'படிக்கட்டில் பயணம் செய்யாதே'
பேருந்தில் ஏறும்போதே எழுதியிருக்கும்....
இவன்
படித்த அறிவாளியாம்
நாகரீகம் தெரிந்தவனாம்
ஆதலால் பயணம்
படிக்கட்டில் மட்டுமே....
பிறர் கண்பார்வை
தன்மீது பட்டுவிட்டால்
தன்னை தலைவனென்றே எண்ணுவான்
குயிலென்றும் மயிலென்றும்
பகற்கனவு கண்டு துள்ளிக்குதிப்பான்
பின்னொரு நாள்
கைகால் கட்டோடு பேருந்தில் ஏறுவான்
பிறர் பார்வை தன்மீது படாதோ....
எவரேனும் தனக்கு இடம் தரமாட்டாரோ ....
என எண்ணி நிற்க
அன்று புரியும்
'படிக்கட்டில் பயணம் செய்யாதே'
படம் : http://www.hindu.com/2005/11/16/stories/2005111616660300.htm
பல்வேறு சம்பவங்களுக்கு பிறகு தற்போது பதிவுலகில் ஒரு மயான அமைதி நிலவுகிறது..காரணம் நாம் அறிந்ததே..தேர்தல் மற்றும் இலங்கை போர் போன்ற தலைப்புகளுக்கு தற்போது வேலை இல்லாமல் போய் விட்டது..ஆனால் மற்ற தலைப்புகளுக்கு பஞ்சம் இல்லை..நீண்ட நாட்களாக நான் எனது பதிவில் எதுவும் எழுதாமல் இருந்ததற்கு காரணம்...தற்போது நான் அந்தமான் தீவுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளேன்..இலங்கை பிரச்சனை போல் இல்லாவிட்டாலும் இங்கேயும் தமிழர்களுக்கு துரோகம். அந்த துரோகத்தை பற்றி ஆய்வு செய்து பின்னர் நான் எழுதுகிறேன்..

யார் கொன்றதோ?
யார் கொலை செய்யப்பட்டதோ?
தினம் வேட்டை
பழி வாங்கும் வெறி
இனி யுத்தம்
பாரிய தாக்குதல்
எல்லாம் முடிவுக்கு வரும்.......
இளமை தொலைந்த
அங்கவீன சமூகம்
குருதி வடிந்த
கருகிய கந்தக வயல்வெளிகள்
நான்! நீ!
என்ற பாகுபாடு,
ஆயுதங்கள்
அணிவகுத்து நிற்கும் ,
உணர்வற்ற உடல்கள்
மண்டைஒடுகள்
ஒதுங்கி மரியாதை செய்யும்,
ஒற்றைக்கால்
ஒற்றைக்கையுடன்
புதியதாய் பிறந்த
இரண்டு குழந்தைகள்
வாழும்
குற்றுயிராய்....
(இந்த கவிதை புதிதாக எழுதப்பட்ட ஒன்று அல்ல.மூன்று வருடங்களுக்கு முன்னர் "பயில்நிலம்" சஞ்சிகைக்காக எழுதிய கவிதை. ஏதோ ஒரு வகையில் நடைமுறையின் சந்தர்ப்பங்களுடன் இந்த கவிதை பொருந்தியிருக்கின்றது. அதனால் இங்கு இந்த கவிதையை மீள்பதிப்பு செய்கின்றேன்.கவிதை வாசித்து உங்களுக்கும் பிடித்திருந்தால் ஆளுக்கு ஒரு வாக்கு போடலாம்)

விடுதலைபுலிகள் ஆயுதங்களை கிழே போடுவதாக
கூறி 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது
சிங்கள ராணுவம்
தமிழ்ச்சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது
இன்னும் உலகச்சமுதாயம் எதை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது
அனைவரும் நமது கவலைகளை தெரிவித்து கொண்டிராமல்
நமது மன அழுத்தங்களை இப்பொழுது
உலகச்சமுதாயத்திறகு கொடுக்கவேண்டிய தருணம் இது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக