(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று கூறுவான். (அல்குர்ஆன்: 14:22)
இரண்டில் இருந்தும் கிட்டத்தட்ட சம அளவான வாசகர்கள் என் தளத்திற்கு வருகை தந்தார்கள். ஆனால் அண்மைக் காலமா பதிவுகளை வெளியிடுவதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது தமிலிஷ். இதற்கு பிறகு என் தளத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்,
tamilmaNam.NET : Tam... [3112]
Blogger: Private [1100]
Tamilish - ... [707]
ஆரம்பத்தில் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் வாசகர்களை அறிமுகம் செய்து வைத்தாலும், இப்போது தமிழ் மனம் 3000 தாண்டி விட்ட நிலையில் தமிலிஷ் வெறும் 707என்ற எண்ணிக்கையிலே இருக்கிறது.
நேற்றைய தினம்தான் என் ஹிட்ஸ் ரேட் பார்த்தேன் , சராசரி ஹிட்ஸ் கிட்டத்தட்ட 35 வீதம் குறைந்து போனது.
அதன் பிறகுதான் அவதானித்தேன், நேற்று தமிலிஷ்யில் இருந்து ஒருவர் கூட என் தளத்திற்கு வருகை தரவில்லை.( நேற்று மூன்று இடுகைகள் இட்டேன்)
இந்தப் பிரச்சனை எனக்கு மட்டும்தானா? அல்லது , மற்றவர்களும் பாதிக்கப் படுகிறீர்களா?
ஏதோ நல்ல விடயத்திற்காக கொண்டுவரப்பட்ட மாற்றம், எங்களைப் போன்ற புதிய பதிவர்களுக்கு தடுமாற்றம் ஆகிப் போனதே.
சில நேரங்களில் அவர்கள் மட்டறுத்தல் என்ற பெயரில் என் சில இடுகைகளை வெளியிடாமலே தடுத்து விட்டார்கள்.
//காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...//
இந்தக் கவிதை கூட தடுக்கப் பட்டது.இந்த இடுகை தடுக்கப் பட வேண்டிய நோக்கம் என்ன?
உங்களுக்கும் இதே பிரச்சனை உள்ளதா ?
சரியான தொழில் நுட்ப வசதி கிடைக்கு வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று தமிலிஷ் அறிவித்திருக்கிறது. எப்போது இந்த வசதி செய்யப்பட்டு இந்த பிரச்சனை தீரும்?
மூன்று லட்சம் தமிழ் பேசும் மக்கள் அனாதைகளாக எந்தச் சாட்சியமுமின்றி ஐம்பதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்த அரச படைகள் புடைசூழ சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற ஒரு சந்ததியையே பயங்கரவாத ஒழிப்பின் பேரால் உருவாக்கிவிட்டு இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அறுபதாண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாமலே தேர்தற்களத்தில் தமது வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டன அரசின் துணைக் கட்சிகள். அடையாளத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் தோற்றுப் போனது மட்டுமல்ல, அந்தத்த் தோல்வி பேரினவாதத்தின் வெற்றியாக, அங்கிகரிக்கப்பட்ட இனப்படுகொலையாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மூன்று லட்சம் தமிழ் பேசும் மக்கள் அனாதைகளாக எந்தச் சாட்சியமுமின்றி ஐம்பதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்த அரச படைகள் புடைசூழ சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற ஒரு சந்ததியையே பயங்கரவாத ஒழிப்பின் பேரால் உருவாக்கிவிட்டு இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அறுபதாண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வும் முன்வைக்கப்படாமலே தேர்தற்களத்தில் தமது வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டன அரசின் துணைக் கட்சிகள். அடையாளத்தின் பேரால் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் தோற்றுப் போனது மட்டுமல்ல, அந்தத்த் தோல்வி பேரினவாதத்தின் வெற்றியாக, அங்கிகரிக்கப்பட்ட இனப்படுகொலையாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜோதிடம் உண்மையா?
வரலாற்றில் தோன்றி மறைகின்ற மன்னர்களைப் பற்றி எப்பவுமே எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஏனெனில் அதற்குரிய யோக்கியதை எந்த மன்னர்களிடமுமே கிடையாது. அந்தக் காலத்து மன்னர்களுக்கு இரண்டே வேலைகள் தான்:
1. இளைத்த மன்னனையடித்துக் கப்பம் வாங்குவது,
2. நினைத்த பெண்களைப் பிடித்து விளையாடுவது,
இத்தகையவர்களை எப்படி யோக்கியர்கள் என்பது? என்று உலக சரித்திரத்தில் நேரு எழுதுகிறார்.
உலகில் எந்த அரசனைத்தான் யோக்கியன் என்ற சொல்வது? எல்லாத் தரும நியாயங்களையும், கற்றுணர்ந்த தருமபுத்திரனே, பெண்சாதியை வைத்துச் சூதாடி விட்டானே! என்று கவி பாரதியார் கேட்கின்றார்.
அந்தக் காலத்து நாடகங்களில் மன்னன் கேட்பானாம். மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? என்று. ஆமாம், நம்ம ஊர்ல மழை பெய்ததா? என்பதையே மந்திரியிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதென்றால் மன்னர்களுக்குக் குடிமகக்கள்மீது எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?
அந்தக் காலத்து மன்னர்கள், மந்திரிகள், பிரதானிகள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், சோதிடர்கள் எனப் பலரைப் பக்கத்துணையாக வைத்துத்தான் ஆட்சி நடத்தினர் இப்போதும் அப்படித்தானே சம்பந்தப்பட்ட துறைக்கு செயலாளர்களை வைத்துத்தானே அரசை நடத்தி வருகின்றனர்.
பிரதமர்கள் - சோதிடர்கள்
இந்திரா காந்தி - பண்டிட் பார்சாய்
பி.வி. நரசிம்மராவ் - என்.கே. சர்மா
எச்.டி. தேவகவுடா - நா. மேட்டுப்பட்டி சங்கரய்யர்
தேவகவுடா தமது பதவி நிலைக்கவும், நீடிக்கவும் வேண்டி ஒரு யாகம் செய்தாராம் சோதிடரை வைத்து. அதில் 20 டன் பலாப்பட்டை, 2250 கிலோ நெய்; 2250 கிலோ தேன், ஜரிகை பட்டுப்புடவை என ரூபாய் 1200 கோடி செலவிட்டராம்; நாட்டைப் பிடித்த கேடு காலத்தைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் எல்லாம் நாட்டுக்குத் தலைவர்களா? உருப்படுமா நாடு? கடைத் தேறவார்களா மக்கள்? சண்டாளக் கடவுளே, தயவு செய்து இருந்தால் காப்பாற்று! இப்போதுதமிழகத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக்கப் போராடும் தமிழக முதல்வரின் (ஜெயலலிதா) சோதிடர் உன்னி-கிருஷ்ணமேனன். இவரது தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவர் இத்தகைய சோதிடர்கள்தானாம்!
சோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி?
1. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனது அண்ணன் மன்மோகன்சிங், உயர்ந்த பதவியைப் பெற்று மேனிலை எய்துவார் என்று ஒரு சோதிடர் கூறினார். அது பலித்து விட்டது என்று பிரதமரின் தங்கை திருமதி அமர்சித் கவுர் என்பவர் கூறினார். (செய்தி 21.4.2004, கதிரவன்) இது பெருமைக்குரிய செய்திதான். டாக்டர் மன்மோகன் சிங் நேர்மையானவர், பல உயர் பதவிகளை வகித்தவர். அவரது தலைமையில் நாடு நலம் பெறும் என நம்பலாம். இது ஜெயித்த சோதிடம்.
2) அடுத்து மிதுன ராசிக்காரரான திருமதி சோனியா காந்தி எதைச் செய்தாலும் வெற்றி பெறுவார் என்று ஆரூடம் கூறியவர் அக்னி சர்மா என்பவர் (ஆதாரம்: 18.4.1999, கல்கி பக்.80).
அண்மைத் தேர்தலில் நாடெல்லாம் சுற்றி காங்கிரசின் வெற்றிக்காகப் பாடுபட்டவர் சோனியாகாந்தி. நாடும் அடுத்த பிரதமர் சோனியாதான் என எதிர்பார்த்தது. ஆனால் இராஜயோகம் திசைமாறிவிட்டது. ஆக சோதிடம் தோற்றது
3) இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டுத் தலைநகரில் செங்குட்டுவனோடிருந்த இளங்கோவடிகள்தான் மன்னராகும் தகுதியுள்ளவர், தெய்வவாக்காகக் கூறினாள் தேவந்திகை என்னும் பணிப் பெண்ணொருத்தி. இதைக் கேட்ட இளங்கோவடிகள் தனது தமையனைத் திருப்திப்படுத்துவதற்காக, இளங்கோவடிகள் இளமைத் துறவியானார். செங்குட்டுவனே மன்னனானான். இங்கேயும் சோதிடம் தோற்றது.
4) இராமாயணத்தில் ராஜரிஷியாகிய வசிட்டன் இராமனுக்குத்தான் பட்டாபிஷேகம் என நாள் குறித்தான்; என்ன நடந்தது? இதுதான் நாடறிந்த கதையாயிற்றே! வசிட்டன் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்க ராமனுக்கோ நாடாள வேண்டிய யோகம் இருந்தது; மாவுரி தரித்துக் காடேகினான் இராமன்! என்னாயிற்று? சோதிடம் தோற்றது.
----------------பொய் சொல்லான்,நானாக்கிணறு -நன்றி:-"விடுதலை" 26-6-2009
ஆக, நல்லதா கெடுதியானதான்னு கேட்கலாம். அல்லது, தீமையானதான்னு கேட்குறதுதான் சரியா இருக்கும். அடுத்து நாடகத் தன்மை?! இதுக்கு உண்டான அர்த்தமே அனர்த்தமாயி, ஒரு தலைப்பு! நாடகத்தன்மை என்பது வாழ்க்கைக்குத் தேவையா? தேவையற்றதா??
என்னங்க ஐயா இது? திடீர்ன்னு ஒரு பெரியவர் வர்றாரு. அதைக் கண்டதும், இவன் எழுந்து நின்னு அடக்கமானவனா இருக்குறது போல பாசாங்கு காமிக்கிறான். இது நாடகமா?
மகனோ, மகளோ எதோ ஒரு தவறான காரியத்தை செய்துடறாங்க. தகப்பன் வந்து கேட்கும் போது, தாயானவ பெற்ற மகனையோ மகளையோ விட்டுக் கொடுக்காம சாக்கு போக்குச் சொல்லி திசை திருப்புறாங்க. இது நாடகமா?
வீதியில அவனோட அம்மணி வர்றதைப் பார்த்ததும், கையிலிருந்த வெண்குழலை வீசிட்டு சிட்டுக் குருவிய வேடிக்கை பாக்குற மாதிரி ஒரு கண்டுபாவனை. இது நாடகமா?
இந்த மாதிரி லெளகீகத்துல நிறைய சின்னச் சின்ன நிகழ்வுகள். இதெல்லாம் நாடகமா? அந்த சின்னச் சின்ன பாவனைகளும், பாசாங்குகளும் நாடகத்தன்மையா?? என்னங்க ஐயா கொடுமையா இருக்கு?? கழிப்பிடத்துக்கு போறான் ஒருத்தன். போகும் போது வெளிய போய்ட்டு கால் கழுவிட்டு வர்றேங்கறான். அப்படி அமங்கலகரமான ஒன்னைச் சொல்லாம, இங்கிதமா மங்கலச் சொல்லைப் பாவிக்கிறான். அது நாடகத்தன்மை ஆயிடுமா??
ஆகாது! ஆகாது!! ஆகாது!!! ஏன்னா நாடகம்ங்ற சொல்லுக்குண்டான பொருளையே குனிய வெச்சுக் கும்மியடிக்கிறமே, அதனாலதான்! பாசாங்கும், கண்டுபாவனையும் வாழ்க்கைக்குத் தேவையானதான்னு விவாதிக்கிறதுதான் சரியானதா இருக்கும்.
அப்ப நாடகம்ன்னா என்ன? குறித்த கால வரையறைக்குள், முதல் நிலையிலிருந்து கடை நிலை வரையிலான அத்தனை நிகழ்வுகளும், காட்சியமைப்புக்கான இலக்கணங்களை உள்ளடக்கி, தேவைப்பட்ட ரூபகங்களின் மேல் ஏற்றிச் செயல்படுத்துவது நாடகம்.
உதாரணமா சொல்லணும்ன்னா, வேலைக்காரி நாடகம். அதற்குண்டான வசனம், காட்சியமைப்பு, ரூபகங்கள் (தோற்றம்) முதலான எல்லாமே முன்கூட்டியே தீர்மானம் செய்தபடி செயல்படுத்துற ஒரு நிகழ்வு. பெரியவர் வர்றதுங்றது, எதிர்பாராத நிகழ்வு. அவரைக் கண்டவுடனே இவன் எழுந்து நிக்கிறது ஒரு பாசாங்கு, அவ்வளவுதான்!
அப்ப, அம்மா வந்த உடனே ஒருத்தன் வயித்து வலி வந்த மாதிரி நடிக்கிறானே? அது கபடநாடகம் ஆகாதா?? முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்திருந்தா, அது நாடகந்தான். ச்சும்மா, பாத்த உடனே இயல்பா அவன் அப்படிச் செய்திருந்தா அது பாசாங்கு காட்டி நடிக்கிற கண்டுபாவனை. அதே போல, போலியா போடுற வணக்கமும் ஒரு கண்டுபாவனைதான்!
"ஆகவே, முன்கூட்டியே திட்டமிட்டுத் தவறான தகவலை வெளிப்படுத்தும் நாடகம் போன்ற செயல் வாழ்க்கைக்குத் தேவையற்றது. இங்கிதம் கடைபிடிப்பது நாகரிகம். போலிப் பாசாங்கும், கண்டுபாவனையும் வாழ்க்கைக்கு அனாவசியமானது" அப்படீன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.
ஏகத்துக்கு எல்லாத்தையும் நாடகத்தன்மைன்னு சொல்லிக் கவுத்துட முடியாது இராசா! இலக்கணமும் தோற்றமும் கலந்து வெளிப்படுத்துறது பத்து வகையான நாடகம். அதெல்லாம் என்னென்ன?? இதெல்லாம் கருவின் தன்மையப் பொறுத்தது. செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம். வலி, சமாதிங்ற அமைதின்னு பத்து வகையான குணங்களை வெச்சி சொல்றது.
ஆமா, இங்கெங்க பிரபலப் பதிவர் வந்தாரு? எனக்கு மனநிறைவில்லாத, உடன்பாடில்லாத இடுகைகள் நிறைய இட்டிருக்காருதான்! ஆனாலும், இந்த போலிப் பாசாங்கு, கண்டுபாவனை இல்லாம மனுசன் பொளந்து கட்டுறாரே? அதெல்லாம் அவர்கிட்ட இருக்குற மாதிரித் தெரியலை. இன்னைக்கு காலையில CNN பார்த்திட்டு இருக்கும் போது, அவரோட நினைவு வந்தது, அதான் இந்த பழமை... மத்தபடி நான் யாரோ! அவர் யாரோ!! அவரோட மனவலிமையப் பார்த்துக் காதுல புகைவிட்டுக்க வேண்டியதுதான் மிச்சம்!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக