| சுவிஸில் இடம்பெற்ற கவனயீர்ப்பும், மனு கையளிப்பும் |
பிற்பகல் 14.30 மணிக்கு ஊடகவியலாளர் கனக ரவி அவர்கள் தாயகத்தில் இறந்த மக்கள், போராளிகள், தளபதிகள் ஆகியோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அகவணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றது. சரியாக 15.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகிய இடமான Landsgemeindeplatz, 6300 சுக் எனும் இடத்திலிருந்து மக்கள் ஊர்வலமாகச் சென்று 15.30 மணிக்கு சுக் நாடாளுமன்றத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு சமூகமளித்திருந்த நாடாளுமன்ற நிர்வாக அதிகாரி Rolf Iten ஊடாக சுக் மாநிலத்தின் 7 அமைச்சர்களுக்கும் மனு கையளிக்கப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பினரால் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
இறுதியாக மீண்டும் ஆரம்பித்த இடத்துக்குச் சென்ற மக்கள் ஊடகவியலாளர் கனகரவி அவர்களின் உரையுடன் சரியாக 16.30 மணிக்கு வீடு திரும்பினர்.

| முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? - ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் பணிப்பு |
அவசரகாலச் சட்டத்தை காரணம் காட்டி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக அந்த மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியே அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, யாழ். மாவட்ட கட்டளை அதிகாரி, இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் சுதந்திரமான நடமாட்டம் மற்றும் தொழில் புரிவதற்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டு வருவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சங்கமம் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பரிசை பெற்றுக்கொள்ள எனி இந்தியனுக்கு இன்று காலை சென்றிருந்தேன். கடைக்கு செல்லும் முன் இணையத்திலேயே தேடிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறிய பட்டியல் தயாரித்தேன்.

கபாடபுரம் - நா.பா
பாற்கடல் (அல்லது) அபிதா - லா.ச.ரா
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
கனவுத் தொழிற்சாலை - சுஜாதா
மோகமுள் - தி.ஜா
இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்
தேவதேவனின் புத்தகம் ஏதேனுமொன்று (தமிழினி பதிப்பகம்)
ஆத்மாநாம் படைப்புகள்
யாருமற்ற நிழல் - தேவதச்சன்
வனம் புகுதல் - கலாப்ரியா
விக்கிரமாதித்யன் கவிதைகள்
இரா.முருகனின் புத்தகமொன்று (நர்சிம்மின் பரிந்துரை)
இவை யாவும் இணையத்தில் 'Available' என்றே இருந்தது. ஆயிரம் ரூபாய்க்கான புத்தகங்கள் என்ற வார்த்தைகளின் போதையில் மயங்கி மீத விதிமுறையை படிக்கத் தவறிவிட்டது ஒன்றும் பெரிய இழப்பாகிவிடவில்லை. கடையில் விசாரித்தபோது இவற்றில் பெரும்பாலானவை இல்லை என்றார்கள். மேலும், பரிசுக்குரியவை எனி இந்தியன் பதிப்பகத்தின் வெளியீடுகளே அன்றி வேறில்லை என்றும் தெரிவித்தனர். எது எப்படியோ, புத்தகக் கடைக்கு சென்று வேர்த்து விறுவிறுத்து பெண்கள் ஜவுளிக்கடையில் எடுத்துக்கொள்வதைப்போல் நேரம் செலவிட்டு ஆத்ம திருப்தியுடன் தேர்ந்தெடுத்து முடித்தேன். பாதி எழுத்தாளர்களின் பெயர்களே தெரியாதென்றாலும் சுவாரசியமானவையாகவே தென்பட்டது. மேலும், இந்த சந்தர்ப்பத்தில் இலக்கிய பரப்பை ஆழ அறியும் பொருட்டு தேர்ந்தெடுத்தவையேயாகும்.
நதியின் கரையில் - பாவண்ணன்
இலக்கிய உரையாடல்கள் - ஜெ.மோ / சூத்ரதாரி
யூமா வசுகி முதல் சமுத்திரம் வரை - வெங்கட் சாமிநாதன்
அமெரிக்காவில் ஜெயகாந்தன் - ந.முருகானந்தம் (தொகுப்பாசிரியர்)
ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப்பார்வை - ஜெ.மோ
எதிர்காலம் என்று ஒன்று - கோபால் ராஜாராம் (தொகுப்பாசிரியர்)
விசும்பு - ஜெ.மோ
ஞானரதத்தில் ஜெயகாந்தன் - வே.சபாநாயகம்
இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் - அரவக்கோண்
உயிர்த்தலம் - ஆபீதன்
தானம் கொடுத்த மாட்டைத் தான் பல்லைப் பிடித்து பார்க்கக்கூடாதென்பர். இது சன்மானமல்லவா? எதுவாக இருந்தாலும், நம்மையே எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். ஆடிக்கழிவு மாதிரி இரண்டு வரிசைகளில் மட்டுமே இருந்தவற்றில் எடுத்துக்கொள் என்பது நியாயமான பரிசாகப்படவில்லை. இருநூற்றைம்பது ரூபாய்க்கேனும் விருப்பத்துக்குரிய ஒரே புத்தகம் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் கூட தேவலை. நான் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களில் தத்தி என்பதால் புத்தகங்கள் தான் எப்படியாயிருந்தாலும் எடுத்துக்கொண்டிருப்பேன், வேறு சாய்ஸ் இருந்திருந்தாலும். எனி இந்தியனிலும் இணையதளத்தை உடனுக்குடன் அப்டேட் செய்தால் பரவாயில்லை. கூட காசு கொடுத்து வாங்க எண்ணியவையும் கிட்டாமல், தி.நகரின் மற்றொரு முக்கிலிருக்கும் நியூ புக்லேண்டில் சுஜாதா, பாலகுமாரன், ஆத்மாநாம், வண்ணதாசன் (இன்னொரு கேலிச்சித்திரம்), குகை.மா.புகழேந்தி ஆகியோரின் புத்தகங்கள் வாங்கினேன்.
எனிவே, இந்நூல்களை வாசித்திருப்பின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். செமஸ்டரைக் கடத்த வேண்டும். மீண்டும் எனி இந்தியனுக்கும், சங்கமத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். :D <3
_____________________________________________________________________

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக