புதன், 10 ஜூன், 2009

2009-06-10

உயரே
பெரிய
சிறகடித்து
சிறிய
இமை விரித்து
உற்றுத்தேடும்
பருந்துக்கண்கள்

ஓடிப்பாய்ந்து
சிறகில்
போர்த்தியும்
குஞ்சை இழக்கும்
தாய்க்கோழி

பஸ்ஸில்
தடவித் தடவி
படர்ந்துபோகும்
மணிதகண்ணிலின்று
ஒளித்தும்
மறைத்தும்
ஒய்ந்துபோகும்
சேலைத்தலைப்புகள்
நடிகர் பிரசாந்துடன் நடந்த திருமணம் செல்லாது என்று குடும்ப நல கோர்ட்டு சொன்ன தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கிரகலட்சுமி தொடர்ந்த அப்பீல் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் பிரசாந்திற்கும் கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடந்தது. பல காரணங்களால் இருவரும் பின்னர் பிரிந்தனர்.

அப்போதுதான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், எனவே இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் சார்பில் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு அவர்களது திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

'குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதித்து, அதை ரத்து [^] செய்ய வேண்டும்' என்றும் கோரியிருந்தார்.

இவ்வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ஜனார்த்தன ராஜா [^] ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரசாந்த் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தர விட்டனர்.
ஒரு வழியாக 'தல'யாய பிரச்சனை ஒன்று தீர்ந்துவிட்டது... அசல் படத்தில் அஜீத்துக்கு சரியான ஜோடி அமைவதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டதால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க பாவனாவிடம் பேசி முடித்துள்ளார் இயக்குநர் [^].

சரண் இயக்கத்தில் சிவாஜி [^] புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான அசல் சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் [^] இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார்.

அஜீத்துக்கு ஜோடியாக பிரபல இந்தி [^] நடிகை சமீரா ரெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. இந்த வேடத்துக்கு நாயகியை வலைவீசித் தேடி வந்தனர். ஆனாலும் பொருத்தமான நடிகை கிடைக்காததால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் சினேகா, பாவனா இருவரிடமும் இந்த வேடத்துக்கு பேச்சு நடத்தப்பட்டது. இப்போது பாவனா இறுதி செய்யப்பட்டுள்ளார்.

பாவனா நடித்து வெளியான கடைசி தமிழ்ப் படம் ஜெயம் கொண்டான்.

அதன் பிறகு தெலுங்குப் பட உலகில் பிஸியாகிவிட்டார். தமிழ்ப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் அவருக்கு தெலுங்குப் படவுலகமும் பெரிதாகக் கைகொடுக்காததால், மீண்டும் தமிழில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என விரும்பினார். அதற்கு சரியான வாய்ப்பாக அசல் அமைந்துள்ளது.

எதிர்பார்த்து போலவே எல்லாம் அமைந்துவிட்ட சந்தோஷத்துடன் முதல்கட்ட படப்பிடிப்பு [^]க்காக மலேஷியா பறக்கிறது அசல் குழு.

முஸ்லிம்கள் தங்களின் ஒப்பற்ற இறைவனை வணங்குவதற்காக எழுப்பிக்கொண்டவைகள் தான் பள்ளிவாசல்கள். இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமின்றி முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்று கூடுமிடம். இத்தகைய பள்ளிவாசல்கள் மீது அதுவும் தொழுகை நேரத்தில் தாக்குதல் நடத்துவது பல்லாண்டுகளாக நடைபெற்று வருவதும் , இந்த தாக்குதல்களின் பல நூறு பேர் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்திய சுதந்திர போராட்ட்டத்தின்போது ஜூம்மா மேடைகள் சுதந்திர தாகத்தை ஊட்டும் காரணியாக திகழ்வதை கண்ட வெள்ளையர்கள், ஒரு தொழுகையின் போது வெறியாட்டம் ஆடி முஸ்லிம்களை கொன்ற அந்த மஸ்ஜித் 'கூன் மஸ்ஜித்'[ரத்தப்பள்ளி] என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழீழம் பெறப்போகிறோம் என்று புறப்பட்டு, தமிழ்பேசும் சக முஸ்லிம்களை பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த போது ரத்த சகதியாக்கிய புலிகளின்[?] சாகசத்தை, இன்றும் காத்தான்குடி பள்ளிவாசல் 'கறைபடிந்த' சான்றாக திகழ்கிறது.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஷியா-சன்னி பள்ளிவாசல்களில் தொழுகையின் போது குண்டுகள் வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதற்கு காரணம் இஸ்லாம் காட்டித்தராத பிரிவுகள் என்ற பெயரால் முஸ்லிம்கள் பிரிந்ததுதான்.

ஈரானில் சமீபத்தில் பள்ளிவாசலில் தொழுகையின்போது குண்டு வெடித்து பலர் பலியாகி, உடனடியாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டது ஈரான் அரசு.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்களிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பலர் உயிரிழந்தனர். இந்த வழக்குகளில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தலையிலேயே குற்றமும் சுமத்தப்பட்டு இன்று இந்த வழக்கு நிலையும் 'வெடிக்காதகுண்டு' போல் அமைதியாக உள்ளது.

நேற்று தாய்லாந்தில் ஒரு பள்ளிவாசலில் தொழுகையின்போது புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக சுட்டதில்பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறாக உலகெங்கிலும் இஸ்லாமிய எதிரிகளின் இலக்காக திகழக்கூடிய பள்ளிவாசல்கள் விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.குறிப்பாக இந்தியாவில் முக்கியமான கோயில்களுக்கு பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்களை நியமிப்பதோடு அது மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தும் அரசு, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் கேமராக்கள் அமைப்பது இல்லை. ஆனால் முஸ்லிம்கள் நினைத்தால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் . பல லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிவாசல் எழுப்புபவர்கள், சில ஆயிரம் செலவு செய்து கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பள்ளிவாசலில் அசம்பாவிதம் நடப்பதை பெருமளவு குறைக்கமுடியும். அப்படியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால்கூட கேமராக்களின் துணை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தமுடியும், அதோடு அடித்தவனும் முஸ்லிம்-அழுபவனும் முஸ்லிம் என்ற பாணியில் நம்மீதே காவல்துறை பழிபோடாமல் பாதுகாக்க முடியும். மேலும், சமுதாய வாலிபர்கள் அதிக அளவில் பள்ளிவாசலோடு தொடர்பில் இருக்கவேண்டும். சந்தேகப்படும் வகையில் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிவாசல் கட்டுவதோடு நம்பணி நிறைவடைந்து விடாது. அங்கு இறைவனை வணங்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நம்பணிதான் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.

இன்று ஆப்பிள் நிறுவனம் தனது வலை உலாவியான சபாரியின்
மேம்படுத்தப்பட்ட 4.0 பதிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய
வலை உலாவிகளுக்கு இடையே நடக்கும் கடும் போட்டிகளை
சமாளிக்கும் விதமாக தனது சபாரியை தந்துள்ளது.

கவர்ச்சிகரமான தோற்றம், எளிமையான விண்டோஸ்க்கு ஏற்ற
வடிவமைப்பு, அதிவேகமான பக்கங்களை திறக்கும் திறன், அதிக
மெனுக்கள், டூல் பார்கள் போன்றவை இல்லாமை கண்களுக்கு
எளிமையாக உள்ளன. இதில் உள்ள Nitro Engine இன் ஜாவா
ஸ்கிரிப்ட் , Internet Explorer ஐ விட 8 மடங்கும் Firefox ஐ விட
4 மடங்கும் வேகமாக செயல்படகூடியதாகும்.

* எளிமையான முகவரிப்பட்டி (Address bar )
* பிரபலமான தளங்களின் பட்டியல்
* செய்திதளங்களின் பட்டியல் ( News panel )
* கூகுளின் தேடு பட்டை
* பார்த்த பக்கங்களின் முழுத்தோற்றம் ( Full page preview )
* மால்வேர் மற்றும் பிஷிங் ( Phishing) பாதுகாப்பு.

இதை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.

http://www.apple.com/safari/download/

கருத்துகள் இல்லை: