புதன், 10 ஜூன், 2009

2009-06-10


'ஃபோர்பஸ்' வார இதழ், 2009ஆம் ஆண்டின் 1000 கோடிஸ்வரர்கள் வரிசையில் ஒரு புதிய வரவு. இவர்(ன்!!?? - சரி. இவர்னே போடுவோம், எதுக்கு வம்பு) தலைக்கு அமெரிக்க அரசு நிர்னயித்துள்ள தொகை, 5 மில்லியன் டாலர்கள். பத்தாதுக்கு 'டைம்' வார இதழ் 2009இன் ஆண்டின் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் 6-வது இடம் கொடுத்துள்ள்து. 'எல் சேப்போ' என்று அழைக்கப்படும் 52 வயதாகும் 'ஜோகுவின் கஸ்மேன்', பாப்லோ எஸ்கோபாரைக் காட்டிலும் அமெரிக்காவிற்கு பெரிய திருகுவலி. காரணம் இவனால் கடந்த ஆண்டு மெக்ஸிகோ, அமெரிக்க எல்லையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்கள் அத்தனை பேரும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். 100, 200 கிலோ என்று இவன் கடத்துவதில்லை. 1993ஆம் ஆண்டு அரிசோனாவில் இவனால் கடத்தப் பட்ட போது பிடிபட்ட கொகைனின் அளவு 7.3 டன்.


1957 - ஆம் ஆண்டு பிறந்த கஸ்மேன், தொழில் பழகியது 'மிகுவெல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கெலார்டோ'விடம். 'தி காட்ஃபாதர்' என்று அழைக்கப்பட்ட கெலார்டோ 80களில் மெக்ஸிகோ போதை மருந்து சந்தையின் ஜாம்பவனாகத் திகழ்ந்தான். 1989ஆம் ஆண்டு பிடிபட்ட கெலார்டோ, சிறையில் இருந்த போதும், தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நடத்தி இருக்கிறான். கெலார்டோ காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டு இருந்தான் கஸ்மேன். (ஒரு உவமைக்கு சொல்றேன். கண்டுக்காதீங்க). 90களின் ஆரம்பத்தில் கெலார்டோ அதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப் பட்டவுடன் தன் ராஜாங்கத்தை நடத்த ஆரம்பித்தான். அதன் பெயர் தான் 'சினலோவா கார்டல்' (Sinaloa Cartel).

கஸ்மேன் சரக்கைக் கடத்தும் விதமே வித்தியாசமானது. மெக்ஸிகோ -அமெரிக்க எல்லையில் அமைந்து இருக்கும் மலைக் குகைகளைக் குடைந்து அந்த டன்னல்கள் வழியாக கடத்துவான். இந்த ஆண்டு வெளி வந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படம் பார்த்தீர்களா. இவனுடைய இந்த உத்தியை தான் உபயோகித்து இருந்தனர். 

1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் 'ஜாலிஸ்கோ' விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கஸ்மேனை, அவனுடைய எதிர் கும்பலான 'டிஜூவானா கார்டல்' சுட்டு தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அப்போது கஸ்மேனுக்கு பதில் உயிர் இழந்தது, மெக்ஸிகோ மக்களால் நேசிக்கப்பட்ட கார்டினல் 'ஜான் ஜெஸுஸ் போஸ்டாஸ் - ஒகாம்போ'. 

1993 மே மாதம் அவனுடைய 7.3 டன் கொகைன் கடத்தல் முறியடிக்கப்பட்ட மறு மாதம், மெக்ஸிகோவில் கைது செய்யப் பட்டான். அவனுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 2001ஆம் ஆண்டு அவன் மேல் அமெரிக்காவில் உள்ள வழக்குகள் பற்றி விசாரிப்பதற்காக அதிக பாதுகாப்பு உள்ள மெக்ஸிகோவின் 'ஜாலிஸ்கோ' சிறையில் இருந்து மாற்றப்படும் போது தப்பினான். அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்...
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பதில்கள்
கோபமில்லாத நிலையே சக்தி என்று சொல்கிறார் மகாகவி.அப்படியொரு நிலை உண்டா?
நிச்சயமாக உண்டு. கோபம் உள்ளுக்குள் எழும் போதே உற்று கவனிக்கிற பொழுது கோபம் மெல்ல கிழிந்து உள்ளேயே சுருண்டு விடுகிறது. அது நம்முடைய கைக்கு அகப்பட்டு மிகச் சரியான அளவில் ,எந்த வித பழி வாங்கும் உணர்ச்சியும் கொந்தளிப்பும் இல்லாமல் ,எதிராளிக்கு புரிய வேண்டுமே என்ற அளவிற்கு கோபம் காட்டப்படுகிறது. அந்த மாதிரி கோபத்தில் காதலும் இருக்கிறது.

எதற்காக மலை மீது கோவில்கள் வைக்கிறார்கள்?
அப்பொழுதுதான் நீங்கள் மலையேறி அதன் உச்சிக்குப் போவீர்கள். மலையின் உச்சிக்குப் போனால்தான் பூமியின் பெரும்பரப்பும், அதில் நீங்கள் சாதாரண ஒரு புள்ளி என்பதும் உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் வீட்டுத் திண்ணையில் வெறும் லுங்கி கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் உங்களை மிகப் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் உடல் பருமனையே உங்கள் வீரம் என்று கருதுவீர்கள். நீங்களே பிரம்மாண்டமானவர் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்திய சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விசயமும் உங்களை உங்களுக்கு உணர்த்தத்தான் முயற்சி செய்கிறது. அப்படி உணர்த்தியும் மனிதர்கள் கர்வத்தில் குதிப்பது ஆச்சர்யமான விஷயம்.

வாழ்க்கை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அடுத்தடுத்து அதிகம் வேலைகள் இருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்த பிறகு அடுத்த வேலைக்கு பறந்து பறந்து ஓட வேண்டும். ஓய்வு நேரத்தை ஓய்வுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஓய்வு எடுத்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும் என்ற நிர்ப்பந்தம் ஏற்ப்பட வேண்டும். வேலை செய்து முடித்த பிறகு உடனே ஆழ்ந்து தூங்கும் படியாய் அசதி வேண்டும். இது இல்லாமல் , அடுத்தபடி என்னால் செய்ய வேண்டும் என்று தெரியாமல் , இந்த நாள் பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் வெறும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதும் , எதிர் வீட்டுக்காரரோடு வம்படித்துக் கொண்டிருப்பதும், வெறும் கற்பனையில் ஈடுபட்டு காலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதும் மிகக் கேவலமான விஷயங்கள். என் வாழ்க்கை இப்படி அமைந்து விடலாகாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.இடைவிடாது வேலை செய்வதைத்தான் வாழ்க்கையின் அற்புதமான விஷயமென்று நான் கருதுகிறேன்

எதையும் முயற்சிக்கும் முன்பு , இது நம்மால் முடியுமா என்கிற தயக்கம் என்னை தடை செய்கிறது. என்ன செய்வது?
வெற்றி பெற வேண்டும் என்ற எதிபார்ப்பு இருந்தால் , இந்தக் குழப்பம் வரும். இறங்கி முழு மூச்சை முயற்சிப்போம். தோல்வியானாலும் பரவாயில்லை என்று இறங்கி விடவேண்டும். தோல்வி ஒரு அனுபவமென்று கொள்ள வேண்டும். தோல்வியை நன்று ஆராய வேண்டும்.மறுபடியும் ஜெயிக்க வெறியோடு உழைக்க வேண்டும்.ஒரு தோல்வியை வெற்றியாக மாற்றிய பிறகு இந்த பயம் அறவே போய்விடும்.


`


More than a Blog Aggregator

by மேடேஸ்வரன்
விழிக் கோடியில் ஒரு துளி நீரும்
அடிமனதில் படபடப்பும்
சொல்லவொணா உணர்வுகளும்

சொல்லியே ஆக வேண்டிய வார்த்தைகளும்
ஒன்றோடொன்று போட்டி போட
நாம் பிரிந்த அன்று ஒன்றுமே பேசவில்லை.
ஒன்றுமே பேசாததால்
ஒன்று விடாமல் பேசினோம்.

-2000 ஆம் ஆண்டு டைரியிலிருந்து .


More than a Blog Aggregator

by மேடேஸ்வரன்
ஏன் தத்துவவாதிகள் கடவுளை நம்புவதில்லை?
தத்துவத்துக்கு கடவுள் தேவையில்லை. விஞ்ஞானம் முடிவடையும் புள்ளியில் தத்துவம் துவங்குகிறது.
ஒரு முறை கடவுள் ஒரு தத்துவ அறிஞரின் எதிரே வந்து நின்றார்.
" நான் தான் கடவுள். நல்லது ,கேட்டது எல்லாவற்றிற்கும் அடிப்படையானவன் ".

" அப்படியா...சரி..எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் சொல்வதால் ஒரு விஷயம் நல்லது ஆகிறதா? அல்லது , அது நல்லது என்பதால் நீங்கள் அப்படி சொல்கிறீர்களா?"
"நான்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்றேனே! நான் சொல்வதால் தான் ஒன்று நல்லதாகிறது!"
"அப்படியென்றால் ஒரு குழந்தையைச் சித்ரவதை செய்வது என்பது ' நல்லதுதான்' என்று நீங்கள் சொல்வதால் நல்லதாகிவிட முடியுமா?"
கடவுளுக்கு கோபம் வந்தது. தத்துவவாதி தொடர்ந்தார்.
"அது நல்லது இல்லை. ஆகவே தான் நீங்களும் அது நல்லது இல்லை என்கிறீர்கள்! இது எனக்கே தெரியுமே. நீங்கள் எதற்கு?"
கடவுள் மறைந்து விடுகிறார்.

- மதன் கேள்வி- பதில்
நன்றி: ஆனந்த விகடன்
சாளரத்தின் அருகே அமர்ந்த பயணத்தில், 
விமானமாய், கப்பலாய் தோற்றமளித்து 
நெருங்க நெருங்க உருமாறும்
அந்த வீட்டைப் போல, 

உன்னை நெருங்க நெருங்க
அர்த்தங்கள் மாற்றிக் கொடுக்கும் 
உன் முக பாவங்களை
நான் என்னவென்று சொல்லுவது?

மொழியை நெருங்கும் போதுதான் 
அதன் புதிர்கள் மறையுமாம்,
சூரியனை நெருங்கிச் செல்லும்போதுதான் 
வால்தோன்றுமாம் எரிகல்லுக்கு,

தோன்றியும் மறைந்தும் 
புரிந்தும் புரியாமலும் 
இருக்கும் புதிர்கள் என்முன்னே - நீ
என்னருகில் இருக்கும்போது மட்டும். 
சாளரத்தின் அருகே அமர்ந்த பயணத்தில், 
விமானமாய், கப்பலாய் தோற்றமளித்து 
நெருங்க நெருங்க உருமாறும்
அந்த வீட்டைப் போல, 

உன்னை நெருங்க நெருங்க
அர்த்தங்கள் மாற்றிக் கொடுக்கும் 
உன் முக பாவங்களை
நான் என்னவென்று சொல்லுவது?

மொழியை நெருங்கும் போதுதான் 
அதன் புதிர்கள் மறையுமாம்,
சூரியனை நெருங்கிச் செல்லும்போதுதான் 
வால்தோன்றுமாம் எரிகல்லுக்கு,

தோன்றியும் மறைந்தும் 
புரிந்தும் புரியாமலும் 
இருக்கும் புதிர்கள் என்முன்னே - நீ
என்னருகில் இருக்கும்போது மட்டும். 

கருத்துகள் இல்லை: