இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.நன்றி : தினமலர்
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்ததாக செய்தி வெளியான உடனேயே அவரை குறித்த செய்திகள் மற்றும் விபரங்களை அறிய, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்டர்நெட்டை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கூகிள் வெப்சைட்தான். அவரது மரணம் குறித்த செய்திகளை விட அவர் குறித்த விபரங்களை அறிய நிறைய பேர் கூகிள் வெப்சைட்டை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் அவரது மரணம் குறித்த செய்திகளை அறிய லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெப்சைட்டை அதிகம் பேர் பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருக்கிறார்.எனவே உள்ளூர் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் தான் அவர் குறித்த செய்திகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருதியிருக்கிறார்கள்.நன்றி : தினமலர்

மலேசியாவில் 'அசல்' படப்பிடிப்பில் சிவனேன்னு தனது வேலையை செய்து வருகிறார் அஜித்.
அதற்குள் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வாரஇதழ் ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது.
தனது ரசிகர்மன்றத்தை மக்கள் இயக்கமாக இன்று ஆரம்பித்திருக்கலாம் விஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றம் இயக்கமாக செயல்படும் என அறிவித்தார் அஜித். "இயன்றதைச் செய் இல்லாதவருக்கு" என்பதுதான் தனது இயக்கத்துக்கு அஜித் சொல்லிக்கொடுத்த மந்திரம். தமிழகத்தில் மட்டும் அஜித்துக்கு 35 ஆயிரம் மன்றங்களும், எண்ணிக்கையில் கோடியை தாண்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் தன்னை எளிதான முறையில் தொடர்பு கொள்ளவும் இயக்கத்தை பலப்படுத்தவும் சில திட்டங்களை தீட்டியுள்ளாராம் அஜித். அதன்படி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களுடன் பேசி சமூக பணிகளை முடுக்கி விடும் எண்ணம் அஜித்திடம் உள்ளது.
இதனை வைத்துக்கொண்டு விஜய் பாணியில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தோற்றத்தில் வாரஇதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அஜித் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'அஜித்திடம் அப்படியொரு எண்ணம் இருந்ததும் இல்லை இருக்கப்போறதும் இல்லை. கடந்த 15 வருடங்களில் மட்டும் அஜித் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவர்கள் நிறைய. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றிவைத்த பெரிய மனசுக்காரர். ஆனால் செய்த உதவிகளை விளம்பரம் செய்து கொண்டதே இல்லை. இதுதான் அவருக்கு ஆத்மதிருப்தியை தருகிறது. அப்படிப்பட்டவருக்கு அரசியல் ஆசையெல்லாம் வராது" என்றார்.
"ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்தாலும் சந்தோஷமே! கக்கன், காமராஜர் வழியில் அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கும்" என்கிறார் ரசிகர் ஒருவர்.
சமீப காலமாக குப்பையான இடுகைகளை தமிழிஷ் இல் பார்க்க முடியவில்லை. இடுகையை அழுத்தி அமுக்கி வெளியிட்டாலும் அவை பிரசுரம் ஆக சில நிமிட நேரம் பிடிக்கிறது.
என்ன காரணம் என்று உச்சந்தலையில் எலுமிச்சை தேய்த்து எமது தாட்புல் ஸ்பாட்டில் அமர்ந்து யோசித்ததில், இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு வெளிவருவது தெரிகிறது...
இதில் நிர்வாகத்தினருக்கு பணிச்சுமைதான் அதிகரிக்கும் என்றாலு, கடந்த வாரங்களாக பார்த்துவந்த தேவையற்ற விளம்பர ஸ்பாம் இடுகைகளை காணமுடியவில்லை.
ஆக பில்டர் செய்யப்பட்ட நல்ல இடுகைகளே தொடரும் இடுகைகள் வரிசையில் வருகின்றன. முன்பெல்லாம் மொக்கையான இடுகைகளை Bury பட்டன் அழுத்தி துரத்திக்கொண்டிருந்தேன். இப்போது பரி பட்டன் அழுத்தும் வேலை மிகவும் குறைந்துவிட்டது.
ஆக நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கையால், வெட்டியான பதிவுகளில் என்னுடைய நேரம் பெருமளவு வீணாகாமல், நல்ல இடுகைகளை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது...
இந்தாங்க பெரிய வாழ்த்துக்கள்...!!!
அதே சமயம், மற்ற திரட்டிகளில் உள்ளது போல இந்த வார இஸ்டார் மாதிரி எங்களது பதிவுகளை பெருமைப்படுத்தினால் மகிழ்வோம்...!!!! இது கோரிக்கை விண்ணப்பம் மட்டுமே !!!! அப்புறம் எதாவது கதை போட்டி, கட்டுரை போட்டின்னு வெச்சு எதாவது பரிசு அமவுண்டா கொடுத்தீங்கன்னா புல் க்வாட்டருக்கு ஆகும். கண்ஸிடர் செய்வீர்களா ???
உங்களது பொன்னான வாக்குகளை அள்ளி தெளிக்க மறவாதீர் !!!!!!!!
தே.பொருட்கள்:கடலை மாவு - 1 மப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.
*பாத்திரத்தில் கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக