வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18

கர்நாடக மாநிலத்தை தலைமையாக கொண்டு செயல்படும், ராம்சேனா அமைப்பின் நிறுவன தலைவர் பிரமோத் முத்தாலிக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை. அவர்களுக்கு மறுவாழ்வும் அளிக்கவில்லை. இதை இந்திய அரசு கவனத்தில் எடுத்து இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். சிங்கள ராணுவத்தால் இடிக்கப்பட்ட 469 கோயில்களை மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும். இல்லையேல் இந்து மக்கள் கட்சியுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இலங்கையில் நிம்மதியாக இருக்க முடியவில்லை பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்: இலங்கை அகதிகள் : விடுதலைப் புலிகளுடனான போர் ஓய்ந்த பிறகும் கூட தமிழர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தமிழ்ப் பெண்கள் தொடர்ந்து சரமாரியாக கற்பழிக்கப்படுகின்றனர் என்று இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகள் குமுறலுடன் கூறியுள்ளனர். இலங்கையில் போர் முடிந்தாலும் கூட ராணுவத்தினரின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை என்பதால் தொடர்ந்து அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றிற்கான தேர்தல்களில் ஓரணியில் போட்டியிட விருந்த முக்கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் சின்னம் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக அறியவந்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ்க் கூட்டணி (முக்கூட்டணி) ஒரே சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தது. முக்கூட்டணியின் "குத்துவிளக்கு" சின்னத்தில் போட்டியிட அக்கட்சிகள் முன்னர் இணங்கியிருந்தன.

கருத்துகள் இல்லை: