புதன், 17 ஜூன், 2009

2009-06-17


ராஜ‌ மார்த்தாண்டன் விபத்தில் மரணித்ததாக மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும் வந்தன.

ராஜ‌ மார்த்தாண்ட‌ன் அவ‌ர்க‌ளை ஒரு முறை சென்னையில் ச‌ந்தித்திருக்கிறேன். நண்ப‌ர் மெய்ய‌ருள் அறிமுக‌ப்ப‌டுத்தினார்.தான் அதிக‌ம் ம‌து அருந்துவ‌தால் த‌ன் உட‌ல்நிலை சீர‌ழிந்து இருப்ப‌தாகவும், அதிக‌ம் பேச‌ முடியாமைக்கு வ‌ருந்துவ‌தாக‌வும் தெரிவித்தார். பிறகு அவ‌ர‌து உட‌ல் நிலை சீராகி இருப்ப‌தாக‌ ஜெய‌மோக‌ன் த‌ன‌து க‌ட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்.

பிறகு ராஜ‌ மார்த்தாண்ட‌ன் அவ‌ர்க‌ளை பார்த்ததில்லை. கவிதை வாசிக்கும் போதே விமர்சனங்களையும் வாசிப்பது பார்வையை விசாலமாக்கும் என்ற முடிவில், கவிதை விமர்சனக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் வாசிக்கத் துவங்குகையில் ராஜ மார்த்தாண்டன் எழுத்தின் மீதான பரிச்சயம் உண்டானது.

'தமிழ் புதுக்கவிதை வரலாறு' 'கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு' இரண்டும் பேசப்பட்ட தொகுதிகள். ராஜ மார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருந்தாலும், கவிதை விமர்சகராகவே தனது பெயரை நிலைப்படுத்தியிருக்கிறார்.

இருபது ஆண்டுகளாக அவர் தினமணி ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் காலச்சுவடில் பணியாற்றினார்.

க‌ட‌ந்த‌ ஆண்டு ஜூலை மாத‌ம் ராஜ‌ மார்த்தாண்ட‌னுக்கு நெய்த‌ல் இல‌க்கிய‌ அமைப்பு அறுபதாவது ஆண்டு விழா ந‌ட‌த்திய‌து.

இன்று காலை(ஜூன் 06, 2009) நாக‌ர்கோவிலில் ந‌ட‌ந்த‌ விபத்தில் ம‌ர‌ணித்திருக்கிறார்.






'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' இது இந்த படத்தின் பெயர். பெயரைப் போலவே புதிய, மாறுபட்ட கதை. "பத்தாண்டுகளுக்கு முன்னால் கன்யாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்"... வழக்கமாக தமிழ் பட இயக்குனர்கள் பூஜை அன்று சொல்லும் டையலாக் இது நமக்கு படம் வந்த பிறகு தான் தெரியும்.

தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் வசிக்கும் மாவட்டம், குமரி மாவட்டம். ஆனால் அங்குதான் குற்றவாளிகள் அதிகம் என புள்ளிவிபரம் சொல்கிறது. இந்த முரண்பாட்டால் நிகழந்த ஒரு உண்மை சம்பவம் தான் கதை என்கிறார் ( யாரோ சொல்றாங்க இப்ப இதுவா முக்கியம் ? )

'இந்தப் படத்தில் உண்மையில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று கரண். இன்னொன்று கதை! ஓர் உண்மைச் சம்பவத்தை, சாயம் பூசாமல், வீரியம் கெடாமல், அப்பட்டமாக உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறோம். படத்தில் 5 பாட்டு உண்டாம், எல்லாம் வைரமுத்துவாம். ஃபைட் மாதிரி ஒரு சீன் உண்டாம் ஆனால் ஃபைட் கிடையாதாம். உண்மை சம்பவத்தில் எப்படி பாட்டு வரும் என்று கேட்ககூடாது.

இந்த உண்மை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படபிடிப்பும் நடந்ததால் காட்சிகள் படமாக்கும் விதத்தைபார்த்து அட! இது அவரோடகதையில்ல!! என்று மக்கள் ஆச்சிரியபட்டவிதமே அட அட என்கிறார் இயக்குனர். மற்றவர் கதை இவர் சுடவில்லை என்று நம்புவோம்.

இசை - வித்யாசாகர்- பாடல்கள் வைரமுத்து -
வசனம் பா.ராகவன் ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு- எடிட்டர் சுரேஷ்அர்ஸ்-சண்டைப் பயிற்சி கனல்கண்ணன் -நடனம் தினேஷ்-மக்கள்தொடர்பு நிகில்-கதை திரைக்கதை இயக்கம்- வி.சி வடிவுடையான்- தயாரிப்பு


படத்தில் இருக்கும் பெண் பெயர் - டெரினா. மறைந்து கொண்டு இருப்பவர் யார் ? பா.ராகவன் இல்லை, வசனம் எழுதுபவர்களுக்கு பிளாக் எழுதுவதை தவிர இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காது.


Tamilish - தமிழ்


கடந்த மே 31 அன்று, ஜெயா டிவியில் ஒளிபரப்பான "ஹாசினி பேசும் படம்" நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி மணிரத்தினம் விமர்சனத்திற்கு எடுத்துகொண்ட படம் ராஜாதி ராஜா. சக்தி சிதம்பரத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான படம்.....


மிகவும் காட்டமாக அதே சமயம் மிகவும் உண்மையான விமர்சனத்தை வெளிக்காட்டினார் சுஹாசினி. " பார்முலா படங்கள் எல்லாம் நல்ல சினிமாவை முழுங்கிவிடுகின்ற டைனோசர்கள்" என்றவர் மேலும்

" 30,40 வருஷ பார்முலாவை லாரன்ஸ் பண்ணும்போது நொந்து போயிடறோம். நாப்பது வருஷத்துக்கு அப்புறம் எதாவது புதுசா யோசிக்க கூடாதா. ஆடியன்ஸ் குற்றுயிர் ஆகிவிடுகிறார்கள். wrong sister centiments, குழந்தைதனமான பஞ்ச் டையலாக்குகள் காதை கிழிக்கின்றன" என்றல்லாம் பொரிந்து தள்ளியவர் "excuss me, லாரன்சுக்கு ஏத்த கேரக்டர் கிடையாது இது.. அது மாதரி லாரன்சும் இந்த கேரக்டருக்கு wrong slection " என்று கூறினார்.

மொத்தத்தில் இந்த படமே ஒரு மிஸ் கால்குலேஷன் என்று முடித்தார். இதே நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் " என்னுடைய படங்களை பாக்க வரவங்களுக்கு லாஜிக் இல்லாத மேஜிக் , ஜாலியான படம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கு" என்று விளக்கமளித்தார்.

அதோடு விடாமல் இப்படி இவர் பேசியதால் தியேட்டரில் வசூல் குறைஞ்சிருக்கு, அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திலும், இயக்குனர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார் சக்தி சிதம்பரம். மேலும் இது குறித்த தனது பேட்டியில் " இவரது கணவர் 2000 வருடங்களுக்கு முந்தைய ராமாயணத்தை "ராவணா" என்ற பெயரில் எடுத்து கொண்டிருக்கிறார். மேலும் சத்தியவான் சாவித்திரி கதையை ரோஜாவாகவும், கர்ணன் கதையை தளபதியாகவும் எடுத்தவர். 20 வருட பழைய ரஜினிகாந்த் கதையை நான் எடுத்ததாக குறை கூறுவதற்கு இந்த பெண்மணி யார்" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சுஹாசினியின் விமர்சனம் ரொம்பவே சரி என்கிறார்கள் காசுகொடுத்து இந்த படத்தை பார்த்த புண்ணியவான்கள். அதே நேரம் சக்தி சிதம்பரம் பேசி இருப்பது நியாயமே, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளிவரும் படத்தை இப்படி எல்லாம் விமர்சிக்க சுஹாசினிக்கு உரிமை இல்லை என்கிறது ஒரு தரப்பு.

பொதுஜன பார்வைக்குவரும் படைப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமை உள்ளது. அதே சமயம் நல்ல விமர்சனம் என்பது படைப்பாளியை உற்சாகப்படுத்துகிற, நிறை மற்றும் குறைகளை சுட்டிக்காட்டுகின்ற ஒரு நல்ல நண்பனாக இருக்கவேண்டும்.


விமர்சனங்களை, நேர்மறையான கோணத்தில், ஆரோக்கியமான முறையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் இந்த சினிமாகாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏன் வருவதில்லை?.


- இன்பா

Tamilish - தமிழ்


More than a Blog Aggregator

by வளர்மதி
நூல் விமர்சனக் கூட்டம்

நாடக வெளி சார்பாக

வெளி ரங்கராஜனின் "நாடகம் நிகழ்வு அழகியல்" நூல் விமர்சனக் கூட்டம்

பங்கு கொள்வோர்:

ந. முத்துசாமி

அ. மங்கை

சங்கர ராமசுப்ரமண்யம்

அம்ஷன்குமார்

வளர்மதி

குமரன்வளவன் (இந்தியா நோஸ்ட்ரம் தியேட்டர்)

பாரவி

உபேந்திரா (நிநாசம், கர்னாடகா)

07.06.2009 ஞாயிறு மாலை 6 மணி

சென்னை மத்திய நூலகக் கட்டிடம்

கருத்தரங்க அறை

அண்ணா சாலை, சென்னை - 02.

தொடர்புக்கு: 9444818922


உள்ளே இருக்கா ஓர் ஒளி ?

  • வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், எழுத வேண்டும் என்ன நினைப்பவரா?

  • 'நல்லாவே எழுதுகிறேன்' என்பதுதான் உங்களைப் பற்றிய உங்கள் கணிப்பா?

  • இளைய தலைமுறையின் முழு ஆற்றலும் இன்னும் வெளிக் கொண்டுவரப்படவில்லை, அதை வெளிக் கொண்டுவர என்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற தவிப்பு உங்களிடம் இருக்கிறதா?

  • சமூகப் பொறுப்புடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கும் ஒரு குழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமுண்டா?

தமிழில் புதிதாகத் துவங்கப்பட உள்ள ஒரு வார இதழில் சென்னையில் இருந்து முழுநேரப் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம் உங்களைப் பற்றிய விவரங்களையும் உங்கள் படைப்புகளில் மிகச் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றையும் எனக்கு மின் அஞ்சல் ( maalan@gmail.com ) செய்யுங்கள்.

இதழியலில் ஆர்வம் உண்டு . ஆனால் அதை என்னால் முழு நேரப் பணியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சென்னைக்குப் பெயர்ந்து வர முடியாது. என் குடும்பச்/பணிச் சூழல் அப்படி. இருந்த இடத்திலிருந்தே ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லுங்கள் என்ற நிலையில் இருப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிவியுங்கள்.

இளைஞர்களுக்கு முன்னுரிமை.

ஒரு வேண்டுகோள்! மீண்டும் ஒரு முறை திருத்தமாக தலைப்பை படித்துவிட்டு வாருங்கள். நகரத்துக்கு அல்ல! நரகத்திற்க்கு!.

என் பிறந்தநாள் கூட பல சமயங்களில் மறந்திருக்கிறேன். பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக நினைவு வரும் அல்லது இரண்டு நாள்கள் கழித்து நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஜூன் 6 மட்டும் சரியாக அந்த நாளே நினைவுக்கு வரும்.

தமிழ்நாட்டில் சிறுநகரங்களுக்கு வேலைக்காக போய், மீண்டும் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய மாதிரி... அப்படி நம்பித்தான் சென்னைக்கும் ரயிலேறினேன். ஒரு உள்ளூணர்வோ, வானில் அசரிரீயோ ஒரு மண்ணாங்கட்டியும் எச்சரிக்கவில்லை. "பெருநகரத்துக்கு போகும் பாதை! ஒரு வழிப்பாதை" என!

சென்னைக்கு என்னுடன் ரயிலேறியவர்கள் இன்னும் இருவர். ஒருவர் தமிழ் இலக்கியம் எம்.ஏ. படிக்க.... இன்னொருவர் பத்திரிக்கைத் துறையில் வேலை செய்ய... வந்தார்கள்.

இலக்கியம் படிக்க வந்தவர்... "இது சாத்தான் ஆள்கிற நகரம். இங்கு வாழ்கிறவர்கள் சாபத்தால் சூழப்பட்டவர்கள். ஓடிப்போய்விடு" என மனித வடிவில் ஒரு தேவதூதனால் எச்சரிக்கப்பட்டு, என்னிடம் கூட அந்த தேவ ரகசியத்தைச் சொல்லாமல் பின்னங்கால் தெறிக்க ஓடிப்போய்விட்டார். இப்பொழுது சொந்த ஊரில் நிம்மதியாக செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் அவர் எழுதிய இரண்டு புத்தகங்களை புத்தக கண்காட்சியில் பார்த்தேன்.

மற்றொருவர்... ஒரு பத்திரிக்கையில் கொஞ்ச காலம் வேலை பார்த்து... செட்டாகாமல்.. ஏதோ "உள்ளூணர்வு" எச்சரித்து, அவரும் சொந்த ஊருக்கு பொட்டியை கட்டி போய்விட்டார்.

மாட்டிக்கொண்டவன் நான் மட்டும். நான் ஆசிர்வாதிக்கப்பட்டவன். அதனால் தான் இந்த
பெருநகர சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது என பெருமகிழ்ச்சி அடைந்தேன். சில ஆண்டு பெருநகர வாழ்க்கையில் தான் அறிந்தேன். நரகத்தை சொர்க்கம் எனவும், சபிக்கப்பட்டிருப்பது தெரியாமல், ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவும் புரிந்திருக்கிறேன்.

இந்த நரகத்திலிருந்து தப்பிக்க.. ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நேற்று ஒரு நண்பன் வந்து... சொந்தவீட்டுகாரகள் வாடகை வீட்டுகாரர்களை படுத்தும்பாடு தாங்கமுடியவில்லை. இந்த தொல்லையிலிருந்து விடுபட... இருவரும் சேர்ந்து இங்கு ஒரு வீடு வாங்கலாமா? என்றான்.

நகரத்தில் வீடா? இவன் சாத்தானின் தூதுவனோ? அவனையே முறைத்துப் பார்த்தேன். வாடகை வீட்டில் இருந்தாலாவது... தப்பித்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையாவது இருக்கும். சொந்த வீடென்றால்... நினைப்பே பாதி ஆயுசை குறைக்கிறது.

இப்பொழுதெல்லாம்.. ஊரிலிருந்து யாரும் சென்னைக்கு பேருந்தோ, ரயிலோ ஏற முனைந்தால்... வராதே! என உறுதியாய் எச்சரித்துவிடுகிறேன். ஏதோ என்னால் முடிந்தது.

கருத்துகள் இல்லை: