செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

அரசு ஆரம்பப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படித்து வருகிறார்கள். பாடப்புத்தகம், சீருடை, கல்வி கட்டணம் போன்றவை இலவசமாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர இலவச பஸ் பாஸ், சைக்கிள் போன்றவையும் கொடுக்கப்படுகிறது.
Desktop Hard Drives - LACIE ProductsLaCie Rugged XL eSATA 3Gb/s | Hi-Speed USB 2.0 1TB LaCie Hard Disk MAX, Design by Neil Poulton Hi-Speed USB 2.0 2TB



சிறிய மலைப்பாம்பு போன்ற உருவில் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்றின் தலைப் பாகத்தில் புகைப்படக்கருவியும் மைக்ரோபோனும் பொருத்தப்பட்ட நவீன இராணுவப் புலனாய்வு எந்திரம் ஒன்று இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க...

 

எழுதுபவனுக்கு தன் எழுத்தை வாசிக்கிறார்கள், கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள், விமர்சிக்கிறார்கள்  என்பதையும்விட வேறென்ன சந்தோஷம் வாய்த்துவிட முடியும்.

எனது எழுத்துக்களை தொடர்ந்த வாசிப்பின் வாயிலாக ஊக்கப்படுத்தி மேன்மைப்படுத்தி வரும் அனைவருக்கும் என் அன்பும் வணக்கமும்….

followers2 copy

followers3 copy

50 ஆவது Follower நையாண்டி நைனா . மிக்க நன்றி. இதற்கெல்லாமா பதிவு ? பதில் இருக்கிறது. எழுதத் துவங்குமுன் எண்ணவில்லை நம் எழுத்தையும் பின்பற்றுவார்கள் என்று! ஏதோ ஒன்று நமது வலைப்பூவைப் பின்பற்றக் காரணம். வடிவமோ, உள்ளடக்கமோ.   50 வசீகரமான, குறிப்பிடத்தக்க எண். கிரிக்கெட்டில் கூட 50 முதல் மைல்கல். இந்த 50 எனது பொறுப்பை அதிகமாக்குகிறது. இன்னும் தரமான பதிவுகளைத் தர முயற்சிக்கிறேன்.

முதல் இரண்டு பதிவுகளுக்குப் பிறகு பலரையும் வாசிக்கத் துவங்கினேன். கிடைத்த பதிவுகள் பிரமிக்க வைத்தன. காஃபி முதல் கவிதை வரை பல தலைப்புகளில் பதிவர்கள் சிறந்தார்கள். எழுதுவதில் எனக்கிருந்த தயக்கம் அதிகமானது. டிசம்பரில் பதிவர் சந்திப்பில் பங்கேற்றேன். (அதுவும் தயக்கத்துடனே!) மற்றவை சரித்திரம்.

சந்திப்பு முடிந்த கையோடு ஒரு அறிவிப்பு இனிமேல் தொடர்ந்து எழுதுவேன் என அறிவிக்கும்வரை தீர்மானிக்கவில்லை என்ன எழுதுவதென்று. நமது வலைப்பூவுக்கென சிறிய அடையாளமாவது வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். 

ஊர்சுற்றும் பழக்கமும்,  கேமிராவும் இருந்தது. எனது வலைப்பூவில் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, ஒரிஸ்ஸா மாநிலங்களைச் சார்ந்த பதிவுகள் இடம்பெற்றன. படங்களுடன் செய்திகள் தருவது வழக்கமானது. இன்று 150 பதிவுகளைக் கடந்து, 50ஆவது Follower! கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 50 Follower களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பல்வேறு கட்டாயங்களுக்கிடையிலும் பதிவெழுத மறந்ததில்லை. பல நண்பர்கள் பதிவினால் கிடைத்தார்கள். பல இடங்களைப் பார்ப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புக்களை நண்பர்கள் வழங்கினார்கள். அவர்களுக்கு நன்றி
 
எதிர்காலத்தில் எல்லோரும் 15 நிமிடப் புகழ் பெறுவார்கள் என ஆண்டி வார்ஹோலின் வார்த்தையை அடிக்கடிக் கட்டுரைகளில் குறிப்பிடுவார் நமது சுஜாதா. ஒருவேளை வலைப்பூக்களைச் சொல்லியிருப்பாரோ என எண்ணவைக்கிறது இப்போது. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது, Follower கள் வலைப்பூ வண்டியின் பெட்ரோல்கள். எனது வண்டி இவர்கள் இருக்கும்வரை ஓடும்; இவர்களுக்காக ஓடும்.

 




கருத்துகள் இல்லை: