சனி, 27 ஜூன், 2009

2009-06-27

இஸ்லாம் சம்பிரதாயங்களை பார்த்தால் அது பாலை நிலத்துக்கும்,யுத்த காலத்துக்கும் ஏற்றவகையில் அமைந்திருப்பதை உணரலாம். உதாரணமாக: ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம். பாலை நிலத்திலென்றால் சூரிய வெப்பம் காரணமாய் கிருமிகள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பாலைவனத்தில் ஒரு காரவான் (பிரயாணிகள் கூட்டம்) கடந்து சென்றால் மற்றொரு காரவான் வர மாதமாகலாம், இரண்டு மாதமாகலாம். இன்று ? சென்னை போன்ற கான்க்ரீட் காட்டில் ?

முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான். அன்று,பாலை நிலத்தில் வெஜ் உணவுகள் கிடைப்பது துர்லபம் எனவே மாமிச உணவு அனுமதிக்கப்பட்டது. இன்று ?

மேலுமொரு உதாரணம்: முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.
பெண்கள் புர்கா அணிவதும், கோஷாவாக இருப்பதும் எதிரிகள் குறித்த அச்சத்தால் தான் (அது யுத்த காலம் என்பதால் இந்த ஏற்பாடு) மேலும் பாலை நிலத்தில் சூரிய வெப்பம், அதை பிரதிபலிக்கும் மணல்வெளி காரணமாக பெண்களின் முகம் பொலிவிழந்து போகுமென்பதாலும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம்.

ஆனால் இன்றுள்ள பொல்யூஷனுக்கு இந்து பெண்களும் புர்கா அணிவது பாதுகாப்போ என்னவோ?

தமது டிப்பாசிட்டுகள் மீதான வங்கி வட்டியை கூட தனியே கணக்கிட்டு வருடம் ஒருமுறை தானம் செய்யும் முசல்மான்கள் உண்டு. ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது. முஸ்லீமாக பிறந்தவன் இறைவனை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க கூடாது என்பதால் தான் வந்தேமாதரம் பாடுவதை கூட அந்த காலத்தில் தவிர்த்தனர். ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.

மேலும் மதச்சார்ப்பற்ற தன்மை என்ற பெயரால் கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தலும் ,ஆஞ்சனேயர் தாயத்து தரிப்பதையும் காணமுடிகிறது. தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்

நான் முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக்கொள்வது ஒன்றே அந்த யுத்தகாலத்துக்கேற்ற வகையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை இன்றும் பின்பற்றுவது தேவையா ? என்று யோசியுங்கள். பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள். பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள். இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?

இறைவனுக்கும், பக்தனுக்குமிடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை. நாம் பேசுவதை இறைவன் கேட்கிறான். இறைவன் சொல்லை நமக்கு சேர விடாமல் செய்வது இடைத்தரகர்களும், அகந்தையும் தான். எனவே அகந்தையை கைவிடுவோம்.( நாம் சரி மற்றவர்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம்) இடைத்தரகர்களின் சூழ்ச்சியை சூட்சும புத்தியுடன் சிந்தித்து செயல்படுவோம்.

இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின்பற்றப்படுமேயானால் இந்த பூமியில் வேறு மதங்களே இருக்காது !
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 6 அவளைச் சந்திக்கும்போது முடிவொன்றைக் கேட்டுவிடுவதுதான் என்ற தீர்மானத்துடன் ஒரு முறை கோட்டை பாதுகாப்புக்களைப் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றான் உதயகுமரன். இனி...
விரைந்து மருத்துவமனைக்கு வந்தவளை, அந்த பெரிய மருத்துவமனையில் அவ்வளவு எளிதாக உள்ளே விடாமல் ஆயிரம் கேள்விக்கணைகள். அதற்குள் ராஜ் விரைந்து வந்தார். தன் அத்தானுக்கு சிறுநீரக கோளாறு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் ஐசியு-வில் அட்மிட் செய்திருப்பதாகவும் சொல்லி உள்ளே அழைத்து சென்றான். பக்கத்து அறையில் அவர் அக்கா. நல்ல நாளில் பேச மாட்டாரே. இப்ப ஆறுதலுக்கு பெண்கள் யாருமில்லை. என்ன செய்வது ஒரே குழப்பம் மலருக்கு. கணவன் பின்னாலேயே சென்று அமைதியாக நின்றாள்.
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 7 பொருத்தமான ஜோடியைத்தான் தெரிந்திருக்கிறாள் என்றார்கள். பிடித்தாலும் புளியம்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறாள் என்றார்கள். இந்தப்பேச்சுக்கள் வைத்திலிங்கம் பிள்ளையின் காதிலும் விழத் தொடங்கின. இனி....

transnational1மூன்று லட்சம் தமிழ் பேசும் மக்கள் அனாதைகளாக எந்தச் சாட்சியமுமின்றி ஐம்பதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்த அரச படைகள் புடைசூழ சிறை வைக்கப்பட்டுள்ளனர். அங்கவீனமுற்ற ஒரு சந்ததியையே பயங்கரவாத ஒழிப்பின் பேரால் உருவாக்கிவிட்டு இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.இலங்கைத் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடத்தப்பட்ட போதெல்லாம் தெருவுக்கு வந்து போர்க்குரல் கொடுத்தவர்கள் தான் தமிழ் நாட்டுமக்கள். 1983 இல் இலங்கையில் இனப்படுகொலை ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த போது நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் நாடே செயலிழந்து போயிருந்தது.

வணக்கம் கண்ணுகளா! பொருளாதார மந்தம், கடுமையான வேலைவாய்ப்பின்மை... இது எதுல போயி முடியும்? மென்பொருள்க் கட்டமைப்புல எந்த நெளிவு சுழிவுகளுக்கு சுலுவுல வேலை கிடைக்கும்? இப்பிடிப் பல கேள்விக நம்மளைச் சுத்தியுமு...

இந்த சூழ்நிலையிலதாங்க, தொழில் செயல்முறையாக்க மென்பொருளுக்கு (Business Process Management) சந்தையில இருக்குற அபரிதமான வளர்ச்சி, அது சம்பந்தமான வேலைவாய்ப்புகள் பெருக்கம், இதெல்லாம் மகிழ்வான விசயம். நாம அதுலதான கடந்த மூனு ஆண்டுகளா பொழப்பை ஓட்டிட்டு வர்றோம். உண்மையிலேயே நல்ல நிலையை நோக்கிப் போயிட்டு இருக்குற துறைதாங்க இது.

இங்கதாங்க, ஒரு கவன ஈர்ப்புத் தகவல்! இன்றைய சூழல்ல, Pega - PRPCங்ற மென்பொருளுக்கு ஏக மவுசு, சந்தையில படு கிராக்கி, அந்தத் துறையில அதான் முதல் இடத்துல இருக்கு. ஆகவே, நம்மூர்ல இருந்து நிறையப் பேரு அந்த மென்பொருள் பாவிக்கிறது எப்படின்னு தெரிஞ்சிட்டு இங்க வர்றாங்க. வந்து அவங்க நடத்துற பட்டயத் தேர்வுல தேர்ச்சி பெற்றதாகவும் உபசங்கார(resume)த்துல குறிப்பிடுறாங்க.

இவ்வளவு நாள் பெருசா அதை யாரும் கண்டுகிடலை. பாருங்க, போனவாரத்துல நிறைய பேர்த்தை ஆய்வு செய்ததுல வெறும் 2 பேர்தான் உண்மையாலுமே அந்த certification, pass ஆகி இருக்காங்க. மத்தவங்க எல்லாம் ச்சும்மாவே தேர்ச்சி பெற்றதா போட்டுகிட்டாங்க. ஆக அவங்க first name, last namesystemல பதிஞ்சாச்சு. இனி அவங்க அந்தத் தேர்வுல கலந்துக்க முடியுமா? இஃகிஃகி!

அதனால certified PRPC System Architectனு, ச்சும்மா ச்சும்மா கொல்டிகளை மாதர நீங்களும் போட்டுடாதீங்க என்ன? அது ஒன்னும் பெரிய IAS தேர்வு கிடையாது. நம்ம சனங்களுக்கு அது நெம்பச் சுலுவு இராசா, நெம்பச் சுலுவு!

அடுத்து? அண்ணே, அட்லாண்டாவுல Fetna ஆண்டு விழா நடக்குறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நான் நுழைவுச் சீட்டு வாங்காமத் தவறிட்டேன் கண்ணுகளா! நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவுச் சீட்டுக்குப் பதியாம விட்டுட்டேன். அவ்வ்வ்வ்... தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா! உங்களுக்கு சித்த புண்ணியமாப் போகும்!! மக்களே என்னோட விபரப் பட்டையில இருக்குற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்க... நன்றி உடையவனாயிருப்பேன்!

கருத்துகள் இல்லை: