புதன், 10 ஜூன், 2009

2009-06-10

லண்டன் "டைம்ஸ்" இதழைத் தொடர்ந்து "The Real News Network" என்ற தற்சார்பான செய்தி நிறுவனமும் (இதன் இந்திய நிர்வாகிகளில் ஒருவராக சென்னையில் உள்ள Asian College of Journalism - கல்லூரியின் நிர்வாகிகளில் ஒருவரான திரு. சசி குமார் மேனனும் இருக்கிறார். இவர் 80 - களில் தூர்தர்ஷன் ஆங்கிலச் செய்திகளை வாசித்தவர் என்பது சிலருக்கு நினைவிருக்கலாம்) ஈழத்தில் போரின் இறுதி நாட்களில் சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட பெரும்படுகொலை குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசு மீது சர்வதேச சமூகத்தின் நடவடிக்கையை பல வழிகளில் முடக்கிய ஐக்கிய நாடுகள் சபையே இத்தகவலைக் 'கசிய'விட்டுள்ளது இதிலுள்ள முரண்நகை :(

செய்தியைக் காண்க:

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பழையத் திரைப்படப்பாடல் ஒன்று (குலதெய்வம் -1956).

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார்

வாய் கொப்பளிக்கும் முன்னே

கொஞ்சம்
காப்பியையும் குடித்து விட்டார்.

குளிக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்

தன்னை குழந்தை போல் எண்ணிவிட்டார்

எங்க சின்ன மச்சான் - இப்போ

பட்டம் விட புறப்பட்டு விட்டாரைய்யா

பட்டம் விட்டாரையா -எட்டாத

உயரத்திலே விட்டாரைய்யா
பட்டம் விட்டாரைய்யா
பறக்க விட்டாரைய்யா

ஆராரோ பட்டம் விட்டு

பேராசை வட்டமிட்டு

ஆடி ஓடி போனதைப் போலே

விட்டாரையா - அணை

கட்டாத ஏரி தண்ணி
கடலோடு போனது போல
கற்றதெல்லாம் காற்றோடு

விட்டாரைய்யா


டா பட்டம், டீ பட்டம்
ஜமீன் பட்டம், சாமி பட்டம்

ஜாதி பட்டம்,பகதூர் பட்டம்
லேடி பட்டம் கேடி பட்டம்

வாலறுந்து நூலறுந்து

போன இடம் தெரியலே-இந்த

வேலையத்த மச்சான் வெறும்

காகித பட்டம் கட்டி
விட்டாரைய்யா -ஓட
விட்டாரைய்யா

பலவித பட்டங்களை பெறுவதாலேயே தங்களை அறிஞர்களாகவோ, சமூகத்தில் பெரும் புள்ளிகளாவோ காட்டிக்கொள்ளும் முயற்சி அந்த காலத்திலிருந்து இருந்து வந்திருக்கி்றது. பலர் அதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொள்கின்றனர். அவைகளெல்லாம் வாலறுந்து, நூலறுந்து போன கதைதான். எத்தனை திவான் பஹதூர்களை உலகம் நினைத்துப் பார்க்கிறது? மந்திரி பதவி இருந்தால் டாக்டர் 'பட்டம்' உண்டு. பணம் (கொடை) கொடுக்கும் நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கூட அது சுலபமாக கிடைக்கும்.

இன்றைய காலத்தில் "பத்ம" பட்டங்கள், கலைமாமணி, இத்யாதிகளும் உண்டு. இதைத்தான் "ஆராரோ பட்டம் விட்டு பேராசை வட்டமிட்டு ஆடி ஓடி போனதை போலே" என்று பட்டுக்கோட்டையார் கேலி செய்கிறார்.

இப்படி ஒரு வாழ்க்கை முழுவதும் போலி வெற்றிகளுக்காக போராடும் வாழ்க்கையைப் பற்றி சினா சோனா சொல்வதை பார்ப்போம்.



A LONG LIFE MAY NOT BE GOOD ENOUGH
BUT A GOOD LIFE IS LONG ENOUGH

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைக்காட்டிலும் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

Good Life என்பது அணைகட்டிய நீர். ஒரு ஒழுங்குபாடு உள்ளது. அதனால் பல நன்மைகள் சமுதாயத்திற்கு உண்டு. பிறருக்கு எவ்வகையிலேனும் பயன்படாத வாழ்க்கையானால் அவர்கள் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தென்ன ? அவர்கள் எவ்வளவு படித்திருந்தென்ன ! பட்டுக்கோட்டையார் சொல்வது போல் "கற்றதெல்லாம் காற்றோடு விட்டாரைய்யா" என்கிற நிலைதானே !

மாபெரும் சாதனையாளர்கள் எனப் போற்றப் பெறுபவர் அனவரும் பெரும்பாலும் சாதனைகளை மிக இளம் வயதிலேயே சாதித்துள்ளனர். ஆதிசங்கரர், விவேகானந்தர், ஸ்ரீனிவாஸ ராமானுஜம், பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் போன்றவர்கள் தமது நாற்பது வயதுக்குள்ளாகவே தத்தம் துறையில் சாதனை படைத்து அமரத்துவம் எய்திவிட்டனர்.

அவர்களால் உலகம் பயனடைந்திருப்பதனால்தான் அவர்களை இன்றளவும் நினைத்துப்பார்க்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கை உண்மையிலே Good Life.

அன்பிற்கினிய பதிவர்களே, தோழமைகளே!

வன்னி பெருநிலத்தில் வல்லாதிக்க நாடுகளின் வழிகாட்டுதலோடு சிங்கள பேரினவாதத்தால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன் தாக்குதலானது... ஒரு முடிவை எட்டியிருக்கிறது.

இறுதிகட்ட போர் என்ற பெயரில் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்திருக்கும் 10,000 முதல் 15,0000 ஈழதமிழர்களின் தடயங்களை மறைக்கவும்... உலகத்தின் பார்வையில் இருந்து திசை மாற்றவும்... போரியல் குற்றங்களை மறைக்கவும்... சிங்கள பேரினவாதம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று வதந்திகளை பரப்பி வருகிறது.

தங்களுடைய அண்ணன், தம்பி, சிற்றப்பா, மாமா, தாய், தமக்கை,... என்று ஏதோவொரு உறவுகளை இழந்து கண்ணீரோடும், வாழ்வின் அடுத்த கணத்தை பற்றிய கேள்வி குறியோடும் திறந்த வெளி சிறைசாலை கூடாரங்களில் அடைப்பட்டு கிடக்கும்... வன்னி மக்களுக்கும்... அவர்களின் உறவுகளாக உலகெங்கும் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயரங்களில் பங்கெடுப்போம். அவர்களுக்கு ஆறுதல் என்பது நம்மிடையே இல்லை... ஆனால் அவர்களை காயப்படுத்தாமல் அமைதியாக இருப்போம்.

பேரினவாதத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே!
உங்களுடைய உறவுகளை இழந்து துயருற்று கிடக்கும் வேளையில்... எம்மால் உமக்கு என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை...!
கடைசி கணம் வரை போராளிகளுடன் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகள் இவர்கள் என்று மடிந்த மக்களை எண்ணி கண்ணீர் வடிப்பதை தவிர என்னிடம் ஏதுவுமில்லை...!

இவ்வளவு துயரங்களுக்கு ஊடாகவும் புலிகள் தங்களால் இயன்றவரை வன்னி மக்களின் மரணத்தை கடைசி சில நாட்கள் வரை பதிவு செய்திருந்தார்கள்... இப்பொழுது இந்த கடமை உங்கள் கைகளில் வந்திருக்கிறது....

வன்னி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி... இறுதி போர் என்று பெயரால் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்த மக்களின் தடயங்களை பதிவு செய்வதும்... அவர்களின் வாழ்க்கை, வரலாற்றை பதிவு செய்வதும் அவசியம்! காலத்தின் கட்டாயம்!.

துயரங்களுக்கு மத்தியிலும் துளி நம்பிக்கையுடன் துடித்தெழுவோம்!
நதியின் பயணத்திற்கு நாணல்களா தடை!
பேரினவாதம் இருக்கும் வரை உரிமைக்கான போராட்டம் தொடரும்!

கண்ணீருடன்...
அரசு

விடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்
ஆய்வு குறித்த முன்னோட்டம்


இந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நாவலாசிரியைகள் நாவல்களைப் படைத்துள்ளனர்.அவர்கள் பற்றிய ஆய்வு விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் என்ற தலைப்பில் என்னால் முனைவர் பட்டத்தி்ற்காகச் செய்யப்பட்டது

விடுதைலக்கு முந்தைய நாவலாசிரியைகள்

இராஜலட்சுமி அம்மாள்,
குமுதினி,
கோதைநாயகி அம்மாள்
வி, சரஸ்வதி அம்மாள்,
சித்தி ஜுனைதா பேகம்,
சாரநாயகி அம்மாள்,
பாலாம்பாள்,
மலைமகள்,
மீனாட்சி சுந்தரம் அம்மாள் ,
ராமாமிர்தத்தம்மாள்,
விசாலாட்சி அம்மாள்,
வேங்கடலட்சுமி,
ஸரோஜா ராமமூர்த்தி,
ஜெயலட்சுமி சீனிவாசன்,

இந்திய விடுதலைக்குப் பின் கல்வி கற்ற பெண்களின் நாவல் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன.எனவே தமிழ் நாவல் உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.இக்காலத்தை பெண்ணிய காலம் எனலாம்.

இக்காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாற்பது பேருக்கு மேல் அமையலாம்.


அம்பை,
அமுதாகணேசன்,
அரசுமணிமேகலை,
அனுராதா ரமணன்,
அனுத்தமா,
ஆனந்தி,
இந்துமதி,
உமா சந்திரன்,
கார்த்திகா ராஜ்குமார்,
காவேரி,
குமுதினி,
கோமகள்,
சரளா ராஜகோபாலன்,
சல்மா,
சித்திஜுனைதா பேகம்,
சிவகாமி,
சூடாமணி,
திலகவதி,
பாமா,
ரமணிச்சந்திரன்,
ராஜம் கிருஷ்ணன்,
லஷ்மி,
லஷமி சுப்பிரமணியன்,
லீலா கிருஷ்ணன்,
வாசந்தி,
வித்யா சுப்பிரமணியன்,
ஜெயந்தி சங்கர்,
ஜோதிர்லதா கிரிஜா,

இவர்களின் ஏறக்குறைய 300 நாவல்கள் ஆய்வுக்குரிய களம் ஆகும்,

தமிழ் இதழ்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளேன்.

உங்களின் பதில்கள் எனக்குப் பயன்படக்கூடும்

கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் ஒரு படிவம் தோன்றும். அதில் விடையளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அதிக நேரம் பிடிக்காது. பதிலளிக்க மிகச் சில நிமிடங்களே ஆகும் வகையில் படிவம் உருவாக்கப்பட்டுள்ளது

http://www.surveymonkey.com/s.aspx?sm=YElCNLuiOwqDdxo2_2bKLcIA_3d_3d

உங்கள் பதில்களை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்

நன்றி

கருத்துகள் இல்லை: