முக்கியமாக இந்த ஈழப்போராட்டத்தில் எப்படி அரசியல் கலந்தது என்றும், ஐநா சபை முதல் அமெரிக்கா வரை இந்த மானப்போராட்டம் எப்படி இலங்கை அரசால் மாற்றப்பட்டு வருகிறது என்றும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்..
கண்டிப்பாக தமிழ் உணர்வு உள்ள அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. வேற ஒன்னும் இல்லீங்க, தமிழ் தலைவர் ஒருவரின் போராட்டத்தை குறிப்பிட்டு , இன்னைக்கு பலபேருக்கு பேதி ஆகிருக்கு என்று வலையுலக மூத்த பதிவர் ஒரு கட்டுரையை பதிவிட்டிருந்தார்...
முக்கியமா அவர் இந்த வார ஜூ.வி யை படித்தால் ஒரு சில உண்மைகள் விளங்கும்...

விசித்திரமான சுவையைப்
புனைந்திருக்கிறது நம் நட்பு
கொண்டு வந்து வைத்திருக்கும் மதுவில்
நிராசை புலப்படுவதாய்க்கூறி
விடுதியை விட்டு வெளியேறும் நான்
காலம் நேரமற்று மதுகுப்பியை ஏந்த
எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் நீ
பரஸ்பரம் நட்புதான் நமது
சந்தேகிக்கின்றனர்
எப்படி வெளிப்படுகிறது
நட்பு இவர்களுக்குள் என்று
கூடிக்கூடி பேசுகின்றனர்
சுற்றிலும் நம்மைப்பற்றி
நட்பின் ரகசியம் அறியாமல்
ஒரு நாதாங்கியின் தள்ளலில்
உலகையே மூடிவிட்டதாய் எக்காளமிட்டு
பரவசத்தில் உடல் நடுங்க
விரிந்திருக்கிறோம் நாம்
மதுகோப்பைகளின் முன்பு
திரண்டெழுந்த மருவைப்போல
புடைத்திருக்கிறது மூக்கு
திறக்கப்பட்ட மதுவின் மனம் சுவைத்து
நினைவற்றுக்
கிடப்பதைபோல பெருமகிழ்ச்சி உள்ளதா
மிதக்கும் கேள்விகளுடன் அலைகிறோம்
குடிமயக்கம் தழுவ
வெடித்துப்பரவுகிறது
உண்மைகளின் விதைகள்
ஒப்பனைகளைக்கலைத்து
மூடிய அறைகதவுகளுக்கிடையேயான
நீள் கோட்டுத்துவாரங்களில் கசிகிறது
தொங்கிக்கொண்டிருக்கும்
செவிகளின் நிழல்கள்
கூர்ந்து கவனிக்கின்றன
நாம் பேசுவதை.
- பொன்.வாசுதேவன்
ஈழத்தமிழ் பெண் சொன்ன செய்தி
புலிகள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாள அட்டை வைத்துக் கொள்ளும் வழக்கம் கிடையாதென்றும்,
போராளிகள் கழுத்தில் சிகப்பு மற்றும் கருப்பு நிறக் கயிறுதான் அணிந்திருப்பர் என்றும் சிகப்பு நிறக்கயிற்றில் அடையாள தகடும், கருப்பு நிறத்தகட்டில் நஞ்சுக்குப்பியையும் அணிந்திருப்பர் என்றும் தெரிவித்தார்,
நான் சந்தித்த ஈழத்தமிழ் பெண்.
மேலும் அவர் கூறுகையில்,
பிரபாகரன் அடையாள அட்டை வைத்திருந்தார், அந்த உடலை கைப்பற்றிவிட்டோம்,
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் சுருக்கங்களோடு இருந்தவர், நீண்ட இடைவெளியில் போர்ச்சூழலில் வாழ்ந்த பின்பு, குண்டு தாக்கியதில் முகத்தில் இளமை வந்துவிட்டது.
என்றெல்லாம் கூறுவது தூய பொய், இது பொய்யாக உருவாக்கப்பட்டது.
இது தொடர்பான மற்ற பதிவுகள்:
http://kundumani.blogspot.com/
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_19.html

மதுரைக்கும் நேர்கிழக்கே
மழைபெய்யாக் கானலிலே
வெள்ளிக்கலப்பை கொண்டு சொக்கர்
விடிகாலம் ஏர்பூட்டி
தங்கக்கலப்பை கொண்டு சொக்கர்
தரிசுழுகப் போனாராம்
வாரி விதைபாவி
வைகை நதி தீர்த்தம் வந்து
அள்ளி விதைபாவி
அழகர்மலை தீர்த்தம் வந்து
பிடித்து விதைபாவி
பெருங்கடலில் தீர்த்தம் வந்து
எங்கும் விதைபாவி
ஏழுகடல் தீர்த்தம் வந்து
முத்து விதைபாவி
மிளகுச்சம்பா நாத்து நட்டு
பவளக்குடை பிடித்து சொக்கர்
பயிர்பாக்க போகையிலே
வங்காளஞ் சிட்டு
வயலிறங்கி மேய்ந்ததுன்னு
சிங்கார வில்லெடுத்து
தெறித்தாராம் அம்பினாலே
ஊசி போல் நெல் விளையும்
ஒரு புறமாய்ப்போறேரும்
பாசி போல் நெல் விளையும்
பட்டணம் போல் போரேறும்
சரஞ்சரமாய் நெல் விளையும்
சன்னிதி போல் போரேறும்
கொத்துக்கொத்தாய் நெல் விளையும்
கோபுரம்போல் போரேறும்
கட்டுக் கலங்காணும்
கதிர் உழக்கு நெல் காணும்
அடித்துபொலி தீர்த்த
அதுவும் கலங்காணும்
மூன்று கலங்காணுமின்னு சொக்கர்
முத்திரிக்கையடிச்சாரோ
அடுப்பு மொழுகி
ஐவிரலால் கோலமிட்டு
பானை கழுவி
பன்னீரால் உலை வைத்து
தங்க நெருப்பெடுத்து
தனி நெருப்பு உண்டு பண்ணி
பொன் போல் நெருப்பெடுத்து மீனாள்
பொறி பறக்க ஊதிவிட்டா
சம்பாக் கதிரடிச்சுச் சொக்கர்
தவிச்சு நிற்கும் வேளையிலே
வேரில்லாக் கொடிபிடுங்கி மீனாள்
தூரில்லாக் கூடைசெய்து
கூடையிலே சோறெடுத்து
குடலையில காயெடுத்து
சோலைக்கிளி போல மீனாள்
சோறுகொண்டு போனாளாம்
நேரமாச்சுதுன்னு சொக்கர்
நெல்லால் எறிந்தாராம்
கலத்திலிட்ட சோறுதன்னில்
கல்லோ கிடந்ததென்று சொக்கர்
கடுங்கோபம் கொண்டாராம்
வாரி எறிந்தாராம் சொக்கர்
வயிரமணிக் கையாலே
சோர்ந்து படுத்தாளாம் மீனாள்
சொக்கட்டங்காய் மெத்தையில
மயங்கி விழுந்தாளாம் மீனாள்
மல்லிகைப்பு மெத்தையில
வாரியெடுத்தாராம் சொக்கர்
வலதுபுறத் தோளணைய
ஏந்தி எடுத்தாராம் சொக்கர்
இடதுபுறத் தோளணைய
அழுத குரல்கேட்டு
அழகர் எழுந்திருந்து
வரிசை கொடுத்தாராம்
வையகத்தில் உள்ள மட்டும்
சீரு கொடுத்தாராம்
சீமையில உள்ள மட்டும்
மானா மதுரைவிட்டார்
மதுரையில பாதிவிட்டார்
தல்லாகுளமும்விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிகையில பாதிவிட்டார்
தங்கம் நறுக்கி
தமருவெட்டத் தூண் நிறுத்தி
வெள்ளி வளை பூட்டி
மேக வண்ணத் தொட்டி கட்டி
தொட்டி வரிஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
ஆட்டினார் சொக்கலிங்கம்
அயர்வு வரும்வரையில்
ஊட்டினார் பால் அமுதம்
உறக்கம் வரும்வரையில்
கட்டிலுக்குங்கீழே
காத்திருப்பாள் மீனாளும்
தொட்டிலுக்குங்கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக