வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

சிங்கள அரசு தான் உன் எதிரி. சிங்கள மக்கள் அல்ல. இந்த வேறுபாட்டை எப்போதாவது உன் வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? தமிழனை, முஸ்லீமைக் கூட, எதிரியாக்கியவன் அல்லவா நீ. ஏன் உன் சிந்தனை, நடைமுறை எல்லாம் அதுவாகவே இருந்தது. அதைத்தான் தேசியத்தின் பெயரில் புலித் தேசியம் உனக்கு, உன் சிந்தனையாக ஊட்டியது.

துரோகிகள், கைக்கூலிகள், ஒட்டுக்குழுக்கள் மக்களின் எதிரியான சிங்கள அரசுடன் கூடி நிற்கின்றானே ஒழிய, உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் அல்ல. நீ ஏன் உன்னைப் போன்ற சிங்கள மக்களுடன் நிற்க முடியாது!?

இதைப் புரிந்து கொள்ளாத மூடனாய்,.......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

அ.தி.மு.க.வுக்கும் எனக்கும் இனி தொடர்பு இல்லை; எஸ்.வி.சேகர் அறிவிப்பு

svshekar-with-guard.jpg

அ.தி.மு.க.வுக்கும் எனக்கும் இனி தொடர்பு இல்லை. அதே சமயம் நான் அ.தி.மு.க. விட்டு விலகவில்லை என்று எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., கூறினார்.

சட்டசபை வளாகத்தில் இன்று நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

”நேற்று சட்டசபையில் நடந்த பிரச்னையை தொடர்ந்து எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் எனக்கு பாதுகாப்புக்காக வருகிறார். சட்டசபை வெளிநடப்பு செய்வதற்கான இடம் அல்ல. அப்படி செய்வது மக்களுக்கு செய்யும் துரோகம்.

நான் அ.தி.மு.க. விட்டு விலகவில்லை. என்றாலும் எனக்கும் அந்த கட்சிக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. சார்பில் எனக்கு எந்த தகவல்களும் சொல்லப்படுவது இல்லை. இது பற்றி கட்சி மேலிடத்தில் 16 முறை புகார் செய்து விட்டேன். எந்த பலனும் இல்லை.

எனவே இனி எந்த புகாரும் செய்யவும் எண்ணம் இல்லை. நான் எம்.எல்.ஏ.ஆக தொடர்ந்து நீடிப்பேன். வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன்.

நான் சட்டப்படி நடக்கிறேன். எனவே நான் கட்சி மாறவேண்டிய அவசியம் இல்லை. அகில இந்திய ஆரியர் முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை தொடங்குவது குறித்து யோசனை இருந்து வருகிறது. முற்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு பெற இந்த கட்சியை தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசினேன்.

அப்போது பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அல்லது முற்பட்ட சமுதாயத்துக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கு 25 லட்சம் ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்கும். நான் கட்சி தொடங்கும் அவசியம் இருக்காது” என்று எஸ்.வி.சேகர் கூறினார்.


புதிதாக இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பெருகியுள்ள அகதிகளின் எண்ணிக்கை காரணமாக இவ்வருட மத்தியிலேயே உலகம் முழுதும் உள்ள மொத்த அகதிகளின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட அதிகரிக்கும் வாய்ப்பு பெருகி விட்டது என்றும் இதுவே முக்கிய பூகோள சிக்கலாகத் தற்போது உருவெடுத்துள்ளதாகவும் ஐ.நாவின் அகதிகள் முகவர் பிரிவு தெரிவித்துள்ளது.அகதிகளுக்கான ஐ.நா இன் உயரதிகாரி அந்தோனியோ கட்டெரிஸ் செய்தி வெளியிடுகையில் இன்று சற்றும் தளர்வில்லாத உள்நாட்டு பிரச்சனைகள் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கி வருவதைத் தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே என்று கூறுகிறார்.

மேலும் வாசிக்க...

ஒரு மாதிரியாக T20 உலக கிண்ணம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த இரண்டு வாரத்தில் கிரிக்கெட் உலகில் தான் எத்தனை மாற்றங்கள்.

கிண்ணத்தை எதிர்பார்த்து வந்த பாண்டிங் அண்ட் கம்பெனி ஒரு மாட்சிலும் வெற்றி பெற முடியாமல் போனது, இந்த முறை கலக்குவார் என எதிர் பார்க்கப்பட்ட சைமோண்ட்ஸ் சீக்கிரமாகவே நாடு திரும்பினது, ஹாட் favorites ஆக இருந்த இந்தியா பங்களாதேஷ், அயர்லாந்து மட்ச்களில் மட்டும் வெற்றி. யாரும் எதிர் பார்காத அயர்லாந்து இரண்டாம் சுற்றுக்கு வந்தது. இதுவரையில் இந்தியர்கள் தலையில் தூக்கி வைத்து இருந்த தோனியை எல்லா இந்தியர்களும் சகட்டு மேனிக்கு விளாசுவது, எல்லாரும் முதல் சுற்றிலே வெளியேறும் என எதிர்பார்த்த பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரை இறுதி வரை வந்தது . இப்படி என்னவெல்லாமோ நடக்குது.

நான் இந்தமுறை அரை இறுதிக்கு வந்த அணிகளை நம்ம நடிகர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன். நன்றாகவே இருந்தது,அதை உங்களுக்கும் சொல்லுகிறேன், உங்களுக்கு பிடிச்சது என்றால் ஒரு ஓட்டை போட்டுட்டு போங்கள், இல்லை பிடிக்கலைனாலும் ஒரு ஓட்டை போட்டுட்டு போங்கள்.


ஹீ ஹீ

கமலஹாசன் - சவுத் ஆப்ரிக்கா
எல்லா விசயத்திலும் பெர்பெக்ட். ஆனால் எப்பவுமே முதல் இடத்துக்கு வர முடியாது.

விக்ரம் - ஸ்ரீ லங்கா
வித்தியாசமான முயற்சிகள். போராட்ட குணம், விட்டுகொடுகாத மனபான்மை.


அஜித் - பாகிஸ்தான்

"எப்ப வெல்லுவாங்க எப்ப தோப்பாங்க" அவங்களுக்கே தெரியாது.

அர்ஜுன் - வெஸ்ட் இண்டீஸ்

எப்பவுமே அடிச்சி தூள் பண்ணுறது தான் இவங்களுக்கு பிடிக்கும். அதுவும் ஸ்டைல் ஆக. சும்மா லொட்டு லொட்டு என தட்டுறது இவங்களுக்கு அறவே பிடிக்காது. வெற்றிகள் குறைவு என்றாலும், எல்லாருக்கும் பிடிக்கும்.

தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, பெருங்காயம், பருப்புகள், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடைசியில், அடுப்பை தணித்துக் கொண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து வதக்கி, சற்று ஆறியவுடன் அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இதில் மேலும் சற்று நீரைச் சேர்த்து, தளர சட்னியாகவும் செய்யலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாற நன்றாயிருக்கும்.

கவனிக்க: தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். தேங்காயைத் தவிர்த்தும் இந்த துவையலைச் செய்யலாம். தேங்காய் உபயோகிக்காவிட்டால், பருப்பு வகைகளைச் சற்று கூடுதலாக போடவும்.

தேங்காய், பருப்பு எதுவுமில்லாமல், வெறும் உப்பு, புளி, மிளகாயுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்தும் செய்யலாம். இந்த வகை சற்று கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆனால் உடலுக்கு மிகவும் நல்லது.

இந்தியாவின் தலையிடாக் கொள்கைக்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு
[ புதன்கிழமை, 17 யூன் 2009, 04:51.48 PM GMT +05:30 ]இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடாத இந்தியாவின் உறுதியான கொள்கையினை இலங்கை அரசாங்கம் பாராட்டுகின்றது. இதற்கு உரிய நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது என்று ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் நிராகரித்தமையானது இலங்கை அரசாங்கம் மீதான இந்தியாவின் நம்பிக்கையையே வெளிக்காட்டியுள்ளது என்றும் அமைச்சர் சொன்னார். 

ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: