செவ்வாய், 9 ஜூன், 2009

2009-06-09

More than a Blog Aggregator

by sankarkumar

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கடந்த இரு நாள்களாக நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து தீர்மானம் கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
இந்தத் தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இதன் பிறகு நிதியுதவி கோரும் வேறொரு தீர்மானத்தை இலங்கை முன்வைத்தது. போரில் பொதுமக்களை விடுதலைப்புலிகள் கேடயமாகப் பயன்படுத்தியதாகக் கூறிய அந்தத் தீர்மானத்தில், போர் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்துக்கு 29 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனால், தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிதியுதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

மணிரத்னத்தின் ராவணா அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம்.. ஆனால், என்ன காரணத்தினாலோ படம் வருடக்கணக்கில் இழுத்து கொண்டே போகிறது.மணிரத்னத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு, ஒளிப்பதிவாளர் மணிகண்டன் படத்தில் இருந்து விலகியதால் தற்போது சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார் .

எடுத்தவரை போட்டுப்பார்த்ததில் சில காட்சிகள் திருப்தி இல்லாததால் மீண்டும் ரீஷூட் செய்கிறார்களாம்.

எது எப்படியோ மணியான படமாக இருந்தால் சரி..

'படிக்கட்டில் பயணம் செய்யாதே'
பேருந்தில் ஏறும்போதே எழுதியிருக்கும்....

இவன்
படித்த அறிவாளியாம்
நாகரீகம் தெரிந்தவனாம்
ஆதலால் பயணம்
படிக்கட்டில் மட்டுமே....

பிறர் கண்பார்வை
தன்மீது பட்டுவிட்டால்
தன்னை தலைவனென்றே எண்ணுவான்
குயிலென்றும் மயிலென்றும்
பகற்கனவு கண்டு துள்ளிக்குதிப்பான்

பின்னொரு நாள்
கைகால் கட்டோடு பேருந்தில் ஏறுவான்
பிறர் பார்வை தன்மீது படாதோ....
எவரேனும் தனக்கு இடம் தரமாட்டாரோ ....
என எண்ணி நிற்க
அன்று புரியும்
'படிக்கட்டில் பயணம் செய்யாதே'

படம் : http://www.hindu.com/2005/11/16/stories/2005111616660300.htm

கருத்துகள் இல்லை: