புதன், 10 ஜூன், 2009

2009-06-10

அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.

இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் ஈராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச்சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.

"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில்..........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
                         


இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. அதன் வெவ்வேறு பணிகளுக்காக இந்த 13,000 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 2008 - 09 நிதி ஆண்டில் நாங்கள் 33,703 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தோம். இந்த நிதி ஆண்டில் மேலும் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக் கிறோம் என்றார் ஸ்டேட் பேங்க்கின் உயர் அதிகாரி ஒருவர். முன்னணி வங்கியான எங்களுக்கு இது தேவைப் படுகிறது என்றார். முதலாவதாக நாங்கள் ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி ( ரூரல் ), மற்றும் டெக்னிக்கல் ( பண்ணை துறை ) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்க, வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர். இது குறித்து இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ( ஐபிபிஎஸ் ) இயக்குனர் பாலசந்திரன் பேசியபோது, பொதுவாகவே எல்லா இந்திய பொருத்துறை வங்கிகளுமே இந்த நிதி ஆண்டில் 30,000 பேர் வரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன. அதில் 50 சதவீதத்தை ஸ்டேட் பேங்க்கே எடுத்துக்கொள்ள இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்
என்ன கொடுமைய்யா இது நானும் மொக்கைப்படங்களே பார்க்க கூடாது என்னு எவ்வளாவுதான் நினைச்சாலும் இது விதி இருக்கே விதி அது ரொம்ப வலியது என்னு நிறுபிச்சிடுச்சு... யம்மே முடியல்ல சும்மா சொல்லக்கூடாது... ரொம்ப நல்லாவே மொக்கையப்போட்டிருக்கானுங்க.......

கதை இதுதான்.... ஆரம்பத்திலேயே 2 பெரிய ரவுடிங்க ஒருத்தர் பிரகாஷ்ராஜ் (ஏன் ஏன் பிரகாஷ்?? மொக்கை படத்தில நடிங்க ஆனா இவ்வளவு மொக்கைப்படத்தில வேனாமே நாங்க கொஞ்சம் பாவம் இல்ல??) மத்தவரு படிக்காதவன் கிஷோர் (ஏன்ய்யா நல்லாத்தானே இருந்தீங்க நீங்க ஏன் இந்த படத்தில??) 2 பேரும் சேர்ந்து மாறி மாறி கொலை பண்ணுறானுங்க படத்திலதான்.... நம்மல கொலை பண்ண இன்னும் விஷால் வரல அவசரப்படாதீங்க....
அப்போ கிஷோர் பண்ணுற கொலையை ஊருக்கு புதுசா வர்ர விஷால் பாத்துர்ராரு.... அப்போ ஒரு கொசுவர்த்தி(flashback) திருவிழால சண்ட போட வந்து அதில ஒரு பில்டப்ப போட்டு பிறகு பஞ்சாயத்தாயி அதில........ வேணாங்க முடியல..... சிம்பிளா சொல்லீர்ரேன் தொலைஞ்ச அண்ணன தேடி தம்பி சென்னை வந்து அங்க லவ் ஆகி அண்ணன கண்டுபிடிச்சு பிறகு அங்க இருந்து எப்படி அவர் சொந்த ஊருக்கு கூட்டீடு போறார் என்கிறத கொஞ்சம் சாமி, சிவகாசி, ரன்,மலைக்கோட்டை, தூள், கரகாட்டகாரன், அழகியதமிழ் மகன் என்னு பல படங்கள கலந்தடிச்சு ஒருமாதிரி கொஞ்சம் பஞ்ச் லயலாக் அடிச்சு எங்களையும் பஞ்சாரக்கி வெளிய அனுப்புறானுங்க


படத்தில ஒரு பஞ்சாயத்துசீன்ல பெரியகருப்புத்தேவர் ஏதோ சொல்ல அதுக்கு விஷால் "பெரிசு லாஜிக்கே இல்லாம பேசுது"ன்னு அடிக்க போறாரு... ஏண்டா டேய் நீ லாஜிக் இல்லாத படத்தில நடிக்கும்போது அந்தாள் லாஜிக் இல்லாம பேச கூடாதா??
அது என்னங்கடா படத்தோட break அப்பறம் எல்லோருமே தோரணை தோரணை என்னு கத்திக்கிட்டே இருக்கீங்க.... அப்படி தோரணை தோரணை என்னு சொல்லிக்கிட்டு இருந்தாத்தான் படம் பேர் ஞாபகம் இருக்கும் எங்கிறத்துக்காகவா?? ஆரம்பத்தில "புரட்சித்தளபதி" என்னு போடும் போதே நான் escape ஆகியிருக்கனும்.... என் விதி மாட்டிக்கிட்டேன்..... படத்தில அடிக்கடி சந்தானம் வேற "ஊருக்கு போ ஊருக்கு போ"என்னு விஷால சொல்லும் போதே எனக்கு புரியல அது எங்களுக்குத்தான் படத்த நிறுத்தீட்டு போ சொல்லுறார் என்னு.... படத்தில பிரகாஷ்ராஜ் விஷால மிரட்டீத்து போனப்பிறகு கிஷோர் வந்து மிரட்டுவார்... அப்போ சொல்லுவார் "அந்த குரு பார்த்தா நல்லது, இந்த குருவ பார்க்காம இருக்கதுதான் நல்லது" என்னு அப்போ புரியல படத்த பார்க்காம இருக்கதுதான் நல்லது எங்கிறதத்தான் symbolicஆ அப்படி சொல்லுறானுங்க என்னு பிறகு  படம் முடியும் போதுதான் புரிஞ்சுது.... டேய் நீங்க செஞ்ச இவ்வளவு செஞ்சதக்கூட தாங்கியிருப்பேன் ஆனா அந்த இத்துபோன மண்டையன் விஜய் நடிச்ச இத்துப்போன படம் "அழகியதமிழ் மகன்" அதக்கூட பார்த்து திரும்ப எடுத்திருக்கியேடா வெண்ணை..... உன்னை என்னன்னு சொல்லுறது......



பஞ்சாயத்து சீன்ல பஞ்சாயத்து தலைவர் "எல்லா செலவையும் கூட்டி கழிச்சு 7-1/2 வருது" என்னு சொல்லுவாரு அந்த 7-1/2 இந்த படம்தான் எங்கிறத முதல்லயே அவனுங்க சொல்லியும் நான் தொடர்ந்து பார்த்தேன் பாருங்க என்ன சொல்லனும்.....  





சத்தியம் படத்திலதான் இப்படி ஒரு 7-1/2 அனுபவிச்சியே பிறகு ஏண்டா இந்த படத்தை பார்த்த என்னு நீங்க கேட்கிறது புரியுது என்ன செய்ய ஷ்ரயாவுக்காக இந்த படத்த பார்க்க வேண்டி வந்திருச்சு... சந்தானம், பறவை முனியம்மா comedy கொஞ்சம் நல்லா இருந்திச்சு...
மொத்தத்தில படத்தில comedy மத்தும் பார்த்துட்டு escape ஆகுறது உங்க உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.... கடைசியா விஷால்கிட்ட ஒரே ஒரே கேள்வி "விஷால் அண்ணா விஷால் அண்ணா உங்க சம்பளம் எவ்வளவுங்கண்ணா??" டேய் ஒழுங்கு மரியாதையா அதில 1/4 தந்திடு இல்ல மவனே அவ்வளவுதான்.... எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படத்த பார்த்திருக்கேன் அதுக்காகவாவது தந்திடுடா டேய்....



படங்கள் - நன்றி indiaglitz
மலை போன்ற வலிமை உடைய குணத்தை உங்கள் முக்கியமான இலக்குகளில் ஒன்றாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் இலக்குகளையும் மதிப்பையும் உயர்வாக வைத்துக் கொண்டு அவற்றை அடையும் முயற்சியில் இருந்து மாறாதீர்கள்.

நேர்மையான உண்மையான வாழ்க்கையை வாழும் போது ஆர்வத்தோடும் மதிப்போடும் நமக்குள் ஏற்படும் தன் மதிப்பு இன்னும் வலிமையோடு போராடும் உணர்வை கொடுக்கும்.
--
http://tamizachi.com/
மலை போன்ற வலிமை உடைய குணத்தை உங்கள் முக்கியமான இலக்குகளில் ஒன்றாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் இலக்குகளையும் மதிப்பையும் உயர்வாக வைத்துக் கொண்டு அவற்றை அடையும் முயற்சியில் இருந்து மாறாதீர்கள்.

நேர்மையான உண்மையான வாழ்க்கையை வாழும் போது ஆர்வத்தோடும் மதிப்போடும் நமக்குள் ஏற்படும் தன் மதிப்பு இன்னும் வலிமையோடு போராடும் உணர்வை கொடுக்கும்.
--
http://tamizachi.com/

கருத்துகள் இல்லை: