வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26


ஒரு படமே தொலைந்து போகும் ஒரு 'ஷூ' வை பற்றியது, ஏழை குழந்தைகள் தொலைத்துவிடும் ஒரு 'ஷூ', அதன் உதவியுடன் ஏழைகளின் வாழ்கயை படம் பிடித்து காட்டினார் அந்த இயக்குனர்.அந்த படம் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு நுழைந்த போது அமெரிக்கர்களே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் – ஈரான் சார்பாக முதன் முதலில் ஆஸ்கர் விருதின் அவையில் நுழைந்த அந்த திரைப்படம் "Children of Heaven". கள்ளம் கபடம் இல்லாத அந்த ஏழை குழந்தைகள் தாம் சுவர்கத்தின் குழந்தைகள் என்றார் அவர் தற்க்கால உலக சினிமாவின் முக்கிய இயக்குனரும், ஈரானை சேர்ந்தவருமான மஜித் மஜிதி.

தெஹரானில் உள்ள ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்த மஜித், ஏழ்மையின் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தன் 12 அகவையில் மேடை நாடகங்களில் நடிக்க சென்றுவிட்டார்.அப்பொழுது ஈரானில் ஏற்பட்ட புரட்சிக்கு பின் சினிமாவை தன் தொழிலாக ஏற்றுக்கொண்டார்.இவரின் ஆதர்சன இயக்குனர் ஈரானின் இன்னொரு புகழ் பெற்ற இயக்குனரான மெக்மல்ஃப்.


'பதூக்' என்ற சினிமாவிற்கு திரைக்கதை எழுதியதின் மூலம் தன் சினிமா வாழ்வை தொடங்கிய மஜித், விரைவிலேயெ தன் திறமையால் உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். இவர் உலக பட விழக்களிலும், உலக அளவிலும் வாங்கி குவித்த விருதுகள் வீட்டை அடைக்க தொடங்கின.

ஈரானில் உள்ள ஏழ்மையை முக்கிய கதை களமாக கொண்டு, சிறுவர்க்ளை முக்கிய பாத்திரங்களாக வைத்த இவரது படங்கள் உலக அளவில் பேசபட்டன.ஈரானில் ஆளும் அரசு இசுலாமிய மத அடிப்படையை கொண்டு ஆள்வதால் அங்கு சினிமாவிற்கு பெறும் தணிக்கைகள் உள்ளன.அதன் நடுவில் மிக சிறப்பன படைப்புக்களை கொடுப்பது சிரமானது தான் என்றாலும், அந்த சவலையே தனது வெற்றிக்கு படிகற்களாக மாற்றிக்கொண்டார் மஜித். சிறுவர்களின் வழியே ஈரானின் கலாச்சாரத்தையும், புராதானத்தையும், ஏழ்மையையும் தன் கதை கருவாக வைத்துக்கொண்டார்.சில முக்கிய காட்சிகளை நடிகர்களுக்கு தெரியாமலும், வீதியில் காமிராவை பொருத்துவதன் மூலமும் யாருக்கும் தெரியாம எடுத்திருக்கிறார் - யதார்தத்திற்காக.

இவரது படைப்புகளில் மிக முக்கியமானவை "The Children of Heaven" - ஈரான் சார்பாக முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்ட படம் ("Life is Beautiful" படம் விருதை பெற்றது), அடுத்து "Color of Paradise" - இந்த படம் ஆசியவிலேயே அதிகமக வசூலை அள்ளி குவித்த படம். பெறும்பானமையான இவரின் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

சீன ஒலிம்பிக்கை முன்னிட்டு, கடந்த வருடம் சீன அரசு இவரை 'பீஜிங்' பற்றிய சிறப்பு ஆவணப்படம் ஒன்றை இயக்கி தருமாற் கேட்டுக்கொண்டது குறிப்பிடதக்கது.இவர் தற்ப்போது இயக்கி வரும் படம் காஷ்மீரை கதை களமாக் கொண்ட 'காஷ்மீர் அஹூஃப்' .

இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள்:

The Song of Sparrows ( Avaze Gonjesh-ka) - 2008 - Feature
The Willow Tree ( Beed-e Majnoon) -2005 -Feature
Olympics In the Camp ( Olympik Tu Urdugah) -2003 -Documentary
Barefoot to Herat ( Pa berahneh ta Harat) -2002 -Documentary
Baran (Rain) - 2001 -Feature
The Color Of Paradise ( Rang e Khoda) -1999 -Feature
Children of Heaven ( Bacheha ye aseman) -1997 -Feature
God will come ( Khoda mi ayad) -1996 -Short
Father (Pedar) -1996 -Feature
The last village ( Akhareen Abadeh) -1993 -Short
Baduk -1992 -Feature
A Day With POWs (Yek rooz zendegi ba aser) -1989 -Documentary
Examination day (Rooz e Emtehan) -1988 -Short
Hoodaj -1984 -Short



More than a Blog Aggregator

by சி.கருணாகரசு
பயங்கரவாதம் ... தேவைதான்!
அழகாய்
அடர்த்தியாய்
பூத்துக் குலுங்கி
புன்னகைக்கும் ...
சமூதாய வனத்தின்,
கிளைகளை ஒடித்து
கூடுகளை அழித்து
சிறகை பிய்த்து _ அதன்
இறகால் ...
காது குடைந்து
இன்பம் துய்க்கும் _ அந்த
காட்டுமிராண்டிகளின்
கைக்கால் விளங்காது போக
கட்டாயம் தேவைதான்
பயங்கர "வாதம்"

Please click the photo for clear view
Kandein Kadhalai movie photo gallery,Bharath photo gallery, Tammana photos

Please click the photo for clear view
Kandein Kadhalai movie photo gallery,Bharath photo gallery, Tammana photos
தமிழ்மணத்தின் ஓப்பன் ஐடி பற்றிய அறிவிப்பை படித்து புரிந்துகொள்ள அரைநாள் ஆகும் என்று அப்பீட் ஆகிய பிரபல பதிவர்களுக்காகவே...இந்த ஓப்பன் ஐடி தமிழ்மணத்தில் ஓட்டு போட மட்டும் இல்லாமல் இன் பியூச்சர் பல இடங்களில் பயன்படும்...

உங்களிடம் யாகூ முகவரி இருக்கா ? கண்டிப்பா இருக்கும்...

ஓப்பன் ஐடி பற்றி கேட்கும் பெட்டியில் உங்கஐடி@yahoo.com என்று கொடுங்க.

அது யாகூவின் லாகின் பேஜுக்கு கொண்டு செல்லும்...

அங்கிட்டு உங்கள் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் ஆவுங்க...

அப்புறமா ஒரு பேஜ் லோட் ஆகி Confirm என்று கேட்கும்.

அதில் கன்பர்ம் பட்டன் அடிச்சிட்டீங்கன்னா போதும்...

தமிழ்மணத்தில் மட்டும் இதன் மூலம் ஓட்டு போட முயற்சி செய்யுங்க...



இவ்வளவு சொல்லியும் ஓட்டு போட முடியாதவர்களால் எதுவுமே முடியாது. அதனால் அட்லீஸ் நமீதா படத்தை டபுள் க்ளிக் செய்து பார்த்து சந்தோஷம் அடையவும்...





தமிழ்மணத்தில் இருந்த வாக்களிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இனி வாக்களிப்பதற்கு OpenIDஐ பயன்படுத்த வேண்டும். OpenIDஐ பயன்படுத்தும் அதே நேரத்தில் முன்பு போலவே சுலபமாக வாக்களிக்கும் வகையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒரு இடுகைக்கு வாக்களிக்கும் பொழுது மட்டுமே தங்களது OpenIDஐ வாசகர்கள்/பதிவர்கள் தமிழ்மணத்திற்கு அளிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக இடுகைகளுக்கு விழும் வாக்குகள் நேர்மையானதாகவும், அதன் தரத்தைச் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

எவ்வாறு வாக்களிப்பது ?

தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்

OpenID என்றால் என்ன ?

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ், யாகூ முகவரிகளே OpenID முகவரி ஆகும். இது குறித்த மேலதிக விபரங்கள் OpenID தளத்தில் உள்ளது .

எப்படி வாக்களிப்பது ?

வாக்களிக்க நுழையும் பொழுது OpenId பெட்டியில் உங்களது ப்ளாகர்/வேர்ட்பிரஸ் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com. யாகூ முகவரியை username@yahoo.com என அளிக்க வேண்டும்

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ தளத்திற்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ்/யாகூ அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

ஒவ்வொரு முறை வாக்களிக்கும் பொழுதும் என்னுடைய OpenID அளிக்க வேண்டுமா ?

இல்லை. முதல் முறை வாக்களிக்கும் பொழுது மட்டுமே OpenIDஐ அளிக்க வேண்டும். தமிழ்மணம் அதனை நினைவில் வைத்துக் கொள்ளும். அடுத்த சில வாரங்களுக்கு எத்தனை பதிவுகளுக்கு ஒட்டளித்தாலும் நீங்கள் உங்கள் openidஐ அளிக்க வேண்டிய தேவை இருக்காது.

என்னுடைய யாகூ, ப்ளாகர், வேர்ட்பிரஸ் பயனர் பெயர், கடவுச்சொல் தமிழ்மணத்திற்கு தெரியுமா ? தமிழ்மணம் அதனை சேமிக்கிறதா ?

உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது OpenID முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். தமிழ்மணம் உங்களது OpenID தவிர வேறு எந்த விபரங்களையும் கோருவதில்லை. சேமிப்பதும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் தற்பொழுது சோதனை வடிவத்தில் உள்ளது. சில பிரச்சனைகளை (Bad signature) பதிவர்கள் தமிழ்மணத்திற்கு தெரிவித்திருந்தார்கள். அது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த

கருத்துகள் இல்லை: