புதன், 10 ஜூன், 2009

2009-06-10

தேர்தல்ன்னா ஆயிரக்கணக்கில் பணம்ங்கற ட்ரெண்ட், ரொம்ப வேகமா பரவிக்கிட்டு இருக்குது. திருமங்கலம் அதுக்கு ட்ரெண்ட் செட்டர்.

முன்ன, அமைச்சர் லெவல்ல கொள்ளை அடிச்சாங்க. பிறகு, அதிகாரிகள், உதவியாளர்கள் என்று விரிவடைந்து மாவட்ட செயலாளர்கள், வட்டம் என்று வந்தது. அடுத்தக்கட்டமாக, "எனக்கு ஓட்டு போடு, உனக்கு லஞ்சம் கொடுக்குறேன். பிறகு, நான் அத கொள்ளை அடிச்சுக்கிறேன்" என்று இப்ப மக்களுடனேயே டீலிங் வந்தாச்சு. நாடு சீரழிவதின் மற்றொரு அடையாளம்.

இந்த தேர்தல்ல வழக்கத்தை விட அதிகமா பண மழை பெய்யுதுன்னு சொல்றாங்க. மக்கள் கிட்டயும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்காம்.

பணத்தை தண்ணியா செலவழிக்கறதா சொல்லுவாங்க. பணமும் தண்ணிதான். புரியலைன்னா, கீழே படத்த பாருங்க.



இந்த படத்துல இருக்குற சூரியன்ல எந்த வித அரசியலும் இல்ல. இது இயற்கை. :-)

அசல் படம் எடுக்கப்பட்டது : www.sawater.com.au. நன்றி
பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்


More than a Blog Aggregator

by சரவணகுமரன்
அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளை.

"சரியா வளைச்சி போட்டுட்டாங்க, போல?" என்றபடி வந்தமர்ந்தார் ஒரு ஆந்திர நண்பர்.

எதிரில் அமர்ந்திருந்த ஒரு தமிழ் உணர்வாளர் அவரை முறைத்தபடி பொறித்து தள்ளிவிட்டார். "எதுவும் தெரியாம பேச கூடாது. அமைதியா சாப்பிடுங்க" என்று கடைசியில் முடித்தார்.

அவரை சொல்லி குற்றவில்லை. ஈழத்தை பற்றிய புரிதல் நம் மக்களிடையே அவ்வளவுதான். அட, மற்ற மாநிலத்தவரை விடுங்கள். நம்மிடையேதான் எத்தனை பேருக்கு இந்த உணர்வு இருக்கிறது?

---

இனத்தை விட பணம் தான் முக்கியம் போல?

தேர்தலுக்கு முன்னால் யாருக்கு ஓட்டு போட? என்று சிலரிடம் கேட்ட போது, 'போர் நடந்தால் யார் என்ன செய்ய முடியும்? காங்கிரஸ் வந்தால் பொருளாதார சீர்திருத்தம் இருக்கும். நம்ம வேலைக்கு நல்லது. வரி குறையும்' என்று தான் கருத்து சொன்னார்கள். மத்தவன் செத்தா என்ன, இருந்தா என்ன? முதல்ல நாம நல்லா இருப்போம் என்பது தான் பெரும்பாலோரது மனநிலை.

தேர்தலின் போதும் வைகோ, சீமான், பாரதிராஜா போன்றவர்களோட உணர்வுபூர்வமான பிரச்சாரங்களை மீறி இருநூறு ரூபாய் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டுதான் பலர் ஓட்டு போட்டார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம் மனதை பாதிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், செய்திதாளை (முக்கியமாக வட இந்திய) அதிகம் ஆக்கிரமித்து இருந்தது, சென்செக்ஸில் எகிறியடித்திருந்த இரண்டாயிரம் பாயிண்ட்கள்.

இப்படி தொடர்ந்து இன உணர்வை மீறியபடி பண உணர்வு.

---

நிறைய ஆய்வு கட்டுரைகள் வர தொடங்கிவிட்டது. தோல்விக்கு காரணம் என்ன என்று?

போன வழி சரியா? எடுத்த முடிவுகள் சரியா? என்று விவாதங்கள். ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிற கடந்த கால நிகழ்ச்சிகள்.

வெற்றி பெற்றிருந்தால் இதெல்லாம் வெற்றிக்கான காரணம் ஆகிருக்கும்.

எது எப்படி இருந்தாலும் இங்கு எப்போதும் வெற்றி பெற்றவன் பேச்சு தான் நியாயமானது. உண்மையானது. சரியானது.

வெற்றி பெற்றவன் உளறினால் கூட அது பொன்மொழி.
சொல்லுபவன் தோல்வியடைந்தால் சொல்வது பொன்மொழியாக இருந்தாலும் கூட அது உளறல்.

---

ஆளாளுக்கு ஒரு கோட்பாடு. ஒரு சித்தாந்தம்.

இவர்களது இந்த நிலைப்பாடால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள், எதை பற்றியும் அறிந்திராத குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதும் முக்கியம். எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்று எண்ணும் ஜீவன்களுக்கு சுதந்திரம் கொடுப்பதும் அவசியம்.
பதிவுகளை தொடர்ந்து ரீடரில் படிப்பதற்கு நன்றி - சரவணகுமரன்
ஆனந்த தாண்டவம், சர்வம், சிவபுரம் என்று வாராவாரம் ஏதோ கோவிலுக்கு நேர்ந்து விட்டாற் போல் பலிகடா ஆகிக்கொண்டே வந்ததற்கு சற்றே ஆறுதலாக அமைந்தது ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ்.

ஏற்கனவே "தி டாவின்ஸி கோட்" படத்தை 3 முறை தமிழில் பார்த்தும் முழுதாகப் புரியாவிட்டாலும் :-(‍‍ அந்தப் படம் தந்த பிரமிப்பு அகலாததால் தோரணையில் இருந்து தப்பித்து இப்படத்திற்குப் போனோம்.

இதுவும் டான் பிரவுன் எழுதிய நாவல் தான்.

வாடிகன் சிட்டியில் போப் திடீரென இறந்து போவதில் ஆரம்பிக்கிறது கதை. போப்பிற்கு அடுத்த இடத்தில் உள்ள 4 பாதிரியார்களும் கடத்தப் படுகிறார்கள். இதோடு சேர்த்து உலகத்தின் ஆரம்ப உயிர்த்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கிடைத்த சக்தி வாய்ந்த வஸ்துவும் (ஆண்டிமெட்டர்) காணாமல் போகிறது.இவ்விரண்டையும்
செய்தது இலுமினாட்டி என்ற வாடிகன் சர்ச்சிற்கு எதிரான இயக்கத்தினர்தாம் என்பதும், அவர்கள் நோக்கம் வாடிகன் சர்ச் பாதிரியார்களையும் வாடிகன் நகரையும் அழிப்பது தான் என்பதும் தெரிய வருகிறது.

இந்நிலையில் பேராசிரியர் லாங்டனின் உதவியை நாடுகிறது போலீஸ். லேங்டனும், போலீஸும் சேர்ந்து பாதிரியார்களிக் காப்பாற்றினார்களா? வாடிகன் சிட்டி காப்பாற்றப்பட்டதா? உண்மையிலேயே இதைச் செய்தது இலுமினாட்டி
அமைப்பினர் தானா? என்ற கேள்விகளுக்கு எல்லாம ஆத்திகம் / நாத்திகம் / விஞ்ஞானம் எல்லாம் கலந்து கட்டி பரபரவென்று விடை சொல்லியிருக்கிறார்கள் படத்தில்.

லேங்டனாக டாம் ஹேங்க்ஸ். ஹீரோ என்றால் ஆய் ஊய் என்று கத்தி காதைப் பஞ்சராக்குவது / பஞ்ச் டயலாக் பேசுவது
மினிமம் 3 ஹீரோயின்கள் உடன் நடிப்பது போன்ற மிகச் சிறந்த விஷயங்களையெல்லாம் செய்யாமல் அமைதியாக, அறிவுப் பூர்வமாக, அழகாக நடித்து நம் ஹீரோக்களையெல்லாம் கேலி செய்துள்ளார்.

ரோன் ஹாவர்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஞ்ஞானமா ? ஆத்திகமா என்ற கேள்வி வரும் போதெல்லாம் மனுசன் புகுந்து விளையாடியுள்ளார். கடவுள் பற்றிய கருத்துக்கள் வரும் போதெல்லாம் பெரியார் புத்தகம் படிப்பது போல் இருந்தது.

வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் எல்லாமே நன்றாக உள்ளது.

தி டாவின்ஸி கோட் ‍ தொடர்ச்சி என்பதற்காக அப்படியே அதே பார்முலாவையே பயன்படுத்தியிருக்க வேண்டுமா?
அதை விட இந்தப் படம் கொஞ்சம் இலுவை அதிகம். தாக்கம் குறைவு.

நம் நாட்டில் உள்ள‌ மதங்களில் கூட எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளது. அதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்ல முடியும். ஆனால் நமக்கு கிடைத்த பாக்கியமோ " ராஜாதிராஜா / சர்வம் என்ற அளவில் தான் உள்ளது.


More than a Blog Aggregator

by Jothivel Moorthi.AC
இலங்கையில் 1972 முதல் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:



1972:சிலோன் என்பது இலங்கை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்த மதத்துக்கு நாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.


1976:தனி ஈழம் கோரி போராட "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்' (எல்டிடிஈ) என்ற தனி அமைப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்றுவித்தார்.


1977:இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசித்த வடகிழக்கு பகுதியில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி அங்கு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.


1981:தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் சிங்களர்கள் மீதான கோபத்தை அதிகரித்தது.


1983:வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


1985:இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.


1987:ராணுவம் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தி புலிகளை அங்கிருந்து பின்வாங்க வைத்தது. தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புதிய கவுன்சில்களை அரசு உருவாக்கின. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு வரவழைக்க இந்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டது.


1990:இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. இதையடுத்து ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது.


1991:சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பூதுரில் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை விடுதலைப்புலிகள்தான் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.


1993:விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இலங்கை அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார்.


1994:இலங்கை அதிபராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பேற்றார். அவர் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினார்.


2002:நார்வே நாட்டின் முயற்சியால் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


2004:விடுதலைப் புலிகள் அமைப்பின் கமாண்டராக பதவி வகித்த கருணா, அமைப்பில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று புலிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட ஆரம்பித்தார்.


2005:புலிகளால் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.


ஜனவரி, 2008:புலிகளுடன் எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த உடன்பாட்டை தன்னிச்சையாக ரத்து செய்தது இலங்கை அரசு.


ஜூலை, 2008:விடாத்தல் தீவில் புலிகளின் முக்கிய கடற்படைத் தளத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவம் அறிவிப்பு.


ஜனவரி, 2009:புலிகளின் தலைநகராகவும், கோட்டையாகவும் கருதப்பட்ட கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது.


ஏப்ரல், 2009:புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான முல்லைத்தீவையும் ராணுவம் கைப்பற்றியது.


மே 16,2009:விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவிப்பு.


மே 17, 2009:ராஜபட்ச சொல்வது போல் போரில் தோற்றுப்போகவில்லை என விடுதலைப் புலிகள் அறிவிப்பு.


மே 18, 2009:பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய ஏழு தலைவர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள வன்னிக் காடுகளில் இருந்து போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தி வந்த பிரபாகரன், பலமுறை இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளார். எனினும் தற்போது நடைபெறற இலங்கை ராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் அவரது வாழ்க்கையுடன், அவரது தனி நாடு கனவும் முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை: