புதன், 10 ஜூன், 2009

2009-06-10

விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு பிறகு போன வாரம் முடிந்தது. போன முறை இறுதிகட்டத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே நிறைய விமர்சனங்கள். ஒரு சாராருக்கு மட்டுமே தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குழு மனப்பாண்மை மனிதனின் ஆதி குணம். குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு அதனோடே வாழ்ந்து பழகியவர்கள். இன்னமும் அதன் பாதிப்பு பெரியளவு இருக்கவே செய்கிறது. இனப்பற்று என்பது நல்லது தான். ஆனால் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை. அடுத்தவருக்கு துரோகம் இழைக்கப்படுகையில் ஒருவருக்கு பற்றுதலாக தோன்றுவது அடுத்தவருக்கு வெறியாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றலாம்

வேற்றுமொழி சுற்றுகள் இடம்பெற்ற போது அந்த மொழிகளுக்கான உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் உச்சரிப்பை பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. உள்ளூரில் தமிழனுக்கு எப்போதும் மரியாதை குறைவாகவே கிடைக்கிறது.

அடுத்து இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்க துவங்கிவிட்டார்கள். தோல்வியுறும் போதெல்லாம் கதறி அழும் குழந்தைகளை காண்கையில் மனம் கலங்குகிறது. அவர்களை தோல்வியுறுவதை காட்டிலும், இந்த சின்ன தோல்விக்கே மனம் துவண்டால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற நினைக்கையில் பதற்றமாய் இருக்கிறது

நாள்தோறும் இப்படியான நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளிலும், பள்ளி கல்லூரி வளாங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளை நம் வீட்டு பிள்ளைகளும் இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்திற்காகவோ அல்லது நடுவரின் இனவெறியினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? உண்மையாகவே அவர்கள் தோல்வியுற்றாலும் அதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? அந்த நிலையை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கு நமக்கு பக்குவம் இருக்கிறதா?
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (அல்குர்ஆன்: 34:37)
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளினால் நேற்று இரவு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தெரியவருவதாவது:

தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவ தாக்குதலை கடுமையாக விமர்சித்து வந்த கனடா நாட்டு எம்.பி. பொப் ரே -வை கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, அவரை அடுத்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியது இலங்கை அரசு.

கனடாவின் லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே. கடந்த 2002 - 03 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்ற நோர்வே அமைதி நடவடிக்கைக் குழுவுக்கான ஆலோசகராகவும் செயல்பட்டார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூர தாக்குதலை மிக வன்மையாக கண்டித்து வந்த பொப் ரே , இது தொடர்பாக இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தும் இருந்தார்.

இதனால் அவரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக முத்திரை குத்தி எதிரியாக கருதி வந்தது இலங்கை அரசு.

இந்நிலையில், இன்று அவர் கொழும்பு வந்தார். அவர் இலங்கை வருவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த இலங்கை அரசு பொப் ரே வை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் அங்கேயே தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து இலங்கை குடியேற்றத்துறை ஆணையர் அபேகோன் கூறுகையில், பொப் ரே இந்த நேரத்தில் இலங்கை வருவது நல்லதல்ல என்று உளவுத்துறை அரசுக்கு எச்சரித்ததால், அவர் அடுத்த விமானத்திலேயே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, கனடாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக சமீப மாதங்களில் பெரும் போராட்டங்களை நடத்தினர். ரொறன்ரோவில பிரமாண்ட பேரணியையும் அவர்கள் நடத்தினர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் உள்ள கனடா நாட்டுத் தூதரகத்தை தாக்கினர். இதற்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னரும் சனல் 4 தொலைக்காட்சிக்காக செய்தி சேகரிப்பில், ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் இருவர் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



More than a Blog Aggregator

by rammalar
A

கருத்துகள் இல்லை: