செல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது.
சென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான்?, அவனின் காதல் என்னவாயிற்று? என்பதே க்ளைமாக்ஸ்.
ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை. படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண் மட்டும் எந்நேரமும் கிளிவேஜை காட்டியபடி இருப்பவளை, அதிலும் கண்ட நேரத்தில் மாடலிங் விஷ்யமாய் ராத்திரியில் சுற்றுபவளை எப்படி காதலிக்கிறான்? சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான்? அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான்? ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே? போன்ற பல கேள்விகள் படம் முழுவதும் வந்தபடியே இருக்கிறது.
அவனின் மனபிறழ்வுக்கான காரணம் சரியாக இருந்தாலும், அதை ஒழுங்காக ஆழமாய் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங். படத்தில் மயில் சாமி, காமெடி டிராக் படு கேவலம், அதைவிட இன்வெஸ்டிகேஷ்ன் செய்கிறேன் என்று மனோஜ்.கே.ஜெயனின் துப்பறியும், விதம் படு காமெடி. கேமரா ஒர்க் ஓகே. கங்கைஅமரனின் இசையில் ஒன்றும் பெரிதாய் தேரவில்லை. படத்தில் மனதை தொட்ட ஒரே விஷய்ம், ராகவன் தன் தாயின் துரோகத்தை பார்த்ததிலிருந்து பெண் குழந்தையின் கவுனை இழுத்துவிட்டு, கவுன் பறக்காமல் இருக்க, கால்களின் இடுக்கில் வெயிடுக்கு கல் வைத்துவிட்டு போவது. மிக நுணுக்கமான மனசிதைவுக்கு ஆட்பட்டவனின் நடவடிக்கை.
ராகவன் - எஸ்கேப்.
டிஸ்கி
பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.
ஷைனி ஆகுஜா வீட்டு பணிப்பெண் பலாத்காரம் உண்மை:
மருத்துவ அறிக்கையில் தகவல்
இந்தி நடிகர் ஷைனி ஆகுஜாவின் வீட்டு பணிப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ஷைனி ஆகுஜா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தன் வீட்டில் வேலை பார்த்துவந்த 18 வயது இளம்பெண்ணை கற்பழித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர்மீது கற்பழிப்புப் புகார் கொடுத்த பெண் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவ அறிக்கை காவல்துறையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பணிப்பெண் கற்பழிக்கப்பட்டது உண்மை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மும்பை மாநகர காவல் துணை ஆணையர் நிகேத் கவுசிக் கூறினார்.
ஷைனி ஆகுஜாவின் வீடும் தடய அறிவியல் துறையினரால் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ஷைனி ஆகுஜாவுக்கு, சிறையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள மும்பை காவல்துறை, அவரும் சாதாரண கைதிகள் போலேவே நடத்தப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.
பணிப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக வெகுண்டெழுந்த 200க்கும் மேற்பட்ட வீட்டு வேலைக்காரப் பெண்கள் நேற்று ஓஷிவாரா காவல்நிலையம் முன்பாகத் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இலவு காத்த கிளியை போல விஜயின் 50 வது படத்திற்கு காத்திருந்த பேரரசுக்கு கிள்ளி போட்ட வடை கூட கிடைக்கவில்லை. விஜய் கிடைப்பார் என்ற ஒரே காரணத்துக்காக பரத் நடிக்கும் திருத்தணி படத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவர், இப்போது ஹாய்... என்றபடியே பரத்தின் கூடாரத்திற்கு திரும்பி விட்டாராம்.திருத்தணியை இயக்குவதோடு தயாரிப்பதும் பேரரசுதான் என்பதே முன்பு இவர்கள் போட்டிருந்த பிளான். ஆனால் பைனான்சியல் பொசிஷன் முன்பு போல் சாதகமாக இல்லை பேரரசுக்கு. வேறு தயாரிப்பாளர் கிடைத்தால் ஓ.கே என்று காத்திருந்தவருக்கு பரத்தே ரூட் போட்டு கொடுத்திருக்கிறார் இப்போது.
தன்னை முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கிய ஷக்தி சிதம்பரத்தின் கம்பெனிக்கே பேரரசுவை தள்ளி விட்டிருக்கிறார். பழனி படத்தில் பரத்தை ஹீரோவாக்கி நாலு காசு பார்த்த ஷக்தி சிதம்பரத்திற்கு மீண்டும் அவர் கால்ஷீட் கொடுத்திருப்பதில் அலாதி சந்தோஷமாம். ஆறுமுகம் ஆடியோ விழாவில் என்னை பி அண் சி ஏரியாவை வரை கொண்டு போய் சேர்த்தது ஷக்தி சிதம்பரம் தயாரித்த பழனி படம்தான் என்று கூறியதோடு நின்றுவிடாமல் மீண்டும் தன்னை அழைத்து ஒரு படத்தை தயாரிக்க சொன்னதே பெரிய விஷயம் என்கிறாராம் ஷக்தி.
சிவகாசி, திருப்பாச்சி, பழனி, திருத்தணி என்ற ஊர் பெயர்களையெல்லாம் விட்டு விட்டு புதுசாக களம் இறங்கப் போகிறார் அண்ணாச்சி. இந்த படத்திற்கு பேரரசு வைத்திருக்கும் பெயர் முரசு. பேரரசய்யா... இப்படியே புதிய பாதைக்கு திரும்பிடுங்க!
ஆதவன் படத்திற்காக ஐஸ்லேண்ட் கிளம்பிவிட்டார் நயன்தாரா. அவரோடு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் போயிருக்கிறார்கள். தாமரை எழுதிய பனித்துளி என்ற பாடல் காட்சியை எடுக்கத்தான் இந்த பயணம். ஒரு வகையில் நயன்தாராவுக்கு இந்த பயணம் அமைதியை கொடுக்கவும் உதவலாம். இங்குள்ள கசமா முசாவை மறந்து தொடர்ந்து பத்து நாட்கள் ஐஸ்லேண்டில் தங்கப் போகிறாராம் நயன்.நயன்தாரா ஒரு கையில் மட்டும்தான் பச்சை குத்தியிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. சற்று உற்று பார்த்தால் தெரியும். இன்னொரு கையிலும் பிரபு தேவா பெயரை பச்சை குத்தியிருக்கிறாராம். பாடல் காட்சிகளில் இந்த பச்சை தெரியாத விதத்தில் ஷ¨ட் பண்ணுங்க என்று கேட்டுக் கொண்டாராம் நயன். (செய்யிறதையெல்லாம் செஞ்சுட்டு இது வேறயா?)
தன்னையும் பிரபுதேவாவையும் திருமண கோலத்தில் கிராபிக்ஸ் செய்து வெளியிட்ட ஒரு வார இதழ் மீது வழக்கு போடப் போவதாக ஆரம்பத்தில் கொதித்தவர் இப்போது அடங்கியிருக்கிறாராம். வழக்கு போடுவீங்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், "எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதுக்காக நேரத்தை செலவிட முடியாது"
சரி படத்தை பற்றி பேசுவோம். ஆதவன் படத்தில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். ராஜீவன் இப்படத்திற்காக கொடைக்கானலிலும், ஏ.வி.எம் ஸ்டுடியோவிலும் செட்டுகள் போட்டாராம். இரண்டும் கொள்ளை அழகு என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள். படமும் அதே மாதிரி வரட்டும்!

திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடையில் வந்து கலக்குவது நடிகைகளின் புதிய ட்ரெண்டாகிவிட்டது. சில தினங்களுக்கு முன் மகா குட்டை பாவாடையுடன் வந்து மீனாட்சி கிளப்பிய சூடு ஆறுவதற்குள், ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் வந்து கலக்கி விட்டார் ரீமா சென்.
கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'ஆயிரத்தில் ஒருவன்', விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த பிரமாண்ட படத்தின் பாடல்கள் வெளியீடு வித்தியாசமான முறையில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த பாடல்கள் அடங்கிய சி.டி.யை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேடைக்கு கொண்டு வந்தார்கள். பாடல்களை இயக்குநர் ஷங்கர் வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே திரண்டு வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான விவிஐபிக்கள் அரங்கை நிறைத்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களை மேடையில் லைவாக பாடிக் காட்டினார்கள். படத்தில் பாடிய கலைஞர்களை வைத்தே, ஜிவி பிரகாஷ் நடத்திய இந்த லைவ் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனுஷ் - ஐஸ்வர்யா ஆட்டம்
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் செல்வராகவனின் தம்பியும், நடிகருமான தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து ஒரு பாடலை சொந்த குரலில் பாடியுள்ளார். "உன் மேல ஆச வச்சேன்" என்ற கலக்கல் பாடல் அது.
நிகழ்ச்சியில் இந்தப் பாடலை தனுஷும் ஐஸ்வர்யாவும் பாடி ஆட, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இந்தப் பாடலுக்குப் பிறகு தனுஷிடம், உங்கள் வெற்றிக்கு யார் காரணம் என்று கேள்வி கேட்டனர். உடனே அவர் சற்றும் தாமதிக்காமல், என் அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் மனைவி ஐஸ்வர்யா என்று கூறி கைதட்டல் பெற்றார்.
அதைத் தொடர்ந்து நடிகை பூர்ணா குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது. நைஜீரியா நாட்டு கலைஞர்களின் பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது. கேரளாவின் செண்டை மேளம், மற்றும் கதகளி ஆட்டமும் நடந்தது.
படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான பார்த்திபன் பேசும் போது, "ஆயிரத்தில் ஒருவன் படம், உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும். ஹாலிவுட் படங்களின் தரம், தொழில்நுட்பம் இந்தப் படத்தில் முழுமையாக இருப்பதைப் பார்க்கலாம். இந்த படத்துக்காக 256 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நான், 150 நாட்கள் நடித்தேன். ஆனால் எனக்கு வசனங்கள் குறைவு. ஒன்றரை நாளில் டப்பிங் பேசி விட்டேன்" என்றார்.
தமிழ்தான் முக்கியம்!
இயக்குநர் செல்வராகவன் ஆரம்பம் முதலே மேடைக்கு வராமல், தன் மனைவி சோனியாவுடன் பார்வையாளர் வரிசையிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் கடைசியில் பேச வந்தார்.
அவர் கூறியதாவது:
"எனக்கு ஹாலிவுட், ஆஸ்கார் விருதுகள் மீது ஆசை இல்லை. 'நல்ல படம் கொடுக்கிறார் செல்வராகவன்' என்று ரசிகர்கள் பாராட்டினால் போதும்.
தமிழ்தான் முக்கியம் என்பதால் இந்தியில் வாங்கிய அட்வான்ஸைக் கூட திருப்பிக் கொடுத்துவிட்டேன்", என்றார் செல்வராகவன்.
முன்னதாக நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் லதா ரஜினிகாந்த்.
படத்தின் கதாநாயகிகள் ரீமாசென், ஆன்ட்ரியா இருவரும் படு கவர்ச்சியாக உடையணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடித்தனர்.
கதாநாயகர்கள் பின்னணி பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்து வரும் என்பதை நான் நம்பவில்லை என்றார் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு.இப்போதெல்லாம் புதிய படங்களில் குறைந்தது ஒரு பாடலையாவது அந்தப் படத்தின் நாயகர்கள் பாடுவதைக் கவனிக்கலாம்.இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், கந்தசாமியில் தனக்கான பாடல்கள் முழுவதையும் தானே பாடிக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.இதே நிலை இன்னும் சில படங்களிலும் தொடர்கிறது. இதனால் தொழில்முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களின் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்படிக் கூறினார்:
முன்பெல்லாம் கமல்தான் அதிகம் பாடுவார். இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே பாடுகிறார்கள்.
ஆனால் இதனால் பாடகர்களின் வாய்ப்புகள் பறிபோய்விடாது. நடிகர்களால் எல்லா படங்களிலும் பாடுவது சிரமமான விஷயம். விளம்பரத்துக்காக ஓரிரு பாடல்களைப் பாடுகிறார்கள். அவ்வளவுதான்.எஸ்பிபி ஏராளமான படங்களில் ரஜினி , கமலுக்கு கூட (தெலுங்கு) டப்பிங் பேசியுள்ளார். அதற்காக அவர் டப்பிங் கலைஞராகி விடுவாரா... அல்லது நடிகராகத்தான் முடியுமா... அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதே நிரந்தரம். அப்படித்தான் நடிகர்கள் பாடுவதும், என்றார்.
தற்போது அகம்புறம், மெய்காண், அகராதி படங்களுக்கு இசையமைத்து வரும் சுந்தர் சி பாபு, எக்காரணம் கொண்டும் ரீமிக்ஸ் செய்யக் கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளாராம்.
அடடே...!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக