல எங்கேருந்து வலுப்பெறும்??
இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்றேதும் விளையாட அவசியமில்லை என்று அரசே கருதுகிறதோ என்னவோ? ஒரு ஐ.பி.எல் ஆட்டத்தில் தேர்வு பெற்றாலே பல லட்சங்கள் சம்பாதிக்கும் நிலையில் கேவலம் இரண்டு லட்ச ரூபாய் பரிசுப் பணம் எத்தனை பேரை ஊக்குவித்து விடும்? இந்த லட்சணத்தில் பாட்மிண்டன் வளரும் என்று எந்த நம்பிக்கையில் பேசுகிறார்களோ தெரியவில்லை.
எது எப்படியோ, சாய்னாவுக்கு வாழ்த்துகள்.
லக்கிலுக் ஒருமுறை ஆ.ராசாவின் உரையை பிடிஎப் கோப்பாக அனுப்பியிருந்தார். இளைய தலைமுறை தலைவர்களில் இவரது ஆழ்த்த வாசிப்பனுபவம் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது...
வாழ்த்தி வரவேற்ப்போம்...!!!!
என்னை அவரது ரசிகனாக்கிய அந்த உரையை தரவிரக்கம் செய்ய சுட்டி இன்னொரு சுட்டி ( முதலில் இந்த சுட்டியை க்ளிக்கி 10 வினாடிகள் காத்திருக்கவேண்டும். பிறகு Create Download Link என்ற பொத்தானை அழுத்தினால், வேறு ஒரு பக்கம் திறந்து, கோப்பு தரவிறங்கும்...

தேவையானப்பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 1 கப்
சோளம் அல்லது அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு
செய்முறை:
வெங்காயத்தைத் தோலுரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பைத்தூவி, விரல்களால் மெதுவாக பிரட்டி விட்டு, வெங்காயத்துண்டுகளைத் தனித்தனியாக பிரிக்கவும். அதை அப்படியே பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை ஒரு கையில் எடுத்து, நன்றாகப் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் சோளம் அல்லது அரிசி மாவைத் தூவி பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டுத் துண்டுகள், சோம்புத் தூள், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசறவும். அதன் பின் கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிரட்டி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெங்காயதிலுள்ள நீரிலேயே மாவு ஒட்டிக் கொள்ளும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், அடுப்பை தணித்துக் கொள்ளவும். ஒரு கை மாவை எடுத்து இலேசாக விரல்களால் எண்ணையில் உதிர்த்து விடவும். பகோடா வெந்து சிவந்தவுடன், அரித்தெடுத்து வைக்கவும்.
இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான சாம்பார் சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
குறிப்பு: பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விட்டு, அதற்குப் பதிலாக சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம்...
மற்ற குறிப்புகளை பார்க்க, கமலாவின் அடுப்பங்கரைக்கே போயிருங்களேன்...

என் டி டி வியின் ரியாலிட்டி ஷோ, 'ராக்கிய கட்டிக்கோங்கடா' வில் என்ன பரபரப்பு தெரியுமா ? அதுக்கு முன்னாடி, இந்த ஷோவை பற்றி கொஞ்சம் சொல்லிடறேன்...
பாடகியும் நடிகையுமான ராக்கி ஷாவந்த், சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வது, பின் அதில் தேர்வாகும் நபரை மணந்துகொள்வது, இதுதான் ஆட்டமாம்...ஏற்கனவே ராகுல் காந்தியை கட்டிக்க விருப்பம் என்று பீதியை கிளப்பி ராகுல் ராக்கி இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் தேர்தல் பிரச்சாரத்தை கூட வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
அதற்குமுன் ஒரு பர்த் டே பார்ட்டியில் ராக்கியின் கிளுகிளு உடையை பார்த்து டென்ஷன் ஆன நடிகர் மிக்கா ராக்கியை வலுக்கட்டாய லிப் லாக் செய்தது குறிப்பிடத்தக்கது...
அதற்கு முன் பப்ளிக் ப்ளேஸ் ஒன்றில் இன்னொரு விளம்பர விரும்பி நடிகையின் உதட்டையும் பதம் பார்த்தவர் ராக்கி என்பது ஊர் அறிந்த ரகசியம்...

நல்லா கெளப்புராய்ங்கடா பீதிய என்று நினைத்திருந்தவேளையில்...
விண்ணப்பித்த 12500த்து சொச்சம் பேரில் ஷார்ட் லிஸ்ட் ஆன பதினாறு பேரையும் கல்யாணம் பண்ணிக்கரேனே என்று தடாலடி ஆட்டம் ஆடியுள்ளார் ராக்கி...
உதய்ப்பூரில் நடந்த இந்த எக்ஸாமில் ஒவ்வொருவரை நேரிலும் ஸ்க்ரீனிங் செய்தாராம ராக்கி...எவன் அப்பமூட்டு காசு, எல்லாம் என் டி டி வி செலவு...
மற்றபடி, தான் உதய்ப்பூரின் ராணி போல பீல் ஆகியதாக கொடுத்த காசுக்கு மேல் கூவினார் ராக்கி..
பதிவை எழுத ஆரம்பித்தபோது, கஷ்டப்பட்டு ராக்கி ஷாவந்தின் டீசண்ட் போட்டோ ஒன்றை போட்டுவிட்டேன்..அப்புறம் இன்னும் சில படங்களை போட நேர்ந்தபோது, 18+ போடவேண்டிய கட்டாயம். வேற வழி, கடைசியாக நான் போட வைத்திருந்திருந்த போட்டோவையே போட்டு தொலைகிறேன்...

கதை எழுத நேரம் இல்லையே, ஒரு சின்ன பதிவு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம் என்றாலும், பத்து நிமிடம் விழுங்கிவிட்டது இந்த பதிவு. எங்கிருந்தாலும் வாழ்க. இந்த பதிவுக்கு முக்கியமான ஒரு விஷயம் இங்கே உள்ளது. இதை ராக்கிக்கு பார்சல் அனுப்பினால் மகிழ்வார்... என்னோட பதிவு லதானந்த் பதிவை விடவா மோசமா இருக்கு ? அப்படி இல்லைன்னா ஒரு ஓட்டு போடுங்க...இருந்தாலும் போடுங்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக