புதன், 10 ஜூன், 2009

2009-06-10

நண்பர்களே இரண்டு நாள் அலுவலக பயணமாக  சேலம் சென்றிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை மன்னிக்கவும்.   போர்ட்டபிள் மென்பொருட்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.  நமக்கு எந்த மென்பொருட்கள் வேண்டும் அந்த அனைத்தையும் அனைத்தும் ஒரு  யுஎஸ்பி டிரைவில் நிறுவிக் கொண்டு எந்த ஒரு கணணியில் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு.  இதனால் எந்த ஒரு கணணியில் நமக்கு வேண்டிய மென்பொருள் இல்லை என்ற அங்கலாய்ப்பு இருக்காது.  இதனால் பிரவுஸிங் சென்டர், நண்பர்கள் வீடு, சொந்தகாரார்கள் வீடு, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் போன்றவற்றில் உபயோகபடுத்திக் கொள்ளலாம். 
இந்த போர்ட்டபிள் மென்பொருட்கள் அனைத்தையும் இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். சுட்டி.  இது எல்லாம் தனித் தனி மென்பொருட்களாக இருக்கிறது.

இதுவே ஒரே மென்பொருளில் அனைத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் லிபேர்கீ என்ற மென்பொருள்.

இந்த மென்பொருளை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள்

1. பேஸிக்
2.  ஸ்டாண்டார்டு
3.  அல்டிமேட்

பேஸிக் வகையில் இத்தனை மென்பொருட்கள்


ஸ்டாண்டார்ட் வகையில் இத்தனை மென்பொருட்கள்



அல்டிமேட்  வகையில் இத்தனை மென்பொருட்கள்




இந்த மென்பொருட்களை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் திறமை படைத்தவை

இந்த மென்பொருட்களை தரவிறக்க சுட்டிகள் கீழே

பேஸிக்

ஸ்டாண்டார்டு

அல்டிமேட்



குறிப்பு :  அனைத்து புகைப்படங்களையும் கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்


படிக்கும் அனைவரும் விளம்பரங்களை கிளிக் செய்யவும்,  அப்படியே தமிலிஸில் ஒட்டளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்


நன்றி மீண்டும் வருகிறேன்


More than a Blog Aggregator

by CUTE PICTURES
உங்கள் ஆன்மீக ஞாபக சக்திக்கு ஒரு சிறிய சோதனை.....!( கொஞ்சம்........ இல்ல ரொம்ப ஓவரா இருக்கோ )
ராமாயணத்தில்,தசரதர் இளம் வயதில் காட்டுக்கு வேட்டையாடப் போய்,அங்கே தன் பெற்றோரை தோளில் சுமந்து செல்லும் சிரவ்ணனை தண்ணீர் குடிக்க வந்த யானை என நினைத்து அம்பு எய்திக் கொன்றான் இல்லையா?......
அந்த அம்பின் பெயர் என்ன?.............................
விடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா................

( உஸ்ஸ் ஹப்பா ஒரு பதிவு போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...)
சக்கரை சுரேஷ் தமிழிஷில் இணைத்த ஓரு பதிவில் தமிழிஷில் விழுந்த பின்னூட்டங்களை இந்த தமிழிஷில் நடந்த விறுவிறுப்பான சண்டைகாட்சிகள் லிங்கில் பார்க்கவும்.


இந்த மாதிரி சண்டைலதான் பல உண்மைகள் வெளிவரும்கிறது காலம் காலமா நடக்குற விஷயம். அதனால தமிழிஷா, தமிழர்ஸா, நெல்லை தமிழா, தமிழ்10 ஆ, உலவா என நடந்த சண்டையில் தமிழிஷ் ஓனர் யாருன்னு சந்தேகத்தின் பேரில் நிறைய பேரை ஜீப்பில் ஏத்தலாம்.

தமிழர்ஸ் ஓனர் சக்கரை சுரேஷா, இல்லை போன வாரம் வரைக்கும் தமிழரா இருந்து இந்த வாரம் இங்கிலீஷ்காரரா மாறிபோன பிரியமுடன் வசந்தா இல்லை இந்த வாரம் மட்டும் தமிழரா இருக்கும் கடைகுட்டியா அப்பிடிங்கறதை தனிபதிவா போட்டு அலசலாம்.

இப்ப யாரையெல்லாம் ஜீப்ல ஏத்தலாம்னு பாக்கலாம். அந்த பின்னூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், tamilnenjam, sureshsakkarai, alwaysarafath, priya-win, true-tamil, kummachi, kilukku, karthigan, appavitamilan, globen

இதுல true-tamil கடைசிவரை சண்டை போட்டதால அவர் தமிழிஷ் ஓனரா இருக்க முடியாது. இருந்தாலும் அவரு போட்ட சண்டைலதான் பல மேட்டர் வெளிய வந்ததுனால அவரை ஜீப்புல ஏத்திருவோம்.

அப்புறம் நம்ம பின்னூட்ட பிசாசு (உபயம்: கலை) சக்கரை சுரேஷ் அவரு சமீபத்துலதான் தமிழிஷின் மோசடின்னு ஒரு பதிவு போட்டதுனால அவரும் இருக்க முடியாது. ஆனா சண்டைக்கு நடுவுல தமிழிஷ் ஓனர் என் கூட போன் பேசினாருன்னு வாக்குமூலம் கொடுத்ததால அவரையும் ஜீப்புல ஏத்தி முட்டிக்கு முட்டி தட்டுனா உண்மை தானா வெளிவந்துரும்.

கும்மாச்சி நடுவுல ஒரே ஒரு இடத்துல வந்து நியூஸ் பானைல எதும் பிரச்சனை இருக்கானு சண்டைக்கு சம்பந்தமே இல்லாத ஓன்னை பத்தி கேட்டதால அவருதான் நியூஸ் பானை ஒனரான்னு சந்தேகம் வலுக்கிறது. அது பத்தி தனியா ஒரு பஞ்சாயத்து வச்சுக்கலாம்


இதில் பிரியாவின் மற்றும் கார்த்திகன் விவாதத்தில் மிக தீவிரமாக கலந்து கொள்ளாததால் அவர்களின் மேல சந்தேகபார்வை அவ்வளவாக இல்லை. ஆனாலும் அவர்கள் வேற ஏதாவது ஓரு திரட்டிக்கு ஒனரா இருக்க கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மீதம் இருப்பவர்கள் tamilnenjam, alwaysarafath, kilukku, appavitamilan, globen இதில் தமிழ்நெஞ்சம் இதுவரைக்கும் தமிழிஷில் 5000 ஓட்டுகளுக்கு மேல் போட்டிருப்பதாலும் அடிக்கடி தமிழிஷில் கமெண்ட் போடுறதாலும் இவர் மேல் சந்தேகம் வலுக்கிறது. கிலுக்கு பலபதிவை தமிழிஷில் இணைப்பதாலும் இந்த சண்டையில் மிக தீவிரமாக இருந்ததாலும் இவர் மேலும் சந்தேகம் வலுக்கிறது.

மத்தவங்க எல்லார் மேல சந்தேகம் இருந்தாலும்..alwaysarafath வந்து சண்டைக்கு நடுவுல அடிக்கடி வந்து என்னை யாரும் தமிழிஷ் ஓனரான்னு சந்தேகபடாதீங்க சந்தேகபடாதீங்க ன்னு அப்பப்போ கூவுறதால இவர் மேல பயங்கரமா சந்தேகம் வலுக்கிறது..ஏன்னா எங்க ஊருல இப்பிடிதான் யாராவது ஆடு களவாண்டத பத்தி பஞ்சாயத்துன்னா.. ஆடு களவாண்டவன்தான் "யார்ரா களவாண்டது" அப்பிடீன்னு ஓவரா சவுண்ட் விடுவான். அதனால அந்த அடிப்படையில பார்த்தா.. alwaysarafath மேல சந்தேகம் பயங்கரமா வருது.

அதனால உண்மையான தமிழிஷ் ஓனர்களே இந்த சந்தர்பத்திலாவது உண்மையை சொல்லிருங்க. இல்லேன்னா சில பன்னாடைங்க ஹிட்ஸ்க்காக வேண்டி தமிழிஷ் ஓனர் யாருன்னு பதிவும் போட்டு அதையும் தமிழிஷ்லயே இணைப்பாங்க பாத்துகிடுங்க..


டிஸ்கி:
இது முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டுமே எழுதபட்டது. யார் மனதையும் புண்படுத்த அல்ல. யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென உணவுப் பொருள்கள், மருந்துப்பொருள்கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு உதவி உபகரணங்கள் என்பவற்றை எடுத்து வந்த கப்டன் அலி என்ற "வணங்கா மண் "கப்பல், இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.போரினால் நிர்க்கதியற்று நிற்கும் தமது உறவுகளுக்கு, தொலைதேசத்தில் வாழ்ந்தாலும் உதவ வேண்டும் என்ற பாசஉணர்வுடன் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து
போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென உணவுப் பொருள்கள், மருந்துப்பொருள்கள் மற்றும் வலது குறைந்தவர்களுக்கு உதவி உபகரணங்கள் என்பவற்றை எடுத்து வந்த கப்டன் அலி என்ற "வணங்கா மண் "கப்பல், இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.போரினால் நிர்க்கதியற்று நிற்கும் தமது உறவுகளுக்கு, தொலைதேசத்தில் வாழ்ந்தாலும் உதவ வேண்டும் என்ற பாசஉணர்வுடன் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து

கருத்துகள் இல்லை: