வெள்ளி, 26 ஜூன், 2009

2009-06-26

நயன்தாராவும் பிரபுதேவாவும் துபாயில் பிடிபட்டனர்.  எனக்கும் நயனுக்கும் காதலா? எனக்கும் நயனுக்கும் திருமணமா? எப்போது நடந்தது இதெல்லாம்? இவையெல்லாம் பிரபுதேவாவின் கேள்விக்கணைகள்.  நானோ? பிரபுதேவாவோ? டாட்டூவோ? ஏய்... அங்கன ஒண்ணுமில்ல கேட்டோ!" Pரபு என்று கையில் பச்சை குத்தியிருந்தும் நழுவியவர் நயன்தாரா.  திருமணம் நடந்து விட்டது எனக் கேள்விப்பட்டோமே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அப்படியிருந்தால் கட்டாயம் சொல்லிவிட்டுத்தான் செய்வோம் என்று பிறகு மழுப்பினார் மலையாளத்து அம்மணி. 
மைக்கல் ஜாக்சன் இறப்பில் மர்மம் நீடிக்கிறது.  பிரபல பாப் இசையின் உலக நாயகன் மைக்கல் ஜாக்சன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது ஐம்பது. அவருடைய புகழின் உச்சிக்கு கலங்கம் ஏற்படுவதுபோல் அவர்மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. அதிலும் குறிப்பாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துக்கொண்டிருந்தார் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய விசயமாக உலகமே அதிர்ந்தது. ஆனாலும் அவர் மிகவும் மோசமான மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் மிகவும் பிரபலமான மனிதர்களுக்கு இது சகஜம் என்றும் பேசப்பட்டது.  பல நிகழ்ச்சிகளில் அவரே தான் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார். 
தட்ஸ் தமிழில் உரையாடல் சிறுகதை போட்டி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

தட்ஸ் தமிழ் குழுவினருக்கும் ஏ.கே.கானுக்கும் நன்றி..!!!

புது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் என்ற முல்லையின் பதிவை பார்த்து இந்த பதிவு. அங்கே இதனை பின்னூட்டமாகவும் போட்டாச்சு...!!!

கண்ட கண்ட செய்திகளை கேட்டு மனது குழப்பமடையாமல் பார்த்துக்கொள்வதும் தேவை...

ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால் குழந்தை நல்ல உடல் நலனுடன் இருக்கும்...சளி சுரம் போன்ற தொல்லைகள் அடிக்கடி வராது...

அப்படியே சளி சுரம் போன்றவை வந்தாலும், உடனே மாத்திரை போடுவது ஊசி போடுவது போன்றவற்றை தவிர்க்கலாம். தானாக சரியாகும்படி விடலாம்..பிள்ளையின் இம்யூன் ஸிஸ்டம் சிறப்பாக அமைய இது உதவும்...

குழந்தைகளை தூக்கும்முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்வது முக்கியம்.

குழந்தையை பார்க்க வருபவர்கள் அனைவரும் குழந்தையின் முகத்தில் வலுக்கட்டாய உம்மா தருவதை தடுக்கவேண்டும். அவர்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம்.

குழந்தையை தோளில் கிடத்தி முன்னும் பின்னும் கொஞ்சம் / என்ன ஒரு அரை மணி நேரம் நடந்தால் குழந்தை நன்றாக தூங்கும்.

குழந்தை திடீரென்று அழுதால் உடைகளை கழட்டி பரிசோதியுங்கள். இறுக்கமான உடைகள், அன்கம்பர்டபுளாக இருக்க வாய்ப்பு உண்டு.

அதிக குளிரும் சரி, அதிக சூடும் சரி, குழந்தைக்கு ஆகாது.

கச்சா முச்சா நாட்டு வைத்தியங்களை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திணிப்பதை தவிருங்கள். நீங்கள் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கும் 100 வருடத்துக்கு முன் இருந்த குழந்தைக்கும் வேறுபாடு உள்ளது. அந்த ரப்பஸ்ட்நெஸ் இப்போது இல்லை. அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

கடைசியாக, குழந்தையை பெற்றபிறகு தாய் தனது உடல் நலனில் அக்கறை இல்லாமல் இருப்பார். வேளைக்கு இரும்புச்சத்து, கால்சியம் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதில் சோம்பேறித்தனமும் வெறுப்பும் இருக்கும். நீங்கள் கட்டயப்படுத்தி அல்லது நல்ல விதமாக சொல்லி அந்த மாத்திரைகளை உட்கொள்ளச்செய்யவேண்டும்.

இல்லையென்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் மூட்டு வலி, கால் வலி கை வலி என்ற பல உபாதைகளுக்கு அவர்கள் ஆளாவார்கள்.

அப்பா டே விஷ்ஷஸ்...!!



கொலைக்குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், பிணையில் வெளிவந்தாலும் சங்கராச்சாரியார் உத்தமபுத்திரர் போலவும், ஞானம்மிக்க கருத்துகளை திருவாய் மலர்வதுபோலவும் தூக்கிப் பிடிப்பதில் பார்ப்பனர்களுக்கு நிகர் பார்ப்பனர்களே!
காமகோடி என்ற மாத இதழ் சங்கரமடத்தின் ஆசியோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் கொலைக்குற்றப் புகழ் ஜெயேந்திரரின் திருக்கல்யாண குணங்களைப்பற்றிய பிரஸ்தாபம்தான்.

இவர்கள் எந்த அளவு பொது அறிவு உள்ளவர்கள் என்பதற்கு ஜெயேந்திரர் தெரிவித்துள்ள கருத்தே போதுமானது.

புராணங்களை ஆழ்ந்து படித்தால் தற்கால விஞ்ஞானம் எல்லாம் அதில் பொதிந்து கிடப்பதைக் கண்டறிய முடியும் என்று கூறியுள்ளார்.

கொஞ்சம் புத்தியோடு சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் இதனைப் படித்துவிட்டு வாயால் சிரிக்க மாட்டார்கள்.

பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் ஒருவன் என்றும், மகாவிஷ்ணு என்னும் ஓர் இந்துக் கடவுள் பன்றி அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்றும் கூறும் புராணக் கூற்றிலும் என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை ஜெகத்குரு கூறினால் வரவேற்கலாம்.

பூமி தட்டையா? உருண்டையா? என்பதிலேயே லோகக் குருவுக்குச் சந்தேகம்.
பாற்கடலில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டாராம். அப்படி ஒரு கடல் இருக்கிறதா? பால் கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், சர்க்கரைக்கடல், புளிக்கடல், மிளகாய்க் கடல் என்று மளிகை சாமான்களுக்கான கடல்கள் எங்கே இருக்கின்றன? அவற்றைக் கண்டுபிடித்துச் சொன்னால் மக்களுக்கு எவ்வளவு சவுகரியமாக இருக்கும்.

சந்திரன் என்பவன் தேவர் குழாமில் ஒருவன் என்றும், அவன் குரு பத்தினியைக் கற்பழித்தான் என்றும் கூறுவதெல்லாம் எவ்வளவு காட்டுமிராண்டிக்காலப் பிதற்றல்!

விநாயகக் கடவுள் ஒரு நாள் சமுத்திர ஸ்நானம் செய்யச் சென்றதாகவும், அப்பொழுது தன் தும்பிக்கையால் கடல்நீர் முழுவதையும் உறிஞ்சிவிட்டதாகவும், அதன்பின் அந்த நீர் முழுவதையும் சிறுநீராகக் கழித்துவிட்டதாகவும், அப்பொழுதிருந்துதான் கடல் நீர் உப்புக் கரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறும் புராணத்தில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானக் கருவூலங்களுக்குக் கொஞ்சம் பதவுரை, பொழிப்புரை செய்யக்கூடாதா காஞ்சி மாஜி சங்கராச்சாரியார்?

சூரபத்மனுக்கும், சுப்பிரமணியக் கடவுளுக்கும் சண்டை நடந்ததாகவும் (ஹிந்து மதத்தில் கடவுள்கள் எல்லாம் சண்டை கூடப் போடும் கற்பழிக்கும்) அழிக்க அழிக்க அசுரர்கள் வல்லபை என்ற அரக்கர் குலப் பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வந்ததாகவும், அதனை சுப்பிரமணியனின் அண்ணனான விநாயகன் தன் தும்பிக்கையால் அடைத்து வீரர்களை வராமல் தடுத்ததாகவும் கந்தபுராணம் கூறுகிறதே _ - இதற்குக் கொஞ்சம் பாஷ்யம் கூறி இதற்குள் குடிகொண்டிருக்கும் அர்த்த புஷ்டிமிக்க அறிவியல் விஷயங்களைக் கொஞ்சம் எடுத்துவிடக் கூடாதா?


கால்நடையாகவும், பல்லக்கிலும் சென்றுகொண்டிருந்த இந்த ஜெகத்குருக்கள் இன்றைக்கு விலை உயர்ந்த கார்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பயணம் செய்து, நவீன லௌகிக வாழ்க்கையை ருசித்துக்கொண்டு சாங்கோபாங்கமாக வளமாக ஒரு பக்கத்தில் வாழ்ந்துகொண்டு இன்னொரு பக்கத்தில் பழைய புராண அழுக்கு மூட்டைகளை அவிழ்த்துக்கொட்டி மக்களைப் பக்திச் சேற்றில் அழுத்திச் சுரண்டும் கொடுமையை என்ன சொல்ல!

தந்தை பெரியார் இந்தப் பக்தியைத் தோலுரிக்கும் பணியை மேற்கொண்டது எவ்வளவு பெரிய உயர்ந்த அரும்பெரும் தொண்டு என்பதை _ இந்தச் சங்கராச்சாரியார்களின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமே!

---------------"விடுதலை"தலையங்கம் 26-6-2009

கருத்துகள் இல்லை: