புதன், 10 ஜூன், 2009

2009-06-10


pixelpipe பல இணைய ரசிகர்களின் வாயில் உச்சரிக்கும் ஒரு சொல்லாகி விட்டது. நீங்கள் வீடியோவை பதிவெற்ற ஒரு தளமும் போட்டோவை பதிவு செய்ய ஒரு தளமுமாக உங்கள் விருப்பம் போல் பல தளங்களை பாவிக்கக் கூடும்.

உதாரணமாக போட்டோவை flickr ல் பதிவுவேற்றுகிறீர்கள் அதே வேளை அதை twitter pic லும் பகிர விரும்புகிறீர்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தடவை பதிவேற்றும் சிரமத்தை இது குறைக்கிறது ஒரே தடவை இத்தளத்தில் பதிவேற்றினால். எந்த எந்த தளங்களில் பதிவேற்ற விரும்புகிறீர்களே ஒரே சொடுகி்லே அவற்றில் எல்லாம் பதிவெற்றி விடலாம்.

youtube
imeem
flickr
bebo
tweetpic
blogger
wordpress

உட்பட அனைத்துத் தளங்களுக்கும் இயைபாக்கம் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து வகை 3G மொபைல்களுக்குமான அப்ளிக்கேஷன்களையும் வழங்குகிறது.

இது தொடர்பாக youtube ல் கிடைத்த விளக்கப் வீடியோ




இது போல இன்னொரு தளம் http://www.mobypicture.com/
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த வானவில் வீதி கார்த்திக் அவருக்கு ஒரு நன்றி. விடுமுறை நாட்களில் நடந்த சுவாரஸ்சியமான நிகழ்ச்சிகள், விளையாடிய விளையாட்டுகள் பத்தி எழுதவேண்டுமாம். என்னை பொருத்தவரை விடுமுறையில் ஜாலியாக செலவழித்த காலம் நிறைய உண்டு. அது எப்போது என்றால்? ஒவ்வொரு முறையும் பெற்றோர்கள் வெளிநாடு செல்லும்போது தான். ஹாஹாஹா.... அது என்னமோ தெரியலைங்க..... ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாலி,இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று இருந்தாலும்,

"டாடி மம்மீ வீட்டில் இல்ல" காலம் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உண்மையை சொல்லிட்டேன் அவ்வளவு தான்! அதிகபடியான சுதந்திரம் கிடைக்கும். நாள் முழுவதும் டீவி, கணினி, படங்கள் என்று ஜாலியாக இருக்கலாம். பணம் கொடுத்துவிட்டு போவார்கள். ஆக, எங்க வேண்டும் என்றாலும் போய் நல்லா வாங்கி சாப்பிடலாம்!

குறிப்பா, நண்பர்களோடு வெளியே செல்லலாம் எந்த ஒரு permission வாங்கும் session இல்லாமல்.
------------------------------------------------------------------------------

இந்தியாவிற்கு போன சில பயணங்கள் ஜாலியாக இருந்தது. சின்ன வயதாக இருக்கும்போது ஜாலியாக இருக்கும், ஏன் என்றால் நம்மை அதிகமாய் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இப்போது போனால் அவ்வளவு தான், நம்ம வயசை தெரிந்த மறுநொடியே வெறுப்பேத்தும் அந்த கேள்வியை கேட்பார்கள். :(

சின்ன வயதாக இருந்தபோது, மாமா மகள், அவள் தம்பி, என் அக்கா, பக்கத்து வீட்டு பசங்களுடன் கில்லி, கிரிக்கேட் ஆடிய காலம் எல்லாம் உண்டு. சில சமயங்களில் கிரிக்கேட் பந்து பக்கத்து வீட்டில் விழுந்துவிடும். அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் பந்தை வாங்குவோம். மறுபடியும் அவ்வாறே நடக்கும். ஒரு சில சமயம் அவர்களுக்கு எரிச்சல் வந்து பந்தை தரமாட்டார்கள். பந்து இல்லாமல் கொட்டாங்குச்சி வச்சு விளையாடுவோம்!:)
------------------------------------------------------------------------------------------

ஒரு முறை அப்பாவின் நண்பர் குடும்பத்தோடு மலேசியா சென்றோம். அப்போது எனக்கு 8 வயது இருக்கும். எங்களது அறைகளில் ஒரு விளையாட்டு விளையாடினோம். பேப்பர்களில் சில விஷயங்களை எழுதுவோம். அதை செய்து காட்ட வேண்டும். நான் எடுத்த பேப்பரில்- "ஆட வேண்டும்" என்று இருந்தது. எனக்கு ரொம்ப ஒரு மாதிரியாய் போச்சு. ரொம்ப கூச்சமா இருந்துச்சு. அடம்பிடித்தேன் ஆட மாட்டேன் என்று. கடைசியில் அனைவரின் கண்களை மூட சொன்னேன்... 5 வினாடி ஆடிய பிறகு உட்கார்ந்து கொண்டு, "நான் ஆடி முடிஞ்சுட்டேன். கண்ண திறங்க." என்றேன்:)
------------------------------------------------------------------------------------------

மற்றபடி விடுமுறைகளில் நிறைய படம் பார்ப்பேன். இந்த விடுமுறையில் கிட்டதட்ட 10த்துக்கு மேற்பட்ட ஹிந்தி படங்களை பார்த்து இருப்பேன்:)
-----------------------------------------------------------------------------------------

இத்தொடர்பதிவுக்கு கோபி, srivats, மற்றும் ரீனா அவர்களை அழைக்கிறேன்....வாங்கோ வாங்கோ வாங்கோ....


More than a Blog Aggregator

by ஆயில்யன்






டிஸ்கி:-

தாக்குதல்கள் தொடரும்!
செங்கல்! என்னாங்கடா இது? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் எப்படி முடிச்சுப் போட முடியும்?? இந்தியாவுக்கு எதிரான போருக்கும் செங்கல்லுக்கும் என்ன தொடர்பு?? இப்படி எல்லாம் கேள்விகள் உங்க மனசுல தோணும்! தோண வெக்கிறதுதான நம்ம நோக்கமே?!

நாம அடிக்கடி நம்ம வாசகர்களுக்கு சொல்றதுதான்! அடீங்... நீர் பெரிய எழுத்தாளர்? உமக்கு வாசகர்களோ?? நீங்க நினைக்குறதும் புரியுது! பொறுமை மக்களே, பொறுமை!! நம்ம பதிவுல இடுகை இடுறமோ, இல்லையோ, தினசரி வந்து பாக்குறவங்களும் இருக்குறாங்க இராசா, சொன்னாக் கேளுங்க சித்த!! இஃகிஃகி!!!

ஆமாங்க, எப்பவும் ஒரு நிகழ்வுன்னா அதற்கான காரணங்களை(reason) மட்டுமே கருத்துல கொண்டு செயல்படக் கூடாது, அதற்கான நிமித்தங்களையும் (cause) ஆராயணும். அப்பத்தான் பிரச்சினைய முழுசாப் புரிஞ்சிக்க முடியும். அந்த வகையில, அதென்ன இந்த செங்கல்?

Brazil, Russia, India and China, இந்த நான்கு நாடுகளையும் சேர்த்து சொல்றது BRIC. இந்த பதத்தை 2001ம் ஆண்டுலயே வெளி உலகுக்கு அறிமுகம் செய்தது Goldman Sachsங்ற பெரிய அமெரிக்க நிறுவனம். BRICங்றதின் ஆங்கில உச்சரிப்பைத் தமிழாக்கம் செய்து சொன்னதுதான் இந்த செங்கல். என்னா வில்லத்தனம்?!

Goldman Sachsன் ஆய்வறிக்கை சொல்லுது, தற்போதைய நிலை நீடிக்கிற பட்சத்துல சீனாவும் இந்தியாவும் முறையே, உலக முதல், இரண்டாவது இடங்களைப் பொருளாதார ரீதியா 2027லயே கூட அடைய வாய்ப்பு இருக்குன்னு. இந்த சூழ்நிலையில, இந்த நான்கு நாடுகளும் Yekaterinburgல அடுத்த வாரம் ஒன்னாக் கூடி இன்றைய சூழ்நிலையப் பத்தி அலசி ஆராயப் போறாங்கங்றது முக்கியமான விசயம். குறிப்பா பொதுநாணயம் (supranational currency) உண்டு செய்யலாமான்னு கலந்துரையாடப் போறாங்களாம். அப்ப அமெரிக்க வெள்ளி (US $$)??


பொருளாதார உலகுல இதுதாங்க மனித நேயத்துக்கு எதிரான ஒன்னு, ரொம்ப கொடுமையான விசயமுங்கூட. ஒருத்தர் மேலுக்கு வரணும்ன்னா, அடுத்தவருக்கு பின்னடைவு உண்டாகணும். ஆக இந்த நான்கு நாடுகளும் மேலோங்கும் போது, பின்னடையப் போறது யார்? அவங்க தான் பாதிக்காம இருக்குறதுக்கு என்னென்ன செய்யப் போறாங்க?? கேள்விகள் நமக்குத் தோணுதே??

1. அரசியல்க் குழப்பம் விளைவித்தல் (political turmoil)

2. சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை உருவாக்குதல் (environmental constraints)

3. அடிப்படை வசதிகளைத் தந்துதவாமை (resource constraints)

4. மனிதசக்தியைச் சீர்குலைத்தல் (demographic issues)

5. கட்டமைப்பில் மேன்மையுறத் தடங்கல் (infrastructure constraints)

6. இராணுவ ரீதியில முடக்கம் (possible war with neighbours)

இந்தப் பின்னணியில இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உறவுகள் மேம்பட வேண்டியது ரொம்ப அவசியம். இது நான் இந்தியனா இருக்குறதால எனக்கு ஏற்படுற பார்வை. சீனாக்காரன் என்ன நினைப்பான்? அட, நாமதான் உச்சம், முடிஞ்ச வரைக்கும் எதையும் அடக்கி ஆளணும்ன்னுதான் நினைப்பான். இதை மத்தவங்க சாதகமாப் பயன்படுத்தலாம். அதனால இந்தியாவோட முன்னேற்றம் தடைபட வாய்ப்பு இருக்கு.

அதனாலதான் ஒரு மூனாவது ஆளோட கட்டுரை சொல்லுது, "The prospect of one or more BRIC nations being involved in a potentially devastating war cannot be ruled out -- a particular risk for India!"

இதுகளை எல்லாம் வெச்சிப் பாக்கும் போது, ஒன்னு மட்டும் தெளிவாத் தெரியுதுங்க. நம்ம நாட்டுக்கு வலுவான, தெளிவான தலைமை தேவை. ஊரை அடிச்சு உலையில போடுறதை விட்டுட்டு, உணர்ச்சிகரமான பரப்புரைகளை ஒழிச்சிட்டு, தொலைநோக்குப் பார்வையோட புரட்சியக் கொண்டு வர்றதுக்கு அவங்க ஒன்னு சேரணும்.

குறைந்தபட்சம் இளைஞர்களுக்கு தொலைநோக்குப் பார்வை வரணும். பாடப் புத்தகங்கள்ல இது தொடர்பான பாடங்களை உயர்நிலைப் பள்ளியிலயே வைக்கணும்.

ம்ம்... என்னவோ போங்க, குருவி சேத்துனா மாதிரி சேத்தி வெச்சிருக்குற என்னோட கொஞ்சநஞ்ச அமெரிக்க வெள்ளிகளோட($$) மதிப்பு என்ன ஆகப்போகுதோங்ற கவலை எனக்கு?!

ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது 'இராணுவ வாகன' தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். T.S.MANI, ACC NO : 555850503, INDIAN BANK, KOLATHTHUR, SALEM DISTRICT, TAMIL NADU, INDIA


தமிழின உணர்வாளர்களே! வழக்கு நிதி வழங்கிடுவீர்!
மத்திய அமைச்சரவையில் கேரள அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகளும், ஏராளமான மலையாள அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் மீண்டும் பதவி ஏற்றுள்ள காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரது பணி காலத்தை நீட்டிப்பதற்கு எடுத்துள்ள முடிவால், நாட்டின் உயர் பதவியில் முத்திரை பதிக்கும் பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் தவிர வெளியுறவு செயலாளர் சிவ் சங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர், நாடாளுமன்ற செயலாளர் ஜெனரல் பி.டி.ட்டி. ஆச்சாரி குடியரசு தலைவர் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், உள்துறை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.பிள்ளை ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அதேபோல், தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக செயலாளர் திருமதி சுதா பிள்ளை மற்றும் வணிகத் துறை செயலாளரான அவரது கணவர் கோபால் கிருஷ்ண பிள்ளை ஆகியோரும் மலையாளிகள்தான். இது மட்டும் அல்லாமல், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையத்தின் (என்.ஐ.ஏ.) முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராதா டிவினோத் ராஜூவும் கேரளாவை சேர்ந்தவர்தான். அதோடு வேளாண்மை செயலாளர் டி.நந்தகுமார், சட்டத்துறை செயலாளர் டி.கே.விசுவநாதன், விமான போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.மாதவ நம்பியார், இஸ்ரோ தலைவரும், விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளருமான ஜி.மாதவன் நாயர் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதேபோல், கனிம வளர்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன தலைவர் லீனா நாயர் ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் . அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் அல்லாமல், அமைச்சர்கள் வட்டத்தை பார்த்தாலும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். கேபினட் அமைச்சரவையில் 2-வது முறை ராணுவ அமைச்சராக ஏ.கே.அந்தோணி, வெளி நாட்டில் வாழும் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சராக வயலார் ரவி ஆகியோரும் இணை அமைச்சர் பதவிக்கு இரயில்வே துறையில் இ.அகமது, வேளாண்மை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் கே.வி.தாமஸ், உள்துறையில் முல்லப் பள்ளி ராமச்சந்திரன், வெளி விவகாரத் துறையில் சஷி தரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்புடைய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி, விஜய் நம்பியார் (அய்.நா. அதிகாரி), அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் (இலங்கை ராணுவ ஆலோசகர்) ஆகிய அனைவருமே மலையாளிகள் தான்!

-- பெரியார் முழக்கம்

கருத்துகள் இல்லை: