புதன், 10 ஜூன், 2009

2009-06-10

மாற்றங்களுடன் கூடிய மீள்பதிவு

இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார்.

1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படி என்றால் இன்னும் புதிது புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதிப்பு உண்டா?
இல்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை !!!
அப்படி பொருள்பட நான் எழுதவில்லை. இன்னும் அதிகம் மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ்) வேண்டும்
அதைவிட அதிகம் சிறப்பு மருத்துவர்கள் வேண்டும்.

எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் எம்.பி.பி.எஸ் இருக்கைகள் / இடங்கள் இருப்பதல்ல. அதற்கு காரணம் போதுமான அளவு பட்ட மேற்படிப்பு இடங்கள் இல்லாததால்

2. மேற்கண்ட காரணத்தால் புதிய கல்லூரிகள் திறப்பைத் தாமதப்படுத்தினால், அது ஓரிரு மதிப்பெண் குறைவினால் மருத்துவப் படிப்பைப் படிக்க இயலாமல் போகும் மாணவர்களுக்கு இழப்பு தானே? ஆர்வமும் நியாயமான தகுதியும் உள்ளவர்கள் படிக்கச் செய்ய வேண்டும் தானே? இல்லை, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துவது தவறா? வேலை கிடைக்குமா என்ற கண்ணோட்டத்தை அரசு வேலை, தமிழ்நாட்டுக்குள் வேலை என்பதற்குள் தான் அடக்க வேண்டுமா? பிற மாநில, நாட்டு வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
நான் மேலே கூறியுள்ள பதில் படி, இன்னமும் அதிகம் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.

அதே போல் தற்பொழுது உள்ள மருத்துவக்கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகப்படுத்தப்படவேண்டும்.

பிற நாடுகளில் வேலைவாய்ப்பு இருந்தாலுல் நுழைவது சிரமம் என்று கேள்விப்பட்டேன்.

3. மென்பொருள் துறை வளர்ச்சி, பொறியியில் கல்வி நாட்டம் காரணமாக, ஆகச் சிறந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் நாட்டம் குறைந்து வருவதாகச் சொல்லப் படும் போக்கு பற்றி?
உண்மை

இப்படி ஆகச் சிறந்த மாணவர்கள் விடுத்துச் செல்வதால் பெரிய இழப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?
ஆகச்சிறந்த மாணவர்கள் பொருளாதார காரணங்களினால் விடுத்துச்செல்வதால் இழப்புதான்

மருத்துவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள், வசதிகள் வரா நிலையில் வருங்காலத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேரா நிலை வரக்கூடுமா?
நான் இந்த இடுகைத்தொடரின் முதல் பதிவில் கூறியபடி, இந்த நிலை நீடித்தால் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மூன்றாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.

அதாவது கடந்த முப்பது வருடங்களாகத்தான் மூன்றாவது பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறி மருத்துவம் என்பது மேட்டுக்குடியினரின் படிப்பு (விமான ஓட்டி படிப்பு போல்) ஆகி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது

இல்லை, தமிழ்நாட்டு மாணவர்கள் சேரா நிலையிலும் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இடங்களை ஒதுக்க இயலுமா?
தமிழ் நாட்டில் சேருவதற்கு முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்

பிற மாநிலங்களில் இன்னும் மருத்துவப் படிப்பு மோகம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..இல்லை, இந்தியா எங்கும் மோகம் குறைந்து வருகிறதா?
பிற மாநிலங்களில் (வட மாநிலங்களில்) மருத்துவப்படிப்பு என்பது இன்னமும் மேட்டுக்குடியினரின் படிப்பாகத்தான் இருக்கிறது.எனவே மோகம் இருக்கிறது. தமிழகத்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரிடம் தான் மோகம் குறைகிறதே தவிர மேட்டுக்குடியினரின் மோகம் குறையவில்லை

இந்த வருடம் (2009) நடுத்தர வர்க்கத்தில் இருந்து கூட மருத்துவகல்லூரிக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் !!

4. இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் எப்படி இருக்கிறது? இந்தியாவில் மருத்துவப் படிப்புக்குச் சிறந்த இடங்கள் எவை?
தமிழக மருத்துவக்கல்லூரிகளின் தரம் சிறப்பாகவே இருக்கிறது.

5. மேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் பற்றாக்குறை என்றால், ஏன் அந்த படிப்புக்கான இடங்களைக் கூட்டக் கூடாது? திரும்பவும் ஆசிரியர், வளங்கள் போதாமை தான் காரணமா?
ஆசிரியர் , வளங்கள் என்ற அளவில் நாம் போதுமான அளவு இருந்தாலும், உள்கட்டமைப்பில் சில சின்ன விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக நூலகங்களில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு சஞ்சிகைகள் போன்ற படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

இதற்கு காரணம் என்ன வென்றால் பட்ட மேற்படிப்பில் 5 இடங்கள் கூடியிருக்கிறது என்பது (புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பது போல்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இல்லாமல் இருப்பதுதான்

6. MBBS, மேற்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் இடையே ஊதிய விகிதங்கள் எவ்வாறு வேறுபடுகிறது?
எம்.பி.பி.எஸ் பொறுத்த வரை தனியாரை விட (சுமார் 8,000 முதல் 15,000 வரை) அரசில் அதிகம் சம்பளம்

ஆனால் மேற்படிப்பு படுத்தால் தமிழக அரசில் வெறும் 2 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும் தான் (அதாவது 275 x 2)

அதற்கு மேல் சிறப்பு படிப்பு படித்தாலும் எந்த ஊதிய உயர்வும் கிடையாது :( :(

உதாரணமாக

5 வருட அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர்

தனியார் - சுமார் 15,000
மத்திய அரசு - சுமார் 35000
மாநில அரசு - சுமார் 22000

5 வருட அனுபவம் உள்ள எம்.டி மருத்துவர்

தனியார் - சுமார் 35,000
மத்திய அரசு - சுமார் 45000
மாநில அரசு - சுமார் 24000

5 வருட அனுபவம் உள்ள டி.எம் மருத்துவர்

தனியார் - சுமார் 1,00,000
மத்திய அரசு - சுமார் 50000
மாநில அரசு - சுமார் 24000

இப்பொழுது தெரிகிறதா, ஏன் தமிழக அரசு பணியில் சேர சிறப்பு மருத்துவர்கள் வருவதில்லை, ஆனால் தேவைக்கு அதிகமாக எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் வருகிறார்கள்

மிகச் சிறந்த நிபுணருக்கு தனியாரில் கூடுதல் ஊதியம் கிடைக்கலாமாக இருக்கும்.
பதில் மேலே

ஆனால், இன்று மேற்படிப்பு முடித்து வரும் ஒருவருக்குத் தனியார், அரசு இடையே வேலைவாய்ப்பு, ஊதிய விகித வேறுபாடு என்ன?
பதில் மேலே

தனியார் அளவு இல்லாவிட்டாலும் மத்திய அரசு அளவிற்காவது ஊதியம் உயர்த்தப்படவேண்டும்

அரசை விடுத்து தனியாரை நாடுவதற்கு ஊதியம் தவிர்த்த பிற காரணங்கள் உளவா?
கண்டிப்பாக
01. வரையறுக்கப்பட்ட பணி நேரம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு 99 முதல் 123 மணி வரை நேரம் (வேலை இல்லாத நேரம் என்பது வாரத்திற்கு 45 மணி நேரம் மட்டுமே)
02. தொடர்ந்து 33 மணி நேரம் பணி கிடையாது. (முந்தைய பதிவின் பின்னூட்டத்தை பார்க்கவும்)
03. ஞாயிறு விடுப்பு உண்டு
04. கடைநிலை ஊழியர் உங்களின் பெயரை சொல்லி லஞ்சம் வாங்க மாட்டார்
05. அதை நீங்கள் தட்டி கேட்டால் கொலை மிரட்டல் வராது


06. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை மிரட்ட மாட்டார்கள்
07. மாற்றல் இருக்காது
08. அதிகம் வேலை செய்தால் அதிகம் ஊதியம் கிடைக்கும்
09. நோயாளிக்கு மட்டும் வைத்தியம் பார்த்தால் போதும்
10. சட்டம் சார் வழக்குகளுக்காக (மெடிக்கோ லீகல் ) நீதிமன்றம் போக வேண்டாம் (எந்த ஊர் நீதிமன்றம் என்றாலும் கை காசை செலவழித்துதான் போக வேண்டும்)
11. பல்ஸ் போலியோ என்று 2 வாரம் தூக்கத்தை தொலைத்து அலைய வேண்டாம்
12. உட்காருவதற்கு நல்ல நாற்காலி இருக்கும்.
13. குடும்ப நல அறுவைசிகிச்சை, வருமுன் காப்போம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு போன்ற எந்த திட்டமும் கிடையாது
14. பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அதன் பின் அதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்களை கேட்டால் இன்னும் நிறைய சொல்வார்கள்

7. BDS பல் மருத்துவம் முடித்த தோழிகள் சிலர் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு எல்லாம் வேலை பார்த்தார்கள் !! (பொறியியல் மாணவர்கள் சிலரும் இந்தச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதுண்டு) MBBS மாணவர்களை விட இவர்களின் நிலை கவலைக்கிடமோ என்று தோன்றியது.
கண்டிப்பாக. அதற்கு காரணம் இத்துறை குறித்து இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாததே.

நேற்று எங்கள் வீட்டில் துணி துவைக்கும் பொறி பழுதடைந்து விட்டது. உத்தரவாதகாலம் (வார்த்தை புரியாவிட்டால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) முடிந்துவிட்டது. வாங்கிய கடைக்கு தொலைபேசியதில் பழுது நீக்கும் பொறியாளர் வந்து சோதித்து விட்டு, பரிசோதனை கட்டணம் 350 ரூபாய் கேட்டார். அதன் பின் வடிகட்டி (பில்டர்) மாற்ற ரூபாய் 550 செலவானது. கணினி பழுது நீக்குபவர்கள் வீட்டிற்கு வந்தால் 250 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. (இதனால் தான் பலரும் கணினியில் பிரச்சனை என்றால் கணினி அறிவு உள்ள நண்பர்களை அழைத்து ஒரு காப்பியுடன் முடித்து விடுவது வேறு விஷயம் :) :) )

MBBS அல்லா, BDS, physiotherapy படிப்புகள், இவற்றில் தனியார் கல்லூரிகளின் பெருக்கம், அவற்றின் தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து உங்கள் பார்வை என்ன?
உங்கள் இல்லத்தில் யாராவது பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலியக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தால் 350 ரூபாய் கேட்டால் தருவீர்களா ??

அல்லது பேச்சு குறைபாடு உள்ள குழந்தைக்கு பேச்சு பிறழ்வு சிகிச்சை நிபுனர் (ஸ்பீச் தெரபிஸ்ட்) ஒரு முறை வைத்தியம் பார்க்க 350 வாங்கினால் அடுத்த முறை கூப்பிடுவீர்களா.

இன்று எங்கள் வீட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஒருவன் இருந்தால் அவன் எந்த துறையை தேர்ந்தெடுப்பான்.


இந்த தொடரின் அடுத்த இடுகைகள்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை : செய்தி வெளியீடு எண்.237 நாள்.14.5.2009

பத்திரிக்கை செய்தி

இதய நோய் உள்ளவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் "லெனாக்ஸின்" என்ற மாத்திரைக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சில நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த மருந்து "டிஜாக்ஸின்" என்ற மூல மருந்துப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தாகும். ஒரு தயாரிப்பாளர் இந்த மருந்தினை "டிக்ஸின்" என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் இந்த "லெனாக்ஸின்" மற்றும் "டிக்ஸின்" மாத்திரைகள் தேவையான அளவு மருந்து தயாரிப்பாளர்களின் மொத்த விற்பனையாளர்களிடம் கையிருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் அனைத்து மருந்து கிடங்குகளிலும் டிஜாக்ஸின் மாத்திரை போதிய அளவில் கையிருப்பு உள்ளது. இந்த மருந்து, மருத்துவ சேவை கழகத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதய நோய் உள்ளவர்கள் இந்த மருந்து தேவையெனில், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் மருந்துக் கடைகளில் இம்மருந்தினை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இம்மருந்து இருப்பு குறித்து அவ்வப்போது தகவல் பெற விரும்புவோர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்குநர், சென்னை-6 அலுவலகத்தை தொலைபேசி எண் 044-24321830-ஐ தொடர்பு கொண்டும் அல்லது மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருந்து தகவல் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை (Drug Information and PharmacoVigilance Center) தொலைபேசி எண் 044-24338421-ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம்.

செய்தித் தாள்களில் வெளிவந்துள்ள செய்திகளின்படி, தமிழ்நாட்டில் "லெனாக்ஸின்" மற்றும் "டிக்ஸின்" மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் தற்போது இல்லை.

ஒம்/..
திரு வி. கே. சுப்புராஜ் இ.ஆ.ப.,
முதன்மைச் செயலர்,
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை.

நான்கு த.தே. கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களின் விடுமுறைகாலத்தினை நீடிப்பதற்கு இலங்கை பாராளமன்றம் மறுத்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்களான எஸ்.கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன, எஸ் .ஜெயானந்தமூர்த்தி, மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த பல மாதங்களாக வெளிநாடுகளின் தங்கியுள்ளனர். இவர்களின் விடுமுறையினை நீடிப்பதற்கான அனுமதியினை ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் கோரியபோது அதனை ஏற்பதற்கு பாராளமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் குறிப்பிட்ட திகதிற்குள் பாராளமன்றத்திற்கு சமுகம் கொடுக்காது விடும் பட்சத்தில் இவர்களின் பாராளமன்ற பதவி பறிபோகலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இலங்கையில் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைள் மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்தவாறு உதவிய நபர்களை உடனடியாக கைது செய்து, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு வெளிவிவகார அமைச்சு சகல நாடுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை இயக்கி வந்த சிலர் மிக விரைவில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவரென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்த தகவல்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் அந்த நபர்கள் தங்கியுள்ள நாடுகளில், அவர்களை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப இவ்வாறான நபர்கள் உறுப்பு நாடுகளில் இருந்தால், அவர்களை கைதுசெய்து ஒப்படைப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை எனவும் போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு உதவிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச காவற்துறையின் உதவியும் கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும், நிதியுதவியையும் வழங்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முடக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த வேலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் போகொல்லாகம கூறியுள்ளார்.

இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை இயக்கி வந்த சில முக்கிய புள்ளிகள் மிக விரைவில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மேற்கே உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் நேற்று காலை 9.00 மணியளவில் 6 புலிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் 3 ஆண்களும் 3 பெண்களும்
அடங்குகின்றனர்.

இராசரத்தினம் நிர்மலரூபன் வயது 30
சுப்ரமணியம் சத்தியசீலன் வயது 24
வசந்தராஜா வயது 21
ராஜேந்திரன் மணோசீலா வயது 24
கணேசலிங்கம் கார்த்திகா வயது 20
சிதம்பரநாதன் மேகலா வயது 20


சரணடைந்த புலிகள் தமது ஆயுதங்களை மறைவிடம் ஒன்றில் வைத்துவிட்டு படை முகாமிற்கு நேரடியாக சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வளங்கிய தகவல்களின் அடிப்படையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.


More than a Blog Aggregator

by வலசு - வேலணை
அன்புடையீர்!

நித்தம்நித்தம் இவ்வாழ்க்கை
நித்தியமென்ற நினைவினில்
நாளிகைகளைக் கழித்தவொரு
விடுமுறைப் பொழுதினில்,
மரணதேவன் எனை
அரவணைக்கவிருப்பதை
அறிவித்துச் சென்றான்.

இன்றோ, நாளையோ,
நாளை மறுநாளோ,
இல்லை இன்னும்சில
யுகங்கள் கழித்தோ
எனக்கான மரணம்
நிச்சயிக்கப்பட்டு விட்டது.

அரவம் கொத்தியோ, இல்லை
கொத்துக் குண்டுகளால் சிதறுண்டோ
என் அரவம் இல்லாமல் போகலாம்.

காக்கிச்சட்டைக் கைதினாலோ, இல்லை
வெள்ளைவான் கடத்தலினாலோ
நான் காணாமல் போகப்படலாம்.

பன்றிக் காய்ச்சலிலோ, இல்லை
பறவைக் காய்ச்சலிலோ
படடென்றென்னாவி பறிக்கப்படலாம்.

யாருக்குத் தெரியும்? இல்லை
இப்படியில்லை என்றொருமுறையில்
நான் இறந்துவிட்டிருக்கலாம்.

எது எப்படியோ எனக்கான
உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு
அதிர்ஷ்டவசமாய் முன்கூட்டியே
அறிவிக்கப் பட்டிருக்கிறது.

செத்துவிடமுன் செய்துவிடவேண்டியவை
சித்தத்தில் சிந்தனையாய் சீறியெழுகிறது.
காலம் போதுமோ? ஞாலம் தாங்குமோ?

புவியெனக்கிட்ட கடைமைகளை
நிறைவாகச் செய்வேனோ? -இல்லை
செவிகேளா மனிதனாய்க்
குறைகேட்டு நிற்பேனோ?

புண்படுத்திய உள்ளங்களை
மயிலிறகாற் தொடுவேனோ?-பின்
பண்பட்ட அவர்மனதால்
மன்னிப்பைப் பெறுவேனோ?

சத்தியமாய்ச் சொல்கிறேன்,
என்ன நடக்குமென்றோ
எது நடக்குமென்றோ
நடுக்கமில்லை எனக்கு.

இறப்பின் அழைப்பினை
ஏற்றுக் கொண்டதனால்
அழைப்பு விடுக்கிறேன்
அன்புடையீரே!

எப்போதேனும் ஒருதடவையிதை
நீங்கள் வாசிக்கும் கணத்தினில்
காலனுடன் நான்
கைகுலுக்கிக் கொண்டிருக்கக்கூடும்.

அப்போது உங்களுக்கெல்லாம்
அழைப்பனுப்பிக்கொண்டிருப்பது சாத்தியமில்லை.
ஆதலினால், இத்தால் சகலமானவரும்
இவ்வழைப்பை ஏற்றுக்கொள்வீர்களாக!

கருத்துகள் இல்லை: