சனி, 27 ஜூன், 2009

2009-06-27

இன்றைய சூழ்நிலையில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சீனியர் எஸ்பி ஸ்ரீகாந்த் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் புதுவை சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து உலக போதைப் பொருள் தடுப்பு தினத்தை வில்லியனூர் ஆச்சாரியா கல்வி நிறுவனத்தில் நடத்தியது. இதற்கு ஆச்சாரியா கல்வி குழும தலைவர் அரவிந்தன் தலைமை தாங்க, செஞ்சிலுவை சங்க துணை தலைவர் தெய்வகுஞ்சரி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சீனியர் எஸ்பி ஸ்ரீகாந்த், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனநிலையை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால் மதுவின் தேவை இருக்காதென்றும், பெற்ற தாய்க்கு இறக்கும் தருவாயில் பாலூட்ட வராத மகன் தனது அபிமான நடிகரின் கட் அவுட்டுக்கு பாலூற்றும் கொடுமையான அனுபவங்களை காண முடிகிறதென்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை இயக்குனர் திலிப் குமார் பாலிகா, தற்போதுள்ள 250 மாணவர்களில் 10 புகைக்கும், 5 பேர் மதுவிற்கும் அடிமையாகின்றனர் என்றும், மாணவ பருவத்தில் எந்தவித கெட்டப்பழகத்திற்கும் இடம் கொடுக்க கூடாதென்றார்.
புகைக்க ஆரம்பித்த பிறகு அதனை விடுவது கடினம் என்ற அவர், மது போன்றவற்றை மாணவர்களின் தந்தையர் பயன்படுத்தினால் அவர்களிடம் குழந்தைகள் இதுபோன்ற பழக்கத்தினை விடும்படி அறிவுரை கூறினால் அதனை தந்தை ஏற்றுக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கால்டாக்சி என்பதற்கு தமிழில் என்ன என்று சொல்லுங்களேன். அழைப்பு சிற்றுந்து எனலாமா?

சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.

இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.

சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.

உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.

மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.

நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் வீடியோ கால்கள் என்பது சிறந்ததொரு தொடர்பு கருவியாக விளங்குகிறது, நீங்கள் இதன் வாயிலாக பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை காணவும் முடியும்.

ooVoo மற்றும் skype வாயிலாக நீங்கள் இந்த வசதிகளைப் பெறலாம். ooVoo free version மூலமாக நீங்கள் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை ooVoo கணக்கு வைத்துள்ள உங்கள் நண்பர்களை கட்டணமின்றி தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 தொடர்புகளை ஏற்படுத்தும் வசதி உள்ளது சிறப்பம்சமாகும். உங்களது
வீடியோ சாட்டிங்கை பதிவு செய்யும் வசதியும் உள்ளது, மேலும் 25MB அளவுள்ள கோப்புகளையும் பரிமாறும் வசதி கூடுதல் சிறப்பாகும். இந்த வசதிகள் இலவசமாக
வழங்க படுவதால் விளம்பரதொல்லைகள் அதிகம் இருக்கும்.

oovoo

டொக்.. டொக்… "யாரது?"  கேட்டபடியே கதவைத் திறந்த வேதாந்தம் "அட முத்து!!! நானே ஆபீஸ் விட்டு இப்பத்தான் வீட்டுக்குள் நுழைந்தேன்." "தெரியும் வேதாந்தம் சார்.. தெருக்கோடியில் சைக்கிளில் நீங்க வந்துகொண்டிருந்ததைப் பார்த்துட்டுத்தான் நான் வந்தேன்.  என்ன இன்னிக்கி இவ்வளவு லேட்? தினமும் 6 மணிக்கே வீட்டில் இருக்கும் நீங்க இன்னிக்கி  8 மணிக்கு வந்திருக்கீங்க?"
டொக்.. டொக்… "யாரது?"  கேட்டபடியே கதவைத் திறந்த வேதாந்தம் "அட முத்து!!! நானே ஆபீஸ் விட்டு இப்பத்தான் வீட்டுக்குள் நுழைந்தேன்." "தெரியும் வேதாந்தம் சார்.. தெருக்கோடியில் சைக்கிளில் நீங்க வந்துகொண்டிருந்ததைப் பார்த்துட்டுத்தான் நான் வந்தேன்.  என்ன இன்னிக்கி இவ்வளவு லேட்? தினமும் 6 மணிக்கே வீட்டில் இருக்கும் நீங்க இன்னிக்கி  8 மணிக்கு வந்திருக்கீங்க?"


இரண்டாவது கற்பனை கதை

அது ஒரு சிறு கிராமம்

அங்குள்ள மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கும் அருகில் உள்ள நகரங்களுக்கு செல்வதற்கும் பல வருடங்களாக நடந்தே சென்று வந்தனர்.

அதன் பிற்கு மாட்டுவண்டியும், குதிரை வண்டியும் வந்தது

பிறகு மிதிவண்டி, TVS 50, Spendour, அவசரத்திற்கு டாக்ஸி என்று வந்த காலக்கட்டதில் அந்த ஊருக்கு பேருந்து சேவை (பஸ் சர்வீஸ்) வந்தது

அதை ஆரம்பித்தவர் ஜிம்மி என்பதால் அதை நாம் ஜிம்மி பஸ் என்றே அழைப்போம்

ஆரம்பத்தில் யாரும் ஜிம்மி பஸ்ஸை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல படிப்படியாக அதில் பலரும் ஏறி செல்ல ஆரம்பித்தார்கள்

அந்த பேரூந்தை பயன்படுத்து ஆட்கள் கூட கூட அந்த பேருந்தில் விதிகள் உருவாக்கப்பட்டன. அதில் பல விதிகளை உருவாக்கியவர்கள் ஏற்கனவே அதில் செல்லபவர்கள்தான்

அந்த பேரூந்தில் நெடுநாட்களாக செல்பவர்கள் மற்றும் அடிக்கடி செல்பவர்கள் தங்களுக்கு என்று சிறப்பு வசதிகளை உருவாக்கி கொண்டனர்

உதாரணமாக சில இடங்களில் "துண்டு போட" ஆரம்பித்தனர். அதாவது நீங்களோ நானோ ஜிம்மி பஸ்ஸில் முதலில் ஏறினாலும் அந்த இடத்தில் உட்கார முடியாது. அப்படியான சிறப்பு சலுகைகள் அடிக்கடி பயணிப்பவர்கள் மற்றும் முதலிருந்தே பயணிப்பவர்களுக்கு வழங்கப்பட்டன

அந்த அடிக்கடி பயனிப்பவர்களிலேயே மிகவும் அதிகம் முறை பயணிப்பவர்களுக்கு மேலும் சில சலுகைகள் உருவாக்கப்பட்டன. ஆதாவது அவர்கள் பேரூந்து நிலையத்திற்கே வரவேண்டாம் அவர்களது வீட்டு வாசலிலேயே பேருந்து நிற்கும் ஏறிக்கொள்ளலாம்

அதே போல் நகரிலும் அவர்களது அலுவலகத்திற்கு முன்னாலேயே இறங்கிக்கொள்ளலாம்

ஆனால் சாதாரண பயணிகளோ பேரூந்தி நிலையத்தில் தான் வந்து ஏற வேண்டும். பேருந்து நிலையத்தில் தான் வந்து இறங்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் ஏறினாலும் துண்டு போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர முடியாது. நின்று கொண்டு தான் செல்லுமிடம் கடைசி வரை பிரயாணம் செய்ய வேண்டும் ஆனால் சலுகை உள்ளவர்களோ கடைசி நேரத்தில் வந்தாலும் "ராயலாக" அமர்ந்து கொள்ளலாம்

முதலில் ஒரிரு முறையே ஜிம்மி பஸ்ஸில் சென்றவர்கள் இதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவர்களும் அடிக்கடி பயணம் செய்ய ஆரம்பிக்கவும், இது போல் சிலருக்கு தனி சலுகை வழங்கப்படுவதை கண்டு மனதிற்குள் குமுறினார்கள்

அதன் பிறகு தான் அவர்களுக்கே ஒரு விஷயம் புரிந்தது. 40 – 50 பேர் ஏறினால் தான் இந்த பேருந்து தொடர்ந்து ஓடும். அதாவது இந்த பேரூந்து சேவை தொடர்ந்து நடப்பதற்கு அனைவரின் பங்களிப்பும் தேவை. மற்றவர்கள் பயன் படுத்த வில்லை என்றால் பேரூந்து நிர்வாகம் அந்த சேவையை இழுத்து மூடி விட்டு சென்று விடும். இந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் முதலிலேயே பயணம் செய்தனர் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு அளவிற்கு அதிகமான சலுகைகளை அனுபவிப்பது ஏன், அது நியாயமா என்ற கேள்விகள் எழுந்தன.

அந்த நேரம் தான் அந்த ஊரில் உள்ள களத்துமேட்டுக்காரர் "ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள ஜிம்மி பஸ்ஸை ஏன் நான் ஆதரிப்பதில்லை" என்றூ ஒரு பிரச்சனையை கிளப்பினார்

–தொடரும்

பின்குறிப்பு : மற்றொரு கற்பனை கதை http://www.ularal.com/ஒரு-கற்பனை-கதை/ உள்ளது

No tags for this post.

Related posts

  • No related posts.

கருத்துகள் இல்லை: