| இலங்கை விவகாரம் குறித்து இறுதி விவாதத்தை முடித்துக் கொண்டது ஐ.நா. பாதுகாப்பு சபை; படுகொலை குறித்து மூன் எதுவும் பேசவில்லை? |
| [ சனிக்கிழமை, 06 யூன் 2009, 04:49.26 AM GMT +05:30 ] |
ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று விவாதித்தது. இலங்கையில் இடம்பெற்ற போரின் கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போய் இருப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த அமெரிக்க தூதர் ரோஸ்மேரி டிகார்லோ கூறுகையில், இது சாதாரண கூட்டம்தான். இந்தக் கூட்டத்தின் முடிவில் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது. கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிஷல் மோன்டாஸும் அவருடன் சென்றார். நேற்றைய கூட்டத்தில் கூறப்பட்டபடி பான் கி மூன் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவிக்கிறது. மேலும் நேற்றைய கூட்டம் ஒரு மேலெழுந்தவாரியான கூட்டம் என்றும், அதிகாரபூர்வ கூட்டம் இல்லை என்றும் ஐரோப்பிய சபை வட்டாரத் தகவல்கள் கூறுவதாக இன்னர் சிட்டி பிரஸ் கூறியுள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு கூட்ட அரங்குக்குள் போன பான் கி மூன், ஜப்பான் தூதர் டகாஷு, இலங்கை தூதர் ஆகியோருடன் மாலை 5 மணியளவில் வெளியில் வந்தார். பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது, போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் ராஜபக்சவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன் என்றார். அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட டாக்டர்களை சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார். அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள் குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை தொடர்பாக பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டு விட்டது. மொத்தத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் இனப்படுகொலை தொடர்பாக ஆக்கபூர்வமாக எதையும் பேசவில்லை என்பது உறுதியாகியுள்ளது. |
உண்மைக்கு தான் எத்தனை சோதனை???
லிங்கை அழுத்தி படிங்க: நடந்தது என்ன? உலகப்படமும், பதிவர்களும்
(பதிவில் ஒரு எண்ணிக்கையை ஏற்றிய அருமை தமிழ்மணத்திற்கு நன்றி)
இது வரை இந்த பதிவுலகின் தாக்கத்தை வெறும் விலங்குகளிடம் கண்டு வந்த இந்த பாரதி ராஜா... சாரி... சாரி.... நையாண்டி நைனா, முதன் முறையாக அடுத்த தளத்திற்கு முன்னேறி உலகப்படம் பார்க்க சென்ற சில பதிவர்களின் எண்ணங்களை படம் பிடித்து வந்துள்ளான்.
ஆம் சமீபத்தில் அண்ணன் பைத்தியக்காரன், தான் மட்டுமே பைத்தியமாக இருந்தால் போதாது இந்த உலகத்தையே, அட்லீஸ்டு பதிவுலகத்தையே பைத்தியாமாக ஆக்கவேண்டும் என்ற சீரிய சிந்தனையோடு, உலகப்படங்களின் துணையோடு சீறி இருக்கிறார்.
என்ன செய்வது...?, "சீரும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே" என்று எழுதி வெளியிலே வைத்து விட்டு நமீதாவிற்கு கோயில் கட்டும் ஆர்கிடெக்டுகள் தானே நாம். மேலும் நம்பி ஓட்டு போட்டு அதற்கு பின் அவர்கள் பின் அலையும் சிந்தனை தமிழினம் அல்லவா..!!! நாம். அதனாலே அண்ணன் காட்டும் படத்தை நம்பி, படம் பார்க்க சென்றன சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு நன்றிகள் மட்டும் ஆசிகள்.
அங்கே நடந்த நிகழ்வுகளை இது வரை யாரும் பதிவிட வில்லை ஜாக்கி அண்ணனை தவிர. அப்படி... என்றால்??? அங்கே எதோ ஒன்று புதைந்து இருக்கிறது... ஆம் பதிவர்களின் மனதில் புதைந்து இருக்கிறது..... எனதருமை காமிரா மேன் கண்ணன், சாரி...சாரி... காமிரா மேன் ஜாக்கி அண்ணன் (நன்றிகள்) அவைகளை படமாய் தொகுத்து எனக்கு உதவி இருக்கிறார்... அதன் துணையுடனும், மற்றும் எமது குழுவில் உள்ள விசேச உளவுப் பிரிவின் சவுண்டு எஞ்சினியர், ரசூல் பூக்குட்டிக்கே டியூசன் எடுத்த பிதாமகர்கள் ஆகியவர்களின் துணை உடனும் உங்களுக்கு வழங்குகிறான் இந்த பாரதி ராஜா... சாரி.. சாரி ... நையாண்டி நைனா.
இந்த படங்களில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் வெறும் கற்பனையே, அதனையும் மீறி எங்காவது உண்மை போல் இருந்தால் அது படைப்பாளியின் திறமை என்றும் இல்லை எனில் தெய்வாதீனமாக ஒத்து போகிறது என்றும் எண்ணி அமைதி கொள்ளுங்கள்...
காண்டு கொள்ளாது, அமைதியுடன் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிப்பீர்கள் என்று எண்ணி உங்களுக்கு சமர்பிக்கிறோம் .
சில குறிப்புகள்:
1. இந்த படம் மைடியர் குட்டி சாத்தான் ரேஞ்சுக்கு இருக்கிறது ( இதெல்லாம் வேறு யாரும் சொல்ல மாட்டாங்க, நானே சொல்லி கிட்டா தான் உண்டு.) அதனாலே படம் பெருசா உங்க பக்கத்திலே வரவேண்டும் என்றால் படத்தை "கிளிக்கி" பெரிதாக்கி பார்த்து கொள்ளவும்.
2. வசனங்கள் வெறும் பெட்டியில் யாரையும் சுட்டாது இருந்தால் அது ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் சிந்தனை என்று கொள்க.
3. மீண்டும் அறிவிக்கிறோம், நகைச்சுவைக்கே அன்றி வேறில்லை.

நிகழ்கால இந்தியாவின் வெடிவெள்ளி சே... விடிவெள்ளி, வருங்கால இந்தியாவின் எழுச்சி நாயகன்,வாழும் பாரி (நீங்க என்னைய பாத்து துப்பாதிங்க காரி), எட்டாவது வள்ளல், சீறும் செங்கிஸ்கான், புன்னகை பூங்கா, வாழும் வரலாறு, திமுகாவின் அடிமட்ட தொண்டன் வீரத்தளபதி அண்ணன் ஜெ.கே ரித்தீஷின் எம்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லாரும் இங்க படிச்சி தெரிஞ்சிகோங்கோஓஓஓஓ...
அண்ணே தொண்டை தண்ணி வத்த இம்முட்டு கூவி இருக்கேன் ஏதோ நீங்களா பாத்து திமுகாவுல ஒரு எம்.எல்.ஏ பதவியோ, ஒரு மாவட்ட செய்லாளர் பதவியே இல்ல ஒரு கவுன்சிலர் பதவியோ போட்டு குடுங்க நானும் என்னோட அடுத்த பத்து தலமுறையும் உங்க பெயரை சொல்லி பொழச்சிகிறோம்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக