புதன், 10 ஜூன், 2009

2009-06-10





று நிமிடங்களில் முடிந்து விடுகிற படம் அது.

ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார் (ஸல்)
பசியை ஒழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று முழங்கினார் ஒரு கவிஞர். அந்த உணர்வு எங்கே?

உணர்வற்ற மக்களாய் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்?
அந்தப் படத்தை embed செய்ய முடியவில்லை. இங்கு க்ளிக்கு செய்யவும்.




று நிமிடங்களில் முடிந்து விடுகிற படம் அது.

ஆறாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது.

பசித்தவர்களுக்கு உணவளிப்பது தான் இஸ்லாம் என்றார் அண்ணல் நபிகளார் (ஸல்)
பசியை ஒழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம் என்று முழங்கினார் ஒரு கவிஞர். அந்த உணர்வு எங்கே?

உணர்வற்ற மக்களாய் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்?
அந்தப் படத்தை embed செய்ய முடியவில்லை. இங்கு க்ளிக்கு செய்யவும்.


இன்று விகடன் முகப்பு பக்கத்தில் என் பதிவு வெளியாகியுள்ளது. விகடனுக்கு என் நன்றிகள். கோடை வெயிலை எப்படி எதிர்கொள்வது? என்ற கட்டுரைதான் அது. முகவரி: http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp http://youthful.vikatan.com/youth/manivarmastory07052009.asp



இன்று விகடன் முகப்பு பக்கத்தில் என் பதிவு வெளியாகியுள்ளது. விகடனுக்கு என் நன்றிகள். கோடை வெயிலை எப்படி எதிர்கொள்வது? என்ற கட்டுரைதான் அது. முகவரி: http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp http://youthful.vikatan.com/youth/manivarmastory07052009.asp

ஸ்டாலினைச் சேர்க்கப் பிரபல ஆங்கிலப் பள்ளியை நாடினார் கலைஞர். புரட்சியாளரின் பெயரை மாற்றினால் பள்ளியில் அனுமதிக்கலாம் என்ற பதில் வந்தது. புரட்சிவீரனின் பெயரை மாற்றமுடியாது; பள்ளியை மாற்றிக் கொள்கிறேன் என்று வேறு பள்ளியில் சேர்த்தார். ஸ்டாலினின் வாழ்வு பல சம்பவங்கள் நிறைந்தது. கட்சி மாச்சரியங்களின்றி அவரது பயணம் குறித்த ஒரு நடுநிலைப் பதிவு.

மார்ச் 1, 1953 ல் பிறந்தார். கலைஞரின் அரசியல் வாழ்வு துவங்கியது 13 வயதில். ஸ்டாலின், 15 வயதில். சென்னை மாநகராட்சித் தேர்தலில் முதல் களப்பணி. வருடம், 1969. 1973 ல் துவக்கப்பட்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர். 1975 ல் திருமணம். சில மாதங்களிலேயே மிசா (Maintenance of Internal Security Act (MISA)) சிறைவாசம். சிறையில் கொடுமையாகக் கையாளப்பட்டார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். 1976 ல் போலீஸ் பாதுகாப்போடு B.A தேர்வெழுதினார். 1977 ல் மிசா விலக்கிக் கொள்ளப்பட்டது. விடுதலையானார். 

1977 முதல் 1987 வரை தமிழக அரசியலில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் காலம். 1989 ல் முதல்முறை எம்.எல்.ஏ. 1990 ல் ரஷ்யக் கலாச்சாரத்துறையின் அழைப்பு. 1991 தேர்தலில் தோல்வி. 1996 ல் வெற்றி. பதவி ஏதும் வகிக்கவில்லை. 1996 ல் சென்னையின் 44 ஆவது மேயர். நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர். 2006 தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ. இம்முறை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். 

தற்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வர். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு முதலவர் எடுத்த முடிவு. ஏற்கனவே இருக்கும் உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சித் துறையோடு தொழில் துறை, சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் சமூக சீர்திருத்தத் துறைகள் கூடுதலாக அளிக்கப்படுகின்றன. இவை முதல்வர் பொறுப்பில் இருந்த துறைகள். நாடாளுமனறத் தேர்தல் வெற்றிக்கு உழைத்ததற்காக இந்தப் பதவி என்று கழகக் கண்மணிகள் கூறினாலும், முதல்வராவார் என்ற வெகுநாள் ஆருடம் பாதி பலித்திருக்கிறது.துணைமுதல்வர்.முதல்வருக்கான முன்னோட்டமாயிருக்கலாம். புதிய பதவிக்கு வாழ்த்துக்கள்.

கலைஞரின் ஆற்றலோடு ஒப்பிடுவது தவிர்க்க இயலாதது. ஒப்பீட்டில் இவர் குறைந்த மதிப்பெண்களே பெறுகிறார். தன்னைப் பற்றி எழும் விமர்சனங்களுக்குக் கூட முறையான பதில் தெரிவிக்காதது, அரசியலில் இருப்பவருக்கு அழகல்ல. முன்பு செய்திவாசிப்பாளரோடு இணைத்துப் பேசப்பட்டதற்கும் சரியான பதில் தெரிவிக்கவில்லை. சமீபத்தில்தான் அனைவரிடமும் சகஜமாகப் பழகத் துவங்கியிருக்கிறார் என்கிறார்கள் பலர். இது நீடித்தால் நல்லது. கலைஞரின் ஊடகத்தொடர்பு நாடறியும். மக்களிடம் தனது எண்ணத்தைச் சேர்க்க உதவும் ஊடகங்களிலிருந்து ஒதுங்கியிருப்பது ஏன்? இதைத் தந்தையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். விமர்சனங்களுக்குரிய பதில்களை உடனே, தெளிவாகத் தரவேண்டும்.  கிராம மக்களை அதிகம் சந்திக்க வேண்டும். கட்சியில் அனைவரிடமும் பாகுபாடின்றிப் பழக வேண்டும்.

உடன்பிறப்புகளுக்கு: மாநிலத்தின் கடைசிப் பிச்சைக்காரன் இருக்கும்வரை சாதனை என்ற வார்த்தையைச் சொல்லவே கூடாது. மாலைகளும், சால்வைகளும் கடைகளிலேயே இருக்கட்டும். பசித்தவருக்கு உணவளித்து உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். பாராட்டு விழா, சாதனை விளக்கக் கூட்டம் இவற்றுக்குச் செலவழிப்பதை வறுமையின் பக்கம் திருப்புங்கள்.

பதவி பெரியது. பொறுப்புகள் அதிகம்.குழந்தைத் தொழிலாளர், வறுமை, அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், போன்ற துறைகள் இன்னும் தங்களது இலக்கை முழுமையாக அடையவில்லை என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். (அவசரத்தில் விடுபட்ட துறைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.) மாநிலம் வளர்ச்சி பெற உழைப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாற்றத்தின்போதும் மாநிலத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என நம்புபவர்களில் நானும் ஒருவன். மீண்டும் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: