வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

வவுனியா, நெலுங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இம் மூவரும் இச் சம்பவத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மக்களின் ஆரவாரமான வரவேற்பிற்கு மத்தியில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏ-9 தரைவழிப் பாதையின் ஊடாக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ்.மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியான அமைச்சர் ஒருவர் கொழும்பிலிருந்து தரைவழிப் பாதையாக யாழ்ப்பாணம் சென்றடைந்த முதலாவது வரலாற்றுப் பதிவு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து தனது வாகனத்தின் மூலம் பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவிலுள்ள தமது பணிமனையில் அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வவுனியாவைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் அவருடன் கலந்துரையாடி எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் தமது ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கித் தமது பயணத்தினை ஆரம்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏ-9 பாதையிலுள்ள முக்கிய இடங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் அந்தப் பிரதேசப் படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட அப்பகுதிகளில் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இன்று நண்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சுப் பணிமனையினை வந்தடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு தமது தேவைகள் மற்றும் கோரிக்கைகளுடன் வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பிரபாகரன் செத்துப்போன பின்பு அவரின் சாவு தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரரென, மே, 22ம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது என புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவு பொறுப்பாளர்ரென தன்னைக்கூறிக் கொள்ளும் கதிர்காமத்தம்பி அறிவழகன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்த போது இதை புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபன் முதலில் மறுத்தார். மறுநாள் கொல்லப்பட்ட பிரபாகரன் உடலை இலங்கை ராணுவம் காட்டியது. இதற்கு பின்பும் பத்மநாபன் மறுப்பு தெரிவித்தார். வேறு ஒருவர் உடலை காட்டி பிரபாகரன் என்று கூறுவதாக புலிகள் தரப்பில் செய்திகளும் ஆய்வுகளும் பல வெளிவந்தன.

சில வாரங்களின் பின்பு, செல்வராசா பத்மநாபன் பேட்டி ஒன்றில் பிரபாகரன் இறந்து விட்டதை ஒத்துக்கொண்டார். ஆனால் இதற்கு புலிகளின் இணைய தளமான தமிழ்நெட்டில் மறுப்பு தெரிவித்து இருந்தது. புலிகளுக்கு சர்வதேச விவகார பொறுப்பாளர் பத்மநாபன் 17-ந் தேதி நடந்த போரில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக புலிகள் உளவுத்துறை தமிழ் நெட்டிடம் கூறியுள்ள தகவலில் புலிகள் தலைமையிடம் இருந்து உரிய ஆதார தகவல் வரும்வரை எதுவும் கூற முடியாது.

புலனாய்வுத்துறையின் சர்வதேச பொறுப்பாளர் அறிவழகன் கொடுத்துள்ள தகவல்படி பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். பிரபாகரன் இறந்ததற்கான உறுதியான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை என தமிழ்நெட் மேலும் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கதிர்காமத்தம்பி அறிவழகன் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கையில், எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது எனத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் படையினரிடம் சரணடைந்து பொலிசாரின் விசாரணையில் உள்ள புலிகளின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் தாயா மாஸ்ரர், புலிகள் சில தமிழ் இளைஞர்களை கொல்வதை தான் நேரில் கண்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

புலிகள் தமக்கென சட்டதிட்டங்களை இயற்றி வைத்திருந்ததன் மூலம் இவ்வாறான பல கொலைகளைப் புரிந்துள்ளனர். சில இளைஞர்கள் ஒரு யுவதியை இடையூறு செய்த குற்றத்திற்கு இவ்வாறான பாரிய தண்டனையை வழங்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: