வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18


இலங்கை அரசாங்கம் ஜெனீவா உடன்படிக்கையின் அடிப்படையில் செயற்படவேண்டும்: சர்வதேச ஜூரி சபை கோரிக்கை
[ புதன்கிழமை, 17 யூன் 2009, 07:12.21 AM GMT +05:30 ]இலங்கை அரசாங்கம், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள மக்களை ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் நடத்த வேண்டும் என சர்வதேச ஜுரிமார் சபை கோரியுள்ளது.

இந்த முகாம்களில் 3 இலட்சம் மக்கள் தங்கியுள்ளார்கள். அவர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் உள்ளார்கள்.

இந்த நிலையில், போர்க் கைதிகள் என்ற அடிப்படையிலான ஜெனீவா உடன்படிக்கையின் கீழ், இந்த முகாமில் உள்ளவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என ஜுரிமார் சபை கோரியுள்ளது.

இந்த விடயத்தில் பொது நலவாய நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனவும் ஜுரிமார் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சீனா மற்றும் ரஷ்ய வாக்குகளால் இந்த விடயம் குறித்த செய்திகள் முன்னிலை பெறவில்லை. இதன் காரணமாக, இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் பொது மக்களை பலாத்காரமாக முகாம்களில் வைத்திருக்க முடிந்துள்ளதாக ஜுரிமார் சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டமைக்காக பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானி இராப்போசன விருந்தொன்றை வழங்கியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இவ்விருந்துபசாரத்தில் பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் விமானப்படைத் தளபதியுமான ஏர் வைஷ் மார்ஷல் ஜயலத் வீரக்கொடியும் அவரது பாரியாரும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர். இவ்விருந்துபசார நிகழ்வில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கயானி கருத்துத் தெரிவிக்கையில்,
    .    ஐ.நா. அரசசார்பற்ற தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலைச் சம்பவம் உட்பட விடுதலைப்புலிகளுடனான மோதலின்போது, இடம்பெற்ற உரிமை மீறல்கள், குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்திருக்கின்றது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தற்போது உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கலைக்கப்பட்டிருப்பது குறித்து பான் கீ மூன் கூறுவது என்ன? இவ்வாறு நியூயோர்க்கில் ஐ.நா.விலுள்ள [...]
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை : எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


More than a Blog Aggregator

by நான் இலங்கைத் தமிழன்

பிரான்சில் நடைபெற்ற நீதிக்கான ஒன்றுகூடல்
[ வியாழக்கிழமை, 18 யூன் 2009, 02:18.17 AM GMT +05:30 ]

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நீதிக்கான ஒன்றுகூடல் 17.06.2009  புதன் கிழமை 14.00  மணிக்கு பிரான்சின் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது.  

சிறிலங்கா அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து பாரிய மனிதப்பேரவலத்தை ஏற்படுத்திவிட்டு தொடர்ந்து பல இலட்சம் மக்களை அடிமைகளாக வதை முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது.

சரியான பராமரிப்புக்கள் இன்றியும், உணவு, மருத்துவ வசதிகள் இன்றியும் பாரிய நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து வரும் மக்கள் தமது முழுமையான சுதந்திரத்தையும் பறி கொடுத்து விட்டு ஏதிலிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும்,

தமிழ் மக்களின் இன்றைய நிலையில் சர்வதேசம் நடுநிலையோடு தலையிட்டு மக்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும்,

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வு உறுதிப்படத்தப்பட வேண்டும் எனவும்,

பிரான்சு அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒன்றுகூடலில் கூடியிருந்த மக்கள் கேட்டுக்கொண்ட அதேவேளை சிறப்பு உரைகளும் இடம்பெற்றன.






கருத்துகள் இல்லை: