புதன், 10 ஜூன், 2009

2009-06-10

ஈழப்பிரச்சனை, கலைஞரின் உண்ணாவிரதம், அரசியல் அனல், போர் நிறுத்தம். இவை எவற்றிற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாளும் இதன் நாயகன் கலைஞரைப் பற்றி அவரின் எண்பத்தைந்தாம் அகவை ஒட்டி எண்பத்தைந்து கவிதை தொகுப்பை வெளியிட முயற்சித்து அதன் தொடர்பாக கவிஞரொருவர் கவிதை சேகரிக்க அமீரகம் வந்த போது என் பங்கிற்கு கலைஞரைப் பற்றி நான் எழுதி அளித்த கவிதை இது…

குறைகளெல்லாம் நிறைகளாய்….
உன் நிறைகளைப் பாட
நீண்டதொரு கூட்டமுண்டு- என்பதால்
தங்கள் குறைகள் பாட
கு(ழ)ரலெடுத்து வந்துள்ளேன்…

நீ நிறைகளால் நிறைந்தவன்
குறைகளையும் நிறையாக்கியவன்


" அரசியல் சிகரமே "
உன் உயரத்தில் நீ சற்றே குள்ளம்…
உன் உருவ ஆளுமைக்கு அது
சற்று குறைவானது தான் – ஆனால்
அரசியலில் உன் சாதனை உயரம் கண்டு
எவரெஸ்ட்டும் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கிறதே-அந்த
தந்திரமென்ன…?


"திருக்கு(ற)ரலாசானே"
உன் குரலின் கரகரப்பு,
உன் பரபர்ப்பு வார்த்தை வேகத்திற்கு
சிறு குறை தான் – ஆனால்
உன் கரகரப்புக் குரலில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம் கண்டு
குயில் கூட உன் குரல் மாற்றி
கூவ முயற்சிக்கும்
மந்திரமென்ன…?

"சூரியனுக்கொளியே..."
கருப்பு கண்ணாடி - உன்
விழிகளின் விலாசமென்பது
உன் பார்வைக்குறை குறைக்கத்தான் –ஆனால்
ஒட்டுமொத்த கலைச் சமுதாயமே
உன் விழிவழியே- பூலோகம்
நோக்க காத்திருக்கும்
விஞ்ஞான மர்மமென்ன..?

"சிந்தனை சிறுத்தையே…"
உன் நடையின் தளர்வு
உன் பொழுது வேகத்திற்கு
சற்றே குறை தான் –ஆனால்
உன் எண்ண வேகத்திற்கு
எந்த எழுத்தாணியும்
ஈடுகொடுக்க இயலா தவிக்கும்
மாயாஜாலமென்ன…?

"கவிபாடும் கணிப்பொறியே"
இளம் தலைமுறைக்கு – நீயொரு
செம்மொழி தந்த "தமிழ்"
அரசியல் "கணித" மேதை
எழுத்துலகின் "விஞ்ஞானம்"
வாழும் "வரலாறு"
சகலகலா திறன் கொண்ட " பூகோளம்"

"கலைஞரே"
எண்பத்தைந்தென்பது
உமக்கு குறையா..? நிறையா..?
என நிறைய சிந்தித்தாலும்
நிறைகள் மட்டுமே நெஞ்சில்
நிறைகிறது … மற்றவை உம் முன்
மறைகிறது…
ஈழப்பிரச்சனை, கலைஞரின் உண்ணாவிரதம், அரசியல் அனல், போர் நிறுத்தம். இவை எவற்றிற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாளும் இதன் நாயகன் கலைஞரைப் பற்றி அவரின் எண்பத்தைந்தாம் அகவை ஒட்டி எண்பத்தைந்து கவிதை தொகுப்பை வெளியிட முயற்சித்து அதன் தொடர்பாக கவிஞரொருவர் கவிதை சேகரிக்க அமீரகம் வந்த போது என் பங்கிற்கு கலைஞரைப் பற்றி நான் எழுதி அளித்த கவிதை இது…

குறைகளெல்லாம் நிறைகளாய்….
உன் நிறைகளைப் பாட
நீண்டதொரு கூட்டமுண்டு- என்பதால்
தங்கள் குறைகள் பாட
கு(ழ)ரலெடுத்து வந்துள்ளேன்…

நீ நிறைகளால் நிறைந்தவன்
குறைகளையும் நிறையாக்கியவன்


" அரசியல் சிகரமே "
உன் உயரத்தில் நீ சற்றே குள்ளம்…
உன் உருவ ஆளுமைக்கு அது
சற்று குறைவானது தான் – ஆனால்
அரசியலில் உன் சாதனை உயரம் கண்டு
எவரெஸ்ட்டும் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கிறதே-அந்த
தந்திரமென்ன…?


"திருக்கு(ற)ரலாசானே"
உன் குரலின் கரகரப்பு,
உன் பரபர்ப்பு வார்த்தை வேகத்திற்கு
சிறு குறை தான் – ஆனால்
உன் கரகரப்புக் குரலில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம் கண்டு
குயில் கூட உன் குரல் மாற்றி
கூவ முயற்சிக்கும்
மந்திரமென்ன…?

"சூரியனுக்கொளியே..."
கருப்பு கண்ணாடி - உன்
விழிகளின் விலாசமென்பது
உன் பார்வைக்குறை குறைக்கத்தான் –ஆனால்
ஒட்டுமொத்த கலைச் சமுதாயமே
உன் விழிவழியே- பூலோகம்
நோக்க காத்திருக்கும்
விஞ்ஞான மர்மமென்ன..?

"சிந்தனை சிறுத்தையே…"
உன் நடையின் தளர்வு
உன் பொழுது வேகத்திற்கு
சற்றே குறை தான் –ஆனால்
உன் எண்ண வேகத்திற்கு
எந்த எழுத்தாணியும்
ஈடுகொடுக்க இயலா தவிக்கும்
மாயாஜாலமென்ன…?

"கவிபாடும் கணிப்பொறியே"
இளம் தலைமுறைக்கு – நீயொரு
செம்மொழி தந்த "தமிழ்"
அரசியல் "கணித" மேதை
எழுத்துலகின் "விஞ்ஞானம்"
வாழும் "வரலாறு"
சகலகலா திறன் கொண்ட " பூகோளம்"

"கலைஞரே"
எண்பத்தைந்தென்பது
உமக்கு குறையா..? நிறையா..?
என நிறைய சிந்தித்தாலும்
நிறைகள் மட்டுமே நெஞ்சில்
நிறைகிறது … மற்றவை உம் முன்
மறைகிறது…


More than a Blog Aggregator

by வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
பொய்யாகிப் போகாதோ?
உன் மரணம்
பொய்யாகிப் போகாதோ?
நீ
பக்கத்திலிருந்த தைரியத்தால்
வீரம் பேசித் திரிந்தோமே...
வீணாய்ப் போனதே
அத்தனையும்!
வீணாய்ப் போனதேன்
அத்தனையும்?

இறுதிவரை நீ
ஈழ மண்ணை விட்டு
ஓடவில்லை!
உன் உறுதி
கர்வப்பட வைக்கிறது...
நீ ஓடி
உயிர்தப்பியிருக்கக்கூடாதா?
என்
உள்மனம் ஏங்குகிறது!

மெய் சிலிர்த்துக் கிடந்தோமே!
தமிழனுக்கென்று அரசாங்கம்
தமிழனுக்கொரு ராணுவம்
தமிழனுக்கொரு தலைவன்
பொய்யாகிப் போனதே
அத்தனையும்!

இனப்படுகொலையின்
வலியை உணர்ந்தாய் நீ...
வலியை உணர்ந்தவர்கள்
உன் பின்னால் சேர
வலிமையானாய் நீ!
தமிழனைக் காக்கத்தானே
நீ
துப்பாக்கி தூக்கினாய்?
உன் பின்னால்
பீரங்கியே அணிவகுத்ததே
பின்னாளில்!
இன்று
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கும் தமிழகம்
அன்று உன்னை
தட்டிக் கொடுத்ததே!

உலகத்தின் சுழற்சியால்
சூழ்ச்சியால்
இனப்போராளி உன்னை
தீவிரவாதியென்றல்லவா
தடை செய்தது!
அடிமேல் அடி விழுந்தாலும்
"ஓயாத அலை"யாக
சுழன்றடித்த நீ
இன்று அமைதியானாயே!

பதுங்கு குழிகள்
பாதுகாப்பு வளையமென
தமிழரைக் கொன்றொழித்து
உன்னைப் பழியாக்கி
பலியாக்கிய
உலகத்தின் சூழ்ச்சியை
எப்படிச் சொல்வேன்?
வெட்கக்கேடு!

எழுதப்படும் வரலாறுகள்
உன்னை
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்...
உன் உறுதியை
உன் வலிமையை
உன் பெருமையை
என் பேரனுக்கும்
சொல்லிக்கொடுத்து உரமேற்றுவேன்...
அதுபோதும் எனக்கு!
நவீன தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தில் நுகர்வோருக்கான வசதிகள் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.இனிவரும் முழுமையான டிஜிட்டல் காலங்களில் நம் வீட்டு குளிர்பதனப்பெட்டி தன்னை தானே ஸ்கேன் செய்து பால்,தயிர்,குளிர்பானங்கள்,முட்டை போன்றவை தீர்ந்து போனால் உடனே அதிலுள்ள சிறிய கணினி, இணையம் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.நாம் உடன் பலசரக்கு கடைக்கு சென்றால், சாமான்கள் சேகரிக்கும்
நவீன தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தில் நுகர்வோருக்கான வசதிகள் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ.இனிவரும் முழுமையான டிஜிட்டல் காலங்களில் நம் வீட்டு குளிர்பதனப்பெட்டி தன்னை தானே ஸ்கேன் செய்து பால்,தயிர்,குளிர்பானங்கள்,முட்டை போன்றவை தீர்ந்து போனால் உடனே அதிலுள்ள சிறிய கணினி, இணையம் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிடும்.நாம் உடன் பலசரக்கு கடைக்கு சென்றால், சாமான்கள் சேகரிக்கும்
இருபது நாடுகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தோற்கடித்தது என்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம அந்த நாடுகள் அனைத்திற்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவிய அந்த 20 நாடுகளும் எவை என்று குறிப்பிட்டுக் கூறாத அமைச்சர், அந்த நாடுகள் அனைத்துக்கும் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு :

கருத்துகள் இல்லை: