செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16



என்னுள் தொலைந்துபோன‌
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்

நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்

நீயோ நிற‌ங்க‌ளுக்கு வாச‌னை உண்டென
என‌து நாசித்துவார‌த்தை க‌ட‌க்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நிற‌ங்க‌ளை ம‌றுக்கிறேன்

இறுதியில் எதுவும் இல்லையென‌
நீயும் க‌ட‌க்கிறாய்
நானோ க‌ட‌த்த‌லே பொய்யென‌
அதையும் க‌ட‌க்கிறேன்


என்னுள் தொலைந்துபோன‌
பாதையில் நீயும் நானும்
வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சாத்தப்படும் கதவுகளுக்கு அப்பால்
எப்போதும் மர்மப் புன்னகை ஒலியை
சலிக்காமல் உதிர்க்கிறாய்
நானோ கதவுகள் பொய்யென்று
மௌனமாய் கடக்கிறேன்

நீயோ புன்னகை ஒலியை
நிறங்களாய் மாற்றி கதவுகளை
அலங்கரிக்கிறாய்
நானோ நிறங்களும் பொய்யென்று
கதவுகளையும் கடக்கிறேன்

நீயோ நிற‌ங்க‌ளுக்கு வாச‌னை உண்டென
என‌து நாசித்துவார‌த்தை க‌ட‌க்கிறாய்
நானோ மூச்சும் பொய்யென்று
நிற‌ங்க‌ளை ம‌றுக்கிறேன்

இறுதியில் எதுவும் இல்லையென‌
நீயும் க‌ட‌க்கிறாய்
நானோ க‌ட‌த்த‌லே பொய்யென‌
அதையும் க‌ட‌க்கிறேன்


More than a Blog Aggregator

by வேல்பாண்டி
நான் பிறந்து வளர்ந்தது சென்னை நகரம். இனையத்தில் ஒரு blog-ஐ உருவாக்க பல நாட்க்களாக ஆசை. அது இன்று ஈடேறியது.


More than a Blog Aggregator

by சி.கருணாகரசு
துணிக்கடை பொம்மை
சேலையில் !
தொடைத்தெரிய உடுத்தியவள்
சாலையில் !
வெட்கப்பட்டது பொம்மை _இது
நாகரிக உலகின் உண்மை .

வீடியோ- டியனன்மன் வசந்தத்தின் இடி முழக்கத்தை நினைவு கூறுவோம்

வீடியோ- டியனன்மன் வசந்தத்தின் இடி முழக்கத்தை நினைவு கூறுவோம்

கருத்துகள் இல்லை: